God

ஆன்மீகப் பாதையில் நாம் காணும் காட்சிகள் உண்மையா? கற்பனையா?, anmeega pathaiyil nam kanum katchigal unmaiya karpanaiya?

ஆன்மீகப் பாதையில் நாம் காணும் காட்சிகள் உண்மையா? கற்பனையா?

கற்பனைக்கும் உண்மைக்கும் உள்ள மெல்லிய கோடு மிக மிக நுட்பமாக இருப்பதால், பலரும் எது உண்மை எது மனப்பிரம்மை என புரிபடாமல் குழம்பிக்கொள்கிறார்கள். கற்பனைகளுக்கு உயிர்க்கொடுத்து உண்மையாக்கும் தந்த்ரா தொழிற்நுட்பம் பற்றி விவரிக்கும் சத்குரு, கற்பனையையும் உண்மையையும் பிரித்தறிய நாம் புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையையும் கூறுகிறார்.

சாப்பிடும் முன் ‘சஹனா வவது...’ உச்சாடனம் சொல்வது ஏன்?, Sappidum mun sahana vavathu uchadanam solvathu yen?

சாப்பிடும் முன் ‘சஹனா வவது…’ உச்சாடனம் சொல்வது ஏன்?

நம் கலாச்சாரத்தில் விளக்கேற்றினால் கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். விளையாட்டுப் போட்டி என்றால் மைதானத்தைக் கையால் தொட்டு வணங்கிவிட்டு, பின்னர் மைதானத்தில் நுழைகிறோம். ஈஷாவில் கூட உணவு அருந்துவதற்கு முன்னர், ‘சஹனா வவது’ என்னும் சமஸ்கிருதப் பாடல் பாடி பிரார்த்தனை செய்துவிட்டு உணவருந்துகிறோம். அது ஏன் என்று ஒரு சாதகர் கேட்ட கேள்விக்கு சத்குரு அளித்த பதில்…

பக்தி, கடவுள் & சங்கீதம்... என்ன தொடர்பு?, Bakthi kadavul sangeetham enna thodarbu?

பக்தி, கடவுள் & சங்கீதம்… என்ன தொடர்பு?

சங்கீத குடும்பத்திலிருந்து வந்துள்ள டாக்டர்.சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் சங்கீதத்தின் பல்வேறு முறைகளிலும் அடிப்படையாக பக்தி இருப்பதை சுட்டிக்காட்டி, இதுகுறித்த விளக்கத்தை சத்குருவிடம் கேட்கிறார். பக்திக்கும் சங்கீதத்திற்கும் உள்ள தொடர்பினை எடுத்துரைத்து, பக்தியின் உண்மைத் தன்மையை புரியவைக்கிறார் சத்குரு!

என் இஷ்ட தெய்வம், En ishta deivam

என் இஷ்ட தெய்வம்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு தனது இஷ்டதெய்வம் யாரென்ற உண்மையை சொல்கிறார். பக்தியென நாம் நினைப்பதை உடைக்கும் விதமாக பக்தி பற்றி விளக்குவதோடு, பக்தியும் தலைமையும் வெவ்வேறல்ல என்று அவர் அனுபவத்தில் உணர்ந்ததை பகிர்கிறார்.

மனம் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை, ஏன்?, Manam amaithiyaga iruppathu sathiyamillai yen?

மனம் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை, ஏன்?

என் மனதை நான் எப்படி அமைதிப்படுத்துவது? நான் எவ்வளவு அதிகநேரம் பயிற்சிகள் செய்கிறேனோ, அந்த அளவிற்கு மனம் எனக்குச் சொல்கிறது, “வெளியே இதைவிட முக்கியமாக வேலைகள் இருக்கின்றன” என்று. ஆனால், பயிற்சி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்தாலும் இது தோன்றுகிறது.

ஆத்திகம்-நாத்திகம்... பெரிய வித்தியாசம் இல்லை!, athigam - nathigam periya vithiyasam illai

ஆத்திகம்-நாத்திகம்… பெரிய வித்தியாசம் இல்லை!

ஆத்திகர்கள் மற்றும் நாத்திகர்கள் தாங்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பதை பொதுவாக நாம் பார்க்கிறோம். பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்களின் ஆத்திகர்-நாத்திகர் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், இருவருமே ஒரே விதமான மனநிலையில்தான் உள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறார் சத்குரு!

கர்மத்தின் பிடியிலிருந்து எப்படி விடுபடுவது?, Karmathin pidiyilirunthu eppadi vidupaduvathu?

கர்மத்தின் பிடியிலிருந்து எப்படி விடுபடுவது?

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், ஆன்மீகப்பாதையில் செயலின் முக்கியத்துவத்தையும், செயலில் ஈடுபடுவதன் மூலம் கர்மத்தின் கோரப் பிடியினை எப்படி தளர்த்துவது என்பதையும் அழகாக விளக்கியுள்ளார் சத்குரு. அத்துடன் சமீபத்தில் மும்பை நகரில் 2675 மக்கள் பங்கேற்க சத்குரு நேரடியாக நடத்திய இன்னர் எஞ்சினியரிங் நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பையும் வழங்குகிறோம்.