Chant

"நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்," இயக்கத்தை துவக்கி வைத்தார் சத்குரு, nadhigalai meetpom bharatham kappom iyakkathai thuvakki vaithar sadhguru

“நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்,” இயக்கத்தை துவக்கி வைத்தார் சத்குரு

இந்திய நதிகளின் இக்கட்டான நிலை குறித்து, தேசிய அளவில் விழிப்புணர்வு உருவாக்கும் “நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்,” எனும் இயக்கம் சத்குரு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவினை இதற்கு வழங்கியுள்ளார்கள். உங்கள் ஆதரவை தெரிவிக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு மிஸ்டுகால்… 7000 பேர் கூடி துவங்கிய இயக்கத்தின் துவக்க காட்சிகள் இங்கு உங்களுக்காக…

முக்தியை உணர்த்த வரும் ஆதியோகிக்கு இசையால் ஓர் சமர்ப்பணம்!, mukthiyai unartha varum adiyogikku isaiyal oer samarppanam

முக்தியை உணர்த்தும் ஆதியோகிக்கு இசையால் ஓர் சமர்ப்பணம்!

நாதத்தின் தலைவனாம் ஆதியோகி சிவனுக்கு கீதத்தால் அர்ப்பணிக்க எண்ணி, சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் பக்தி மணம் கமழும் வகையில் உருவாக்கியுள்ள ஓர் இனிய பாடல் இது! கடைநிலையாம் முக்திநிலையை உணர்த்தும் ஆதியோகியின் மகத்துவங்கள் அழகிய தமிழில் பாடலாய் இங்கே… கூடவே ஆதியோகியின் ஓவியங்களும் கண்களுக்கு விருந்தாய்!

சிவன் - இந்த பிரபஞ்சத்தின் மூலம், Shivan intha prapanchathin moolam

சிவன் – இந்த பிரபஞ்சத்தின் மூலம்

உங்களுக்குள் நீங்கள் எவ்வளவு அழகாய் இருக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கும். யாரும் இதைப் பார்க்க முடியாது, யாரும் இதனை அங்கீகரிக்க தேவையில்லை, யாரும் இதனை கவனிக்கத் தேவையில்லை. ஆனால், இதுதான் வெகுமதிப்புள்ள ஒரு அம்சம்.

uyirnokkam

உயிர்நோக்கம்

சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசையமைப்பில் உருவான இந்தப் பாடலுக்கு பிரபல பின்னணி பாடகர் திரு. சங்கர் மஹாதேவன் குரல் கொடுத்திருக்கிறார். சத்குரு அவர்கள் ஒரு சம்யமா நிகழ்ச்சியின்போது எழுதி, வாசித்த ஒரு பாடலின் அடிப்படையில் இந்த முழுப் பாடலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. உயிரின்நோக்கம் உயிர்தான் எனப் பொருள்படும் இந்தப் பாடல், உயிரைத் தொடும் அனுபவமாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

madhyamavathi

மத்யமாவதி….

மொழிகள் பிரசவிக்க தவறும் எத்தனையோ அர்த்தங்களை இசை வெகு இயல்பாய் இழைத்துத் தந்துவிடும். நம் ஆழ்நிலை மனதை மாற்றிவிடும் சூழ்நிலைகளை இசை சில கணங்களில் உருவாக்கிவிடும். காலத்தை கட்டிப்போட்டு, நம் கை கால்களுக்கு தாளம் சொல்லித்தரும் ஈஷாவின் மந்திர இசை மத்தியமாவதி ராகமாக காற்றில் இங்கே தவழ்ந்து வருகிறது…

புரிந்த அர்த்தம், புரியாத அதிர்வுகள்!-2

புரிந்த அர்த்தம், புரியாத அதிர்வுகள் !

“சப்தம் தான் படைப்பின் ஆதாரம். நவீன விஞ்ஞானம், ஒலி, ஒளி இரண்டுமே அதிர்வுதான் என்று, இன்று சொல்லி வருகிறது. ஒரு ஒலியின் அதிர்வு நுட்பமாகும் வகையில், அதன் அலைவரிசையை பெருக்கிக் கொண்டே வந்தால், அறிவியல் விதிப்படி அது ஒளியாகிறது. ஆனால் இதை நாம் நமக்குள் எப்போதும் செய்து கொண்டுதான் இருந்திருக்கிறோம்” என்று சத்குரு அவர்கள் சொல்கிறார். இது எப்படி…. தொடர்ந்து படியுங்கள் இந்த வார சத்குரு ஸ்பாட்…

குழந்தைகளை மாற்றிய ‘சரிகமபதநி’

குழந்தைகளை மாற்றிய ‘சரிகமபதநி’

‘முறைப்படியாக சங்கீதம் கற்பதால் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் செம்மையாகுமா?’ ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டிய இந்தக் கேள்வியை ‘கடம்’ வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, ஈஷா ஹோம் ஸ்கூல் குழந்தைகள் ‘சரிகமபதநி’யால் அடைந்த மாற்றத்தை நம்முடன் வீடியோவில் பகிர்கிறார் சத்குரு. வீடியோ உங்களுக்காக இங்கே!

அலை… அலை

நெத்திலி மீனப்போல ஆச…!

சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் “அலை” இசைத் தொகுப்பிலிருந்து, வாரம் ஒரு பாடலை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியை, இதன் மூலம் வழங்குகிறோம். இந்த வாரம் இடம்பெறும் பாடலின் பெயரில்தான் இசைத் தொகுப்பிற்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஆம்! இந்த வாரம் “அலை அலை அலை…”