Mother’s Day

அன்னையர் தினத்திற்கு 6 குருவாசகங்கள், Annaiyar dinathirku 6 guruvasagangal

அன்னையர் தினத்திற்கு 6 குருவாசகங்கள்

மே 14ஆம் தேதி அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, தாய்மை, குழந்தை வளர்ப்பு மற்றும் வளர்வது குறித்து சத்குரு கூறியுள்ள பொன்மொழிகள் இங்கே…

ஒவ்வொரு நாளும் அன்னையர் தினமே, ovvoru nalum annaiyar diname

ஒவ்வொரு நாளும் அன்னையர் தினமே

அன்னையர் தினம் என்பது நம்மைப் பெற்றெடுத்த தாயை மட்டும் நினைவுகூர்ந்து நன்றியுடன் இருப்பதல்ல, படைப்பின் ஒவ்வொரு அம்சத்திற்குமே நன்றி செலுத்துவதற்கான நேரம். ஏனெனில் ஆழமாகப் பார்த்தால், இந்தப் படைப்பில் உள்ள ஒவ்வொரு பொருளுமே நம் இருப்பிற்கான காரணியாக இருப்பதைப் பார்க்கமுடியும் என்பதை சத்குரு இங்கு நமக்கு விளக்குகிறார்.

தாய்ப்பாலின் தன்னிகரில்லா சிறப்பு!, Thaippalin thannigarilla sirappu

தாய்ப்பாலின் தன்னிகரில்லா சிறப்பு!

ஆறு மாத பேறு கால விடுமுறை குதிரைக்கொம்புதான் என்றாலும், உங்கள் சின்னஞ்சிட்டுக்கு தாய்ப்பாலூட்டுவதை மனது வைத்தால் எளிமையாய் செய்யமுடியும்.

பெண்தன்மை மதிக்கப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்?, Penthanmai mathikkappadamal iruppatharku enna karanam?

பெண்தன்மை மதிக்கப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

பெண்களுக்கு நிராகரிக்கப்படும் சமூக அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து கல்வியாளரும் பிரபல பேச்சாளருமான திருமதி.பர்வீன் சுல்தானா அவர்கள் கேட்டபோது, ஒரு சமூகத்தில் பொருளாதாரம் மட்டுமே முக்கியமாகும்போது நிகழும் அபத்தத்தை சுட்டிக்காட்டுகிறார் சத்குரு. மேலும், தனது சிறுவயது நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, குழந்தை பருவத்தில் பெண்களை மதிக்கும் பழக்கத்தை கொண்டுவருவதன் அவசியத்தையும் வீடியோவில் சத்குரு எடுத்துரைக்கிறார்.

கடமையாக நினைத்து முதியோர்களைப் பராமரிப்பதில் என்ன தவறு?, Kadamaiyaga ninaithu muthiyorgalai paramarippathil enna thavaru?

கடமையாக நினைத்து முதியோர்களைப் பராமரிப்பதில் என்ன தவறு?

“குறுத்தோலையும் ஒருநாள் சறுகுதானே?!” என்று ஊர்ப்பக்கம் சொல்வதுண்டு! முதுமை என்பது அனைவருக்கும் வரக்கூடியதுதான். ஆனால், முதியோர்கள் நமக்குத் தேவையற்றவர்கள் என ஓரம்கட்டும் நிலையை இன்றைய வீடுகளில் பார்க்கமுடிகிறது. தனது தந்தை சுயநலமாக நடந்துகொள்வது குறித்து புகார்கூறும் ஒரு மகனுக்கு சத்குரு சொல்லும் பதில்களின் தொகுப்பு, முதியவர்களுக்கு உண்மையில் தேவை எது என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

4

தாய்மையின் அழகு

குடும்பத்தோடு ஒத்துப் போக இயலாமல் சிலர் ஆசிரமத்திற்கு இடம் பெயர நினைக்கிறார்கள். “மூன்று பேருடன் வாழ்வதே உங்களுக்கு சவாலாக இருந்தால் 1000 பேரோடு வாழ நீங்கள் தகுதி இல்லாதவர்” என்று இந்த வார சத்குரு ஸ்பாட்டில் சத்குரு அவர்கள் கூறுகிறார். மேலும் குடும்பம் ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல என்றும், விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி உயர்வதற்கான ஒரு பயிற்சிக்களமாக அது இருக்கிறது என்றும் சத்குரு அவர்கள் விவரிக்கின்றார்.

மாதா, பிதா, குரு, தெய்வம்… ஏன்

மாதா, பிதா, குரு, தெய்வம்… ஏன்?

சத்குரு, நம் கலாச்சாரத்தில் மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் வரிசையில் தான் எப்போதுமே வணங்கி வந்திருக்கிறோம். எதற்காக இப்படி வரிசைப்படுத்தியுள்ளோம்?