Athanaikum Asaipadu

அத்தனைக்கும் ஆசைப்படுவது எப்படி என புரியாதவர்கள் கவனிக்க!, Athanaikum asaipadu eppadi ena puriyathavargal gavanikka

அத்தனைக்கும் ஆசைப்படுவது எப்படி என புரியாதவர்கள் கவனிக்க!

பத்திரிக்கையாளர் திரு.பத்ரி அவர்கள் தந்தி டிவியின் ராஜபாட்டை நிகழ்ச்சிக்காக சத்குருவை நேர்காணல் செய்தபோது, ‘அத்தனைக்கும் ஆசைப்படு!’ என சத்குரு சொல்வது குறித்து தனக்கிருக்கும் சந்தேகங்களை முன்வைக்கிறார். அத்தனை என்றால் என்ன? அத்தனைக்கும் ஆசைப்படுங்கள் என சொல்வது ஏன்? என்பதற்கான விளக்கங்கள் சத்குருவிடமிருந்து கிடைக்கிறது!

அத்தனைக்கும் ஆசைப்பட்டால், அத்தனையும் கிடைக்குமா?, Athanaikum asaippattal athanaiyum kidaikkuma?

அத்தனைக்கும் ஆசைப்பட்டால், அத்தனையும் கிடைக்குமா?

பத்திரிக்கையாளர் திரு.பத்ரி அவர்கள் தந்தி டிவியின் ராஜபாட்டை நிகழ்ச்சிக்காக சத்குருவை நேர்காணல் செய்தபோது, ‘அத்தனைக்கும் ஆசைப்படு!’ என்று சொல்வதிலுள்ள உள்ளார்ந்த அர்த்தம் குறித்தும், நாம் அத்தனையும் அடைவதற்கான வழிமுறை என்ன என்பதையும் ஆர்வத்துடன் கேட்டார். அதற்கான சத்குருவின் விளக்கம் இந்த வீடியோவில்!

athanaikum-asaipaduvathu-endral

அத்தனைக்கும் ஆசைப்படுவது என்றால்…?

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் போதித்தார். சத்குருவோ ‘அத்தனைக்கும் ஆசைப்படு!’ என்கிறார். இதில் எது சரி? உங்களுக்கும் இதே குழப்பமா?! வீடியோவைப் பாருங்கள், தெளியலாம்!

mirala-seyyum-milarepavin-kathai

மிரளச் செய்யும் மிலரபாவின் கதை!

ஆன்மீகத் தேடலில் பலவித துன்பங்களைச் சந்தித்து வெற்றிகண்ட மிலரபாவின் பங்கு திபெத்திய புத்தமத வரலாற்றில் மிக முக்கியமானது. செய்வினை செய்பவராக இருந்த மிலரபா புத்தமத குருவாக மாறியது எப்படி? மந்திரக்காரராக இருந்து பின், ஆன்மீக ஞானத்தை அடைந்ததையும், அவர் எதிர்கொண்ட நெஞ்சை நொறுக்கும் அனுபவங்களையும் கதை வடிவில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு!

indian-endra-adaiyalam-kolvom

இந்தியன் என்ற அடையாளம் கொள்வோம்!

நாம் செயல்படும்போது ஏதாவது ஒரு அடையாளத்தைக் கொண்டுதான் செயல்பட வேண்டியுள்ளது. இப்படியிருக்கும்போது எப்படி இனம், மொழி, நாடு போன்ற அடையாளங்களைக் கடக்க முடியும்? இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய பதில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைந்ததோடு, அதற்கு சரியான தீர்வு சொல்வதாகவும் அமைந்தது.

பாரத கலாச்சாரத்தை வேரூன்றச் செய்த அகத்திய மாமுனி!, bharatha kalacharathai vaeroondriya agathiya maamuni

பாரத கலாச்சாரத்தை வேரூன்றச் செய்த அகத்திய மாமுனி!

தெரிந்தோ தெரியாமலோ இன்று உலகில் 250 கோடி பேர் ஏதோ ஒரு யோகப் பயிற்சியை செய்து வருகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? யோகக் கலாச்சாரத்தை தென் தமிழகத்தின் அடிப்படையாக வேரூன்றச் செய்த அகத்தியர் மேற்கொண்ட பயணத்தின் பலனே அது! நம் கலாச்சாரத்தின் பெருமைகளையும் அகத்தியரின் அரும் பணிகளையும் பற்றி சத்குரு இந்த வீடியோவில் பேசுகிறார்.

1050

ஈஷாவில் இசைக்கு முக்கியத்துவம் உள்ளதா?

“சைவ தமிழ் பாரம்பரியத்தில் இசையால் இறைவனை அடைந்த யோகிகள் பலர் உள்ளனர். அதுபோல், ஈஷாவில் இசைக்கு முக்கியத்துவம் உள்ளதா? குறிப்பாக தமிழால் செய்யப்படும் இசை வழிபாடு ஈஷாவில் உள்ளதா?” சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள் சத்குருவிடம் இந்தக் கேள்வியை எழுப்பிய போது, ஒரு பக்தனின் தன்மை எப்படிப்பட்டது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார் சத்குரு. வீடியோ உங்களுக்காக இங்கே!

1050-2

தட்சின காளி கோயிலின் சிறப்பு!

நேபாளத்தில் அமையப்பெற்றுள்ள தட்சின காளி கோயிலின் சிறப்பு குறித்து இந்த வீடியோவில் விளக்குகிறார் சத்குரு. ஆக்ஞா சக்ரத்தின் மூன்று தன்மைகளையும் பெண் ரூபமாக அமைக்கப்பட்டுள்ள தட்சின காளியைப் பற்றி சத்குரு கூற கேட்கலாம்!