ஈஷா ருசி

நம் வீடுகளில் "பணியாரம்" என்ற உணவிற்கு ஒரு தனி இடமுண்டு. அந்தப் பணியாரத்தை இன்னும் விதவிதமாகவும், சுவையாகவும் நீங்கள் தயாரித்து உண்பதற்காக இதோ 3 வகையான பணியாரங்கள் இங்கே உங்களுக்காக...

சோள பணியாரம்

Oct 13 சுவை மிகுந்த பணியார வகைகள்… 1

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சோள அரிசி - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 50 கிராம்
உளுந்து, வெந்தயம் - 25 கிராம்

செய்முறை: முதல் நாள் இரவு சோள அரிசி, புழுங்கல் அரிசி, மற்றும் உளுந்து + வெந்தயம் தனித்தனியாக இம்மூன்றையும் ஊற வைத்துக் கொள்ளவும். காலையில் தனித்தனியாக கரகரப்பாக அரைத்து ஒன்றாக கலக்கி பணியாரமாக ஊற்றி எடுக்கலாம்.

வெஜிடபுள் பணியாரம்

Oct 13 சுவை மிகுந்த பணியார வகைகள்… 2

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கிலோ
உளுந்து - 1/4 கிலோ
கேரட் - 1 கப்
தேங்காய் - 1 கப் (சிறியதாக கட் செய்தது)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முட்டைக்கோஸ் - 1 கப்
கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - 1 கப் (சிறியதாக கட் செய்தது)

தாளிதம் : கடுகு, உளுந்தப்பருப்பு

செய்முறை:
பச்சரிசியில் வெந்தயம் போட்டு ஊற வைத்து அரைக்கவும். பிறகு உளுந்தப்பருப்பையும் அரைத்து இரண்டையும் உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலை கேரட், முட்டைக்கோஸ், தேங்காய் மற்றும் தாளிதம் போட்டு கரைத்து பணியாரமாக ஊற்றலாம்.

பாசிப்பயிறு பணியாரம்

Oct 13 சுவை மிகுந்த பணியார வகைகள்… 3

தேவையான பொருட்கள்:

பாசி பயிறு - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 50 கிராம்
உளுந்து, வெந்தயம் - 25 கிராம்

செய்முறை: முதல் நாள் இரவு பாசி பயிறு, புழுங்கல் அரிசி, மற்றும் உளுந்து+வெந்தயம் தனித்தனியாக இம்மூன்றையும் ஊற வைத்துக் கொள்ளவும். காலையில் தனித்தனியாக கரகரப்பாக அரைத்து ஒன்றாக கலக்கி பணியாரமாக ஊற்றி எடுக்கலாம்.