Beliefs-Conditioning

நம்பிக்கை, வாழ்க்கை & நீங்கள் - சில புரிதல்கள்!, nambikkai vazhkai neengal - sila purithalgal

நம்பிக்கை, வாழ்க்கை & நீங்கள் – சில புரிதல்கள்!

எளிய மனிதர்கள் சட்டென்று யாரையும் நம்பிவிடுகின்றனர். அதிகம் படிப்பவர்களோ, யாரை நம்புவது, எதை நம்புவது என்ற குழப்பத்தில் தொடர்ந்து உள்ளனர். உண்மையில், நம்பிக்கை என்பதன் தன்மை என்ன? நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் சம்பந்தமுள்ளதா? பதிலை அறிய நம்பிக்கையோடு தொடர்ந்து படியுங்கள்… இந்த ஆழமான வார்த்தைகளில் உள்ளது விடை!

ஆத்திகம்-நாத்திகம்... பெரிய வித்தியாசம் இல்லை!, athigam - nathigam periya vithiyasam illai

ஆத்திகம்-நாத்திகம்… பெரிய வித்தியாசம் இல்லை!

ஆத்திகர்கள் மற்றும் நாத்திகர்கள் தாங்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பதை பொதுவாக நாம் பார்க்கிறோம். பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்களின் ஆத்திகர்-நாத்திகர் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், இருவருமே ஒரே விதமான மனநிலையில்தான் உள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறார் சத்குரு!

“நானும் ஆன்மீக தேடுதலில் உள்ளேன்!” - நா.முத்துக்குமார், Nanum anmeega theduthalil than ullen - na muthukumar

“நானும் ஆன்மீக தேடுதலில் உள்ளேன்!” – நா.முத்துக்குமார்

சமீபத்தில் மறைந்த தேசிய விருதுபெற்ற திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான திரு.நா.முத்துக்குமார் அவர்கள் ஈஷா யோக மையம் வருகை தந்திருந்தபோது சத்குருவிடம் கலந்துரையாடி, பல சுவாரஸ்ய கேள்விகளை முன்வைத்தார். தந்தையின் வழிகாட்டுதலில் திராவிட கருத்துக்களை உள்வாங்கி ஒரு நாத்திகராக வளர்ந்த நா.முத்துக்குமார், தானும் ஆன்மீக தேடுதலில் இருப்பதாக சத்குருவிடம் கூறுகிறார்! அந்த சுவாரஸ்ய பதிவு வீடியோவில் இங்கே!

உயிர்த்தன்மை பற்றி அடுத்தவர் சொல்வதை நம்பலாமா?, Uyirthanmai patri aduthavar solvathai nambalama?

உயிர்த்தன்மை பற்றி அடுத்தவர் சொல்வதை நம்பலாமா?

உயிரின் அடிப்படை என்னவென்று அறிந்துகொள்ளும் ஆர்வம் ஒருவருக்கு வந்துவிட்டால் அதுவே ஆன்மீக தேடுதலுக்கு வித்தாக அமையும்! ஆனால், இதில் அடுத்தவர் சொல்லும் வார்த்தைகளை நம்பத்துவங்கினால், தேடல் முடிந்துவிடுகிறது. தற்போது சத்குரு சொல்லும் வார்த்தைகளை சிலர் தங்கள் அனுபவம் ஏதுமில்லாமல் அப்படியே நம்பத் துவங்குகின்றனர். இது எவ்வளவு அபத்தமென்று சத்குரு கூறுகிறார்? வீடியோவைக் காணுங்கள்! விடையறியுங்கள்!

kadavulgalukkana-pandigaigalai-nathigargal-kondadalama

கடவுள்களுக்கான பண்டிகைகளை நாத்திகர்கள் கொண்டாடலாமா?

‘கடவுள் இல்லை என்று சொல்லி நாத்திகம் பேசுபவர்கள் கடவுள்களுக்கான பண்டிகைகளைக் கொண்டாடுவது ஏன்? கடவுள்களுக்கான கொண்டாட்டத்தில் அவர்களுக்கென்ன வேலை?’ ஒரு ஆத்திகராக இருந்து பார்த்தால் இந்தக் கேள்வி சரியாகவே தோன்றும். ஆனால் உண்மையில், கொண்டாட்டங்கள் யாருக்காக என்பதையும் ஆத்திகர் மற்றும் நாத்திகர் புரிந்துகொள்ள வேண்டியது என்ன என்பதையும் விளக்குகிறது, வீடியோவில் சத்குருவின் பதில்!

marathilirukkum-palakkayaivida-kaiyil-irukkum-kalakkaye-mel

மரத்திலிருக்கும் பலாக்காயை விட, கையில் இருக்கும் கலாக்காயே மேல்!

தன் தகுதிக்கு மீறி ஆசைபடுபவர்களைப் பார்த்து சொல்லப்படும் ஒரு பழமொழி இது. இதைப் பற்றி சத்குரு என்ன சொல்கிறார் என்பதை அறிந்துகொள்வோம்…

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா’ என புத்தரிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது, புத்தர், ஒருவருக்கு ‘இருக்கிறார்’ என்றும் இன்னொருவருக்கு ‘இல்லை’ என்றும் பதிலளித்தார். புத்தரின் பதில்களில் காணப்படும் முரண்பாட்டுக்கான புதிரை இந்த வீடியோ மூலம் சத்குரு விடுவிக்கிறார்.

yesu-unmaiyil-enna-sonnar

இயேசு உண்மையில் என்ன சொன்னார்?!

நம்மைப் பொருத்தவரை கிறிஸ்துவும், கிறிஸ்துவமும் ஒன்றுதான். ஆனால் காலப்போக்கில் அவர் “கடவுளின் குழந்தை” என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அவர் தந்த போதனைகளின் சாரத்தை மறந்து விட்டோம். இதோ இந்தக் கட்டுரையில் இயேசு சொன்ன போதனைகளின் சாரத்தை நமக்கு தெளிவு படுத்துகிறார் சத்குரு…