
கோவை குறிச்சி குளம் தூர்வாரும் பணி துவக்க விழா
தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய நீராதாரங்களின் நிலையும் மிகவும் கவலை அளிப்பதாகவே உள்ளன. இதற்கு கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான குறிச்சி குளமும் விதிவிலக்கல்ல. இந்த குளத்தை மீட்டெடுக்கும் பணியில் குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் முயற்சியெடுக்க, அப்பணியில் தற்போது தமிழக அரசு, என்.எல்.சி.இந்தியா மற்றும் ஈஷா யோகா மையம் ஆகியவையும் இணைந்துள்ளன. சத்குரு கலந்து கொண்ட இதன் துவக்கவிழா ஜுலை 23ம் தேதி நடைபெற்றது.