meditation

உள்நிலை பக்குவம் வந்துவிட்ட இளைஞனுக்கு போராடும் குணம் போய்விடுகிறதா?, Ulnilai pakkuvam vanthuvitta ilaignanukku poradum gunam poividugiratha?

உள்நிலை பக்குவம் வந்துவிட்ட இளைஞனுக்கு போராடும் குணம் போய்விடுகிறதா?

‘யோகா, தியானமெல்லாம் செய்யும் இளைஞர்கள், சமூகத்தில் மற்றவர்களுடன் போட்டிபோட்டு ஓடாமல் அமைதியாகி விடுகிறார்கள்!’ இந்த குற்றச்சாட்டு பரவலாக இருப்பதாக கூறும் எழுத்தாளர் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், இது உண்மைதானா என சத்குருவிடம் வினவுகிறார். இதிலுள்ள அபத்தத்தை சுட்டிக்காட்டும் சத்குரு, சமூகத்தின் பார்வையில் உள்ள குறைபாட்டினை உணர்த்துகிறார்.

தியானம் மனதை மென்மையாக்குவதற்கா?, Dhyanam manathai menmaiyakkuvatharka?

தியானம் மனதை மென்மையாக்குவதற்கா?

கண்கள் மூடி அமர்ந்துவிட்டாலே தியானம்தான் நிகழ்கிறது என்ற பொதுவான பார்வை உள்ளது. அதுபோல தியானம் மனதை செம்மைப்படுத்தும், மென்மைப்படுத்தும் போன்ற பற்பல கருத்துக்களும் உலாவருகின்றன. ஆனால், தியானம் என்பது உண்மையில் என்ன என்பதை பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கையில் சத்குரு புரியவைக்கிறார்!

மனம் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை, ஏன்?, Manam amaithiyaga iruppathu sathiyamillai yen?

மனம் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை, ஏன்?

என் மனதை நான் எப்படி அமைதிப்படுத்துவது? நான் எவ்வளவு அதிகநேரம் பயிற்சிகள் செய்கிறேனோ, அந்த அளவிற்கு மனம் எனக்குச் சொல்கிறது, “வெளியே இதைவிட முக்கியமாக வேலைகள் இருக்கின்றன” என்று. ஆனால், பயிற்சி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்தாலும் இது தோன்றுகிறது.

பல போராட்டங்களுக்கிடையே யோகா அவசியமா?, Pala porattangalukkidaiye yoga avasiyama?

பல போராட்டங்களுக்கிடையே யோகா அவசியமா?

போராட்டங்கள் நிறைந்த சூழலுக்கிடையே யோகா செய்வதற்கு தினமும் நேரம் செலவழிப்பது அவ்வளவு அவசியமா என்ற கேள்வியை அரசியல் தலைவர் திரு. தொல் திருமாவளவன் சத்குருவிடம் கேட்டபோது, யோகா ஏன் அவசியம் என்பதை சத்குரு தெளிவுபடுத்துகிறார்.

தியானம் செய்தால் போட்டியிடும் தீவிரம் குறையுமா?, Dhyanam seithal pottiyidum theeviram kuraiyuma?

தியானம் செய்தால் போட்டியிடும் தீவிரம் குறையுமா?

தியானம் செய்பவர்கள் வெளியுலகிலும், விளையாட்டு போட்டிகளிலும் தீவிரம் காட்டமாட்டார்கள் என்ற ஒரு பார்வை பொதுவாக உள்ளது. பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்களும் இதே சந்தேகத்தை சத்குருவிடம் முன் வைக்கிறார். தியானத் தன்மை குறித்து விளக்கும் சத்குரு, ஒரு போட்டியாளருக்கு ஏன் தியானம் அவசியம் என்பதையும் இந்த வீடியோவில் தெளிவுபடுத்துகிறார்!

ஓம்கார தியானம்... புதிய ஆராய்ச்சி முடிவுகள்!, Omkara dhyanam puthiya araichi mudivugal

ஓம்கார தியானம்… புதிய ஆராய்ச்சி முடிவுகள்!

டில்லியிலுள்ள லேடி இர்வின் காலேஜில் ஒரு புது கண்டுபிடிப்பு: ஈஷாவில் பயிற்றுவிக்கும் ஒம்கார உச்சாடனத்தினால் விளையாட்டு வீரர்களின் உடலில் ஈரப்பதத்தின் தன்மை அதிகரிக்கிறது என்பதுதான் அது.

ஆன்மீகத்திற்கு உறவுகள் தடையா?, Anmeegathirku uravugal thadaiya?

ஆன்மீகத்திற்கு உறவுகள் தடையா?

சத்குரு: ஆன்மீகத்தில் வளர வேண்டுமென்றால் உறவுகளை விட்டுவிட வேண்டுமா என்று சிலர் கேட்கிறார்கள். ஆன்மீகம் என்பது உள்நிலை சார்ந்தது. உறவுகளோ புறவுலகம் சார்ந்தவை. எனவே ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகுமா என்னும் கேள்விக்கே…

மனம் - தியானம் - மனோவசியம்... சில சூட்சுமங்கள்!, manam - dhyanam - manovasiyam sila sookshumangal

மனம் – தியானம் – மனோவசியம்… சில சூட்சுமங்கள்!

உடல், மனம் ஆகிய இரண்டு எல்லைகளுக்குள் மனிதன் இருக்கிறவரை அவன் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கை அமையாது. ஏனெனில், அந்த நிலைகளைப் பொறுத்தவரை புறச்சூழ்நிலைதான் வாழ்வைத் தீர்மானிக்கிறது. இந்த எல்லைகளைக் கடந்த உயிரின் மூலத்தை உணர்வதற்கான கருவிதான் தியானம்.