கைலாயம் – ஞானியின் பார்வையில்

கைலாஷ் யாத்திரை செல்வதற்கு அடிப்படைத் தேவை என்ன?, Kailash yathirai selvatharku adippadai thevai enna?

கைலாஷ் யாத்திரை செல்வதற்கு அடிப்படைத் தேவை என்ன?

வாழ்நாள் சாதனையாக இருந்த கைலாஷ் யாத்திரை இன்று ஓரிரு வாரத்தில் சென்று திரும்பக்கூடிய பயணமாக மாறியுள்ளது. கைலாஷ் யாத்திரை செல்ல நினைப்பவர்களின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும், கைலாஷ் யாத்திரையின் சிறப்புகளையும் சத்குரு இங்கே எடுத்துரைக்கிறார்!

பார்வதி சிவனிடம் ஞானம் பெற்ற விநோத வழிமுறை..., Parvathi shivanidam gnanam petra vinotha vazhimurai

பார்வதி சிவனிடம் ஞானம் பெற்ற விநோத வழிமுறை…

பார்வதி தேவி சிவனிடம் ஞானம் பெறுவதற்கு மேற்கொண்ட பல கடும் தவங்களும், சில சாதுர்ய வாதங்களும், சத்குரு சொல்லிக் கேட்கும்போது இன்னும் சுவாரஸ்யம் கூடுகிறது. பார்வதி சிவனிடமிருந்து ஞானம்பெற்ற பிரத்யேகமான ஒரு வழிமுறை பற்றியும், கணபதி பிறந்தது எப்படி என்பதையும் விளக்கும் இந்த வீடியோ பதிவு, பல புராண நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது!

‘வாமா’ என்ற கைலாயத்தின் வடக்கு முகம்!, vama endra kailayathin vadakku mugam

‘வாமா’ என்ற கைலாயத்தின் வடக்கு முகம்!

‘வாமா’ எனப்படும் கைலாயத்தின் வடக்குமுகம் குறித்த தவறான புரிதல்கள் உள்ளன. பில்லி-சூனியம் போன்ற எதிர்மறை செயலுக்குரியது வாமாச்சாரம் என பலர் நினைத்துக்கொள்கிறார்கள். இந்த பார்வையை முற்றிலும் மாற்றும் விதமாக அமைகிறது சத்குருவின் இந்த விளக்கம்! மேலும், கைலாயத்தின் வடக்கு முகம் சார்ந்த அம்சமாக விளங்கும் வீரபத்ரா பற்றிய குறிப்புகள், காட்சி வடிவமாக இந்த வீடியோவில் விளக்கப்படுகிறது.

இராவணன் அழிந்தது எதனால்?, Ravanan azhinthathu ethanal?

இராவணன் அழிந்தது எதனால்?

கைலாஷின் தெற்கு முகத்திற்குள்ள தனிச்சிறப்புகள் குறித்து பேசும் சத்குரு, பக்தி – சக்தி – புத்தி ஆகிய மூன்றும் இருந்தும், அகங்காரத்தினால் இலங்கை வேந்தன் இராவணன் பட்ட கஷ்டங்கள் நஷ்டங்கள் பற்றி சொல்கிறார். ஆத்மலிங்கத்தை இராவணனிடமிருந்து சாதுர்யமாகப் பறித்த கணபதி, இராவணனின் ‘டோலி’னால் கைலாஷின் தென்முகத்தில் உண்டான கோடு போன்ற சுவாரஸ்யமான கதைகளை சத்குரு நகைச்சுவையோடு விவரித்த வீடியோ இங்கே உங்களுக்காக!

கைலாஷின் சக்தியதிர்வுகளால் உடல்நலம் பெற்ற சத்குரு! , Kailashin sakthi athirvugalal udalnalam petra sadhguru

கைலாஷின் சக்தியதிர்வுகளால் உடல்நலம் பெற்ற சத்குரு!

மருத்துவ பரிசோதனையில் கண்டறிய முடியாமல் பல வாரங்களாய் தொடர்ந்த மர்மக் காய்ச்சலால் அவதிப்பட்ட அனுபவத்தை விளக்கும் சத்குரு, கைலாஷ் மலையில் பொங்கிப்பெருகும் சக்திவெள்ளத்தால் தன் உடல்நலத்தை மீட்டெடுத்த அற்புதத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். இந்த வீடியோ மூலம் கைலாஷின் அளப்பரிய சக்தியின் தன்மை நிச்சயம் புரியும்!

சிவன் அழிக்கும் கடவுள் என்பது உண்மையா?, Shivan azhikkum kadavul enbathu unmaiya?

சிவன் அழிக்கும் கடவுள் என்பது உண்மையா?

‘சிவன்’ அழிக்கும் கடவுள் என்று அஞ்சும் பலர், தங்கள் வீட்டில் சிவனின் படத்தைக் கூட வைத்துக்கொள்வதில்லை. குறிப்பாக அவர் நம்மிடம் உள்ள செல்வத்தை அழித்து, நம்மை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார் என நினைக்கிறார்கள். உண்மையில், சிவன் நம்மை அழிப்பாரா? இந்த அபத்தமான நம்பிக்கையை அகற்றி உண்மையை விளக்குகிறார் சத்குரு!

shivan-entha-ulagathai-saernthavar

சிவன் எந்த உலகைச் சேர்ந்தவர்?

சிவன் எங்கே பிறந்தார்? அவரின் தாய்-தந்தையர் யார் என்ற எந்த விவரமும் நம்மிடம் இல்லை. ஆனால், அவர் கைலாசத்தில் இருப்பார் எனச் சொல்வதுண்டு. சிவனின் பூர்வீகம் பற்றி இந்த வீடியோவில் பேசும் சத்குரு, சிவன் இந்த உலகைச் சேர்ந்தவரில்லை எனச் சொல்கிறார். அப்படியென்றால் சிவன் வேற்றுலகத்தவரா?! உண்மையென்ன என்பதை வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!

vaetru-kiraga-uyirgalai-sadhguru-parthapothu

வேற்றுகிரக உயிர்களை சத்குரு பார்த்தபோது…

வேற்றுகிரக உயிர்களை பார்த்தவர்கள் யாரேனும் உண்டா? அவர் என்ன பார்த்தார் என்பதை நீங்கள் கேட்டதுண்டா? அப்படியொருவரின் அனுபவத்தை கேட்க நேர்ந்தால்…! அதுவும் அவர் சத்குருவாக இருந்தால்… ஆம்! மானசரோவர் ஏரியில் தான் கண்ட வேற்றுகிரக உயிர்களைப் பற்றி இந்த வீடியோவில் பேசுகிறார் சத்குரு!