Corruption

அரசியல் என்றாலே ஊழல்தானா?, Arasiyal endrale oozhalthana?

அரசியல் என்றாலே ஊழல்தானா?

அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவரை மனதாரக் காதலித்தேன். பொய்களும் ஊழலும் நிறைந்த அரசியல் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. இதை முதலிலேயே அவரிடம் சொன்னேன். அரசியலில் இறங்காமல், தனியே ஒரு தொழில் துவங்கப் போவதாகத்தான் அவரும் சொல்லியிருந்தார். ஆனால் இப்போது குடும்பச் சூழ்நிலை காரணமாக அவர் அரசியலில் ஈடுபடவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அரசியல்வாதியுடன் என்னால் நிம்மதியாகக் குடித்தனம் செய்யமுடியாது. அதேசமயம் என் காதலை விட்டுக்கொடுத்தால், அது பெரிய உறுத்தலாகிவிடும். நான் என்ன செய்வது?

aanmeegathil-oozhal-perugivittatha

ஆன்மீகத்தில் ஊழல் பெருகிவிட்டதா?

“போலி சாமியார்கள் குறித்த செய்திகள் சமீபமாக அதிகமாவதுபோல தெரிகிறதே?! இதனால் மக்கள் ஆன்மீகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை பாதிக்கப்படுமா?” சத்குருவிடம் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு, ஊழல் செய்யும் மனப்பான்மை குறித்தும் மிகைப்படுத்திப் பேசும் கலாச்சாரம் குறித்தும் எடுத்துக் கூறி உண்மையை விளக்குகிறார் சத்குரு.

naadu-munnera-naam-seiya-vaendiyathu-enna

நாடு முன்னேற நாம் செய்ய வேண்டியது என்ன?!

நாடு எனக்கு என்ன செய்தது என்பதை விடுத்து, நாட்டிற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை அனைவரிடமும் வந்துவிட்டால், அதன்பின் நமது நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு யார் இருபார்கள்?! நாட்டிற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு அன்பர் சத்குருவிடம் கேள்வி கேட்டபோது, சத்குரு கூறிய பதிலைக் காண வீடியோவைப் பாருங்கள்!

ஊழலும் நீங்களும்

ஊழலும் நீங்களும்

ஊழல் அதிகாரத்தால் வருவதில்லை, ஒருவருக்குள் இருக்கும் ஊழல் அதிகாரத்தால் வெட்ட வெளிச்சத்திற்கு வருகிறது என்பதை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விளக்குகிறார் சத்குரு. நான், என் குடும்பம், என் சமூகம், என் நாடு எனத் தொடங்கி விரியும் ஊழலை எப்படிக் கையாள்வது என்றும் வழிகாட்டுகிறார்…

002

ஊழல் ஒழிய – தேவை மாற்றம்

மகாத்மா காந்தி என்பவரைப் பற்றி பெருமை பேசப்பட்ட இந்த தேசத்தில், நாட்டின் ஒற்றுமையைப் பற்றி மிக உயர்வாக பேசப்பட்ட ஓர் இடத்தில், மக்கள் இந்த நாட்டுக்காக வீதிகளில் தங்கள் உயிர்களை தியாகம் செய்யவும் தயாராக இருந்தார்கள். ஆனால் வெறும் ஒரே ஒரு தலைமுறைக்குப் பிறகு, நம் நாட்டின் இறையாண்மையின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. இதை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன வழி? ஊழலை ஒழிக்க என்ன வழி? விளக்குகிறார் சத்குரு…