சுட்ட மாங்காய் ஜூஸ்… செய்வது எப்படி?

சுட்ட மாங்காய் ஜூஸ்... செய்வது எப்படி?, Sutta mangai juice seivathu eppadi?

ஈஷா ருசி

கோடைகாலமும் மாம்பழ சீசனும் ஒன்றாக வருவது இயற்கையின் அற்புதம்தான்! ஆனால், நமது கவனம் மாம்பழத்திலேயே இருக்கிறதே?! மாங்காயை கூட ருசிக்கலாமே! சுட்ட மாங்காய் கொண்டு ஜூஸ் செய்யும் ரெசிபி உங்களுக்காக!

மாங்காய் ஜுஸ்

தேவையான பொருட்கள்:

பச்சை மாங்காய் – 6
சீரகத் தூள் – சுவைக்கேற்ப
உப்பு – சுவைக்கேற்ப
நாட்டுச் சர்க்கரை – சுவைக்கேற்ப
புதினா இலைகள் – சிறிதளவு
மிளகுத் தூள் – சுவைக்கேற்ப

செய்முறை:

மாங்காய்களை தண்ணீரில் வேக வைக்கவும். (இதற்கு பதில் தனல் அடுப்பில் மாங்காயைச் சுட்டெடுத்தால் முற்றிலும் மாறுபட்ட சுவை கிடைக்கும்). வெந்தவுடன் தோல் உரித்து, சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சீரகத் தூள், உப்பு, நாட்டுச் சக்கரை, புதினா இலைகள், மிளகுத் தூள் இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். இதை சுட்ட மாங்காயுடன் கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் ஒரு தடவை ஓடவிடுங்கள். சுவையான மாங்காய் ஜூஸ் ரெடி.

வட இந்தியாவில், ‘ஆம் பன்னா’ என்று அழைக்கப்படும் இந்த மாங்காய் ஜூஸ், வெயில்காலத்திற்கு மிகவும் குளிர்ச்சியான, சத்தான பானம்.
இதையும் வாசியுங்கள்

Tags

Type in below box in English and press Convert