Nammalvar

நகர்ப்புற பள்ளிகளில் இயற்கை விழிப்புணர்வு சாத்தியமா?, Nagarppura palligalil iyarkai vizhippunarvu sathiyama?

நகர்ப்புற பள்ளிகளில் இயற்கை விழிப்புணர்வு சாத்தியமா?

நாகரீக உலகில் மனிதன் இயற்கையை விட்டு விலகி வாழ்வது குறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் கேட்டபோது, குழந்தைப் பருவத்திலிருந்தே இயற்கை குறித்த விழிப்புணர்வு கொண்டுவருவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சத்குரு, வகுப்பறைகள் கூட இயற்கையோடு இயைந்தபடி அமைய வேண்டுமென்ற தனது விருப்பத்தை தெரிவிக்கிறார்!

‘மூன்றாவது கண்’ உண்மையில் என்ன?, Moonravathu kan - unmaiyil enna?

‘மூன்றாவது கண்’ உண்மையில் என்ன?

ஆன்மீகத்தை முழுமையாய் புரிந்துகொள்வதற்கு சத்குருவின் விளக்கத்தைக் கேட்கும் இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்களிடம், ஆன்மீகம் எந்த அளவிற்கு எளிமையானது என்பதை சத்குரு எடுத்துரைக்கிறார். மூன்றாவது கண் திறப்பது என்றால் என்ன என்பதையும், ஒருவர் ஆன்மீகம் உணர்வதற்கு அவரிடம் இருக்க வேண்டியது என்ன என்பதையும் வீடியோவில் அறியமுடிகிறது!

காற்றையும் நீரையும் பாதுகாக்க யாரெல்லாம் முயற்சிக்க வேண்டும்?, Katraiyum neeraiyum pathukakka yarellam muyarchikka vendum?

காற்றையும் நீரையும் பாதுகாக்க யாரெல்லாம் முயற்சிக்க வேண்டும்?

இயற்கையின் மீது அளப்பரிய ஈடுபாடு கொண்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள், தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபடும் ஆறுகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது, பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சத்குரு சுட்டிக்காட்டுகிறார். மரம் நடவேண்டிய பொறுப்பு யாருக்கெல்லாம் இருக்கிறது என்பதை இந்த வீடியோவில் சத்குருவின் பேச்சு உணர்த்துகிறது!

எந்தெந்த நோய்களுக்கு யோகா... எந்தெந்த நோய்களுக்கு டாக்டர்?, Enthentha noigalukku yoga? enthentha noigalukku doctor?

எந்தெந்த நோய்களுக்கு யோகா… எந்தெந்த நோய்களுக்கு டாக்டர்?

“யோகா மூலம் பலர் பலவித நோய்களிலிருந்து விடுபடுவதால், மருத்துவமனைகள்-மருத்துவர்கள் இனி வேண்டியதில்லை என்று சொல்லிவிடலாமா?” இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்களின் இந்த கேள்விக்கு சத்குருவின் பதில் என்ன என்பதை வீடியோவில் பாருங்கள்!

குழந்தைகளுக்கு விவசாயம் கற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள்!, Kuzhanthaigalukku vivasayam katru koduppatharkana muyarchigal

குழந்தைகளுக்கு விவசாயம் கற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள்!

குழந்தைகளுக்கு விவசாயம் செய்யக் கற்றுக்கொடுப்பதும், காடுகளை அறிமுகப்படுத்துவதும்தான் இன்று நாம் வருங்கால தலைமுறையினருக்கு செய்யக்கூடிய மிகச்சிறந்த வழிகாட்டுதலாக இருக்கமுடியும். அத்தகைய பணியை ஈஷா இயன்ற அளவிற்கு செய்துகொண்டிருந்தாலும், இதனை பல்வேறு இடங்களில் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்ற தனது ஆவலை இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் சத்குருவிடம் தெரிவித்தபோது…

புவி வெப்பமயமாதல் & உணவுப் பற்றாக்குறை - தீர்வு என்ன?, puvi veppamayamathal matrum unavu patrakkurai - theervu enna?

புவி வெப்பமயமாதல் & உணவுப் பற்றாக்குறை – தீர்வு என்ன?

பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதால் விளையவிருக்கும் அபாயங்களையும், உலகமெங்கும் நிலவும் உணவுப் பற்றாக்குறை குறித்தும் கூறி, இதற்கான தீர்வு பற்றி கேட்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள். சத்குரு இதற்கு சொல்லும் தீர்வு என்ன என்பதை வீடியோவில் பார்க்கலாம்!

நாம் வாழ்வதற்காக புழு-பூச்சிகளை அழித்தல் சரியா?, Nam vazhvatharkaga puzhu poochigalai azhithal sariya?

நாம் வாழ்வதற்காக புழு-பூச்சிகளை அழித்தல் சரியா?

இரசாயன கலப்பில்லா இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தி தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இயற்கை வேளாண் விஞ்னானி திரு.நம்மாழ்வார் அவர்கள். புழு-பூச்சிகளை அடியோடு அழித்துவிட்டு, இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக நினைக்கும் மனிதனின் மனப்பான்மை குறித்து சத்குருவிடம் அவர் கேட்டபோது, இயற்கை சுழற்சியில் சிறு பூச்சிகளுக்கும் முக்கியபங்கு உண்டு என்பதை சத்குரு விளக்குகிறார்!

கிராமம்-நகரம்... வளர்ச்சியில் சமநிலை ஏன் தேவை?, Kiramam nagaram valarchiyil samanilai yen thevai?

கிராமம்-நகரம்… வளர்ச்சியில் சமநிலை ஏன் தேவை?

‘கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு’ என மஹாத்மா காந்தி கூறினார். அப்படியென்றால் நகரங்களின் வளர்ச்சி தேவை இல்லையா? கிராம வளர்ச்சியிலும் நகர்ப்புற வளர்ச்சியிலும் சமநிலை கொண்டுவருவது பற்றி இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்களின் கேள்விக்கு சத்குரு பதிலளிக்கிறார். தொலைநோக்குப் பார்வையுடன் நாம் செயல்பட வேண்டியதன் அவசியம் என்ன என்பதை வீடியோ பதிவு புரியவைக்கிறது.