Malaysia

ஈஷாவில் நடந்தவை…

ஈஷாவில் நடந்தவை…

“ஈஷாவுக்கு போயிருந்தேன் அப்போ தான் அந்த விஷயம் எனக்கு தெரிஞ்சுது!,” “அங்க புதுசா எவ்ளோ குழந்தைங்க இருக்காங்க தெரியுமா?,” “அங்க நவராத்திரிக்கு எந்த ஆர்டிஸ்ட் வந்திருந்தாங்க தெரியுமா?” என்று யாரோ ஒருவர் சொன்னவுடன் நமக்கு தெரியாமல் போய்விட்டதே என அங்கலாய்க்கும் உங்களுக்காகவே இனி வாரம் ஒருமுறை ஈஷா நிகழ்வுகளை அள்ளிக் கொண்டு வந்து இப்பக்கத்தில் சேர்க்கவிருக்கிறோம். படித்திடுங்கள்! பகிர்ந்திடுங்கள்!

The 500-ton rock

ஓர் அளப்பரிய, பெரிய பாறை

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், தான் மேற்கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கான பயணங்களைப் பற்றியும், ஆசிரமத்துக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள 500 டன் எடையுள்ள ஒரு பாறையைப் பற்றியும் விவரிக்கிறார் சத்குரு. “இந்தக் கல்லை எடுப்பதற்காக,
எனது தாய் வழிப் பாட்டனாரின் ஊருக்கு அருகே சென்றிருந்தோம். அங்கே பாறைகள் நிறைந்த குன்றுகள் இருக்கின்றன. இந்தப் பாறை, மக்கள் அனுபவத்தில், பரம்பரையாகக் கிடைக்கக் கூடியதைவிட, மிகப் பெரிய சொத்தாக இருக்கப் போகிறது.” படித்து மகிழுங்கள்!