Mahashivratri

2018 மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்?, 2018 mahashivaratriyil enna special?

2018 மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்?

வரும் பிப்ரவரி 13ல் நிகழவிருக்கும் ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் காத்திருக்கும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதைப் பற்றி ஒரு கண்ணோட்டம் இங்கே!

mahashivarathri-sadhana1

மஹாசிவராத்திரி சாதனா

மஹாசிவராத்திரி – கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஈஷா யோக மையத்தில் சத்குருவின் வழிகாட்டுதலுடன் நடைபெற்று வருகிறது. அந்த ஒரு இரவில் மட்டும் கண்விழித்திருந்தால் போதுமா? அந்நாள் வழங்கும் பலன்களை சிறப்பான முறையில் பெறுவது எப்படி? இதற்கு விடையாய், மஹாசிவராத்திரி நாளினை நோக்கி நம்மை தயார்படுத்திக் கொள்ள சத்குரு சில குறிப்புகளை வழங்கியிருக்கிறார். “சிவா” எனும் அந்தத் தன்மையை உணர, இதோ உங்களுக்கும் ஒரு வாய்ப்பு…

ஆன்மீக வரலாற்றில் ஓர் திருப்புமுனை! - ஆதியோகி திருமுகம் திறப்பு விழா!, anmeega varalatril oer thiruppumunai adiyogi thirumugam thirappu vizha

ஆன்மீக வரலாற்றில் ஓர் திருப்புமுனை! – ஆதியோகி திருமுகம் திறப்பு!

ஈஷா மஹாசிவராத்திரி, இந்த ஆண்டு கூடுதல் சிறப்பைப் பெற்றது என்பதை பாரதம் மட்டுமல்லாமல், உலகமே அறிந்து கொண்டது. கடந்த பிப்ரவரி 24, மஹாசிவராத்திரியன்று சத்குருவால் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 112 அடி உயர ஆதியோகி சிவனின் திருமுகத்தை, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.

தெய்வீகத்தின் இசைவில் சில கணங்கள்

வாழ்வை வாழ்ந்து களித்திடுங்கள்

மஹாசிவராத்திரி நிகழ்ச்சி வியக்கத்தக்க ஓர் இரவாய் அமைந்தது என்று இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்மிடம் சொல்லும் சத்குரு அவர்கள், நமக்காக சில எழிலான கவிதைகளையும் வடித்துக் கொடுத்துள்ளார். அவற்றை எழுத சத்குருவிற்கு பிடித்த நேரம், வெறும் 10 நிமிடங்கள். கவிதைகளுடன் மஹாசிவராத்திரி நிகழ்ச்சியிலிருந்து சில புகைப்படங்களையும் உங்களுக்காக இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

112 அடி உயர ஆதியோகி திருமுகம் திறக்கிறார் பிரதமர் மோடி, 112 adi uyara adiyogi thirumugam thirakkirar prathamar modi

112 அடி உயர ஆதியோகி திருமுகம் திறக்கிறார் பிரதமர் மோடி

இதோ வந்து விட்டது மஹாசிவராத்திரி.. நமது ஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும் மஹாசிவராத்திரி, இந்த ஆண்டு இன்னும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இதில் கலந்துகொண்டு யோகத்தின் மூலமான ஆதியோகி சிவனின் திருமுகத்தை திறந்து வைக்கிறார்.

மஹாசிவராத்திரி அன்னதானம், Mahashivarathri annadanam

அன்னதானம் – உலகிற்கு தாயாய் இருக்க ஒரு வாய்ப்பு

ஒருவர் மூச்சுவிடத் திணறுகிறார். உங்களிடம் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர் இருக்கிறது. அதன் உதவியால் அவரை சிறிது ஆக்ஸிஜன் சுவாசிக்க வைக்கிறீர்கள். இப்போது ஆக்ஸிஜனை வெறும் காற்று என்று சொல்வீர்களா அல்லது உயிராகவே பார்ப்பீர்களா? உயிராகத்தானே பார்ப்பீர்கள்? உணவு அளித்தல் என்பதும் ஒருவருக்கு உயிரைத் தருவது போலத்தான்.

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

மஹாசிவராத்திரி – கதை பேசலாம் வாங்க!
Isha Live Blog

மலரும் நினைவுகளும் தொடரும் பேரலையும்!

கடந்த 20 வருடங்களாக நடைபெற்ற மஹாசிவராத்திரி பற்றி ஈஷா பிரம்மச்சாரிகளும் முழுநேர தன்னார்வத் தொண்டர்களும் தங்களின் பசுமை மாறா நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள். இடைஇடையே ஈஷா யோக மையத்தில் நமது தன்னார்வத் தொண்டர்கள் யோக வீரர்களின் கை வண்ணத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த “மஹா மஹாசிவராத்திரியின்” ஏற்பாடுகள் குறித்தும் பகிரவிருக்கிறோம்!

ஆதியோகியை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம், Adiyogiyai varaverka thayaragi kondirukkirom

ஆதியோகியை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் “ஆதியோகி – சிவன்: யோகத்தின் மூலம்” புத்தகம் குறித்து சத்குரு நம்மோடு பகிருந்துள்ளார். அதோடு, ஆதியோகியை வரவேற்க ஈஷா யோக மையம் ஆயத்தமாகும் சமயத்தில், யோகேஷ்வர லிங்கம், ஆதியோகி பிரதிஷ்டை மற்றும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சிகளுக்காக அதிவிரைவாக நடைபெறும் வேலைகளை சத்குரு நேரடியாக பார்வையிடும் புகைப்படங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.