ஈஷா புத்துணர்வு மையத்தில் கற்றுத்தரப்படும் "சுநேத்ரா" நிகழ்ச்சி, கண் பார்வையை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கண் நோய்களைக் களைவதற்கும் உதவுகிறது. அதுமட்டுல்லாமல், உங்கள் உடலைப் புத்துணர்வாக வைத்துக் கொள்ள இங்கே என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

“அற்புதமான அனுபவம்! இங்கிருக்கும் ஒருங்கிணைப்பாளர்களும் தன்னார்வ தொண்டர்களும் மசாஜ் செய்வோரும் இப்படியொரு மகத்தான அனுபவத்தை எனக்கு வழங்கியுள்ளனர். இங்கு எனக்கு அடிப்படையான யோக ஆசனங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. மேலும் என் பணி சூழ்நிலை மற்றும் வாழ்க்கை முறையால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகும் எனக்கு அமைதியான தியானமும் தரப்பட்டது. இந்த அனுபவம் மிக, மிக அற்புதமாக இருந்தது. எழில் கொஞ்சும் பசுமையான சூழ்நிலை, சுற்றிலும் மலைகள், தியான மண்டபங்கள் மேலும் அங்கு நடத்தப்பட்ட வகுப்பு என அனைத்துமே மிக அற்புதம்” என்கிறார் இளம் வயதுக்காரரான, பெங்களூருவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் திரு. சுனில் முரளிதரன்.

இப்படி மக்களுக்கு புத்துணர்வை மீட்டுத்தருவது, யோகா மற்றும் பாரம்பரிய சிகிச்சைகள் மூலம் பல நாட்பட்ட நோய்களையும் குணப்படுத்துவது இவையெல்லாம் நடைபெறும் இடம்தான் கோவை வெள்ளியங்கிரி மலைச்சாரலிலுள்ள ஈஷா யோகா மைய வளாகத்தில் அமைந்துள்ள ஈஷா புத்துணர்வு மையம் (Isha Rejuvenation centre).
1

இன்றைக்கு வயோதிகம் என்றால் மருந்து, மாத்திரை, என்றாகிவிட்டது. உங்கள் உடலில் செயல்படும் புத்துணர்ச்சி முறை சரியாக தூண்டப்படுமானால் வயோதிகம் உங்களுக்கு இம்சையில்லாமல் கழியும்.
ரெஜுவினேஷன் சென்டரின் செயல்பாடு குறித்து சத்குரு அவர்கள் கூறும்போது, “இங்கு உடலின் முழு அமைப்புமே முற்றிலும் புதிய விதத்தில் கையாளப்படுகிறது. உங்களுடைய உடல் அனுக்களையும் வளர்சிதை மாற்றத்தையும் தூண்டிவிடுவதன் மூலம் உங்கள் உடலே தன்னை திருத்தி அமைத்துக் கொள்கிறது. நீங்கள் எந்த மாதிரியான மருந்து உட்கொண்டாலும் உங்கள் உடல் குணமடைவது, இந்த உடல் தன்னைத் தானே திருத்திக் கொள்வதால் மட்டுமே தவிர மருந்தினால் அல்ல. இங்கு சரிவிகிதமான உணவு, சரியான உடற்பயிற்சி, குறிப்பிட்ட சிலவகையான மூலிகைகள் போன்றவற்றுடன் உங்கள் உடல் இயக்கத்திற்கு பெரிய அளவில் புத்துணர்வூட்ட முடிகிறது. இன்றைக்கு வயோதிகம் என்றால் மருந்து, மாத்திரை, என்றாகிவிட்டது. உங்கள் உடலில் செயல்படும் புத்துணர்ச்சி முறை சரியாக தூண்டப்படுமானால் வயோதிகம் உங்களுக்கு இம்சையில்லாமல் கழியும்” என்கிறார். இந்த குறிப்பிட்ட முறையில் உடலை அணுகுவதாலேயே இங்கு வந்த பலரும் பலவிதமான உடற்குறைகள் நீங்கி குணமாகியுள்ளனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த மையத்தில், சித்த மருத்துவ முறை, ஆயுர்வேத மற்றும் குறிப்பிட்ட வகையான நேச்சுரோபதி சிகிச்சைகள் பழங்கால யோக முறைகளோடு தேவைக்கேற்ப சிகிச்சை வழங்கப்படுகிறது. சித்த மருத்துவத்திலும் ஆங்கில மருவத்திலும் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் மையத்திலேயே உள்ளனர்.
2

சுநேத்ரா - கண் பயிற்சி வகுப்பு

‘சு‘ என்றால் நல்ல, ‘நேத்ரா‘ என்றால் கண்கள். சத்குருவால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பயிற்சி வகுப்பு ஈஷா யோகா மையத்தில் 2 மாதத்திற்கு ஒரு முறை 5 நாள் வகுப்பாக வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மையோஃபியா(கிட்டப்பார்வை) மற்றும் ஹைபெரோபியா(தூரப்பார்வை) ஆகிய கண் பிரச்சனைகளைக் கையாளுவதற்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக கண் நோய்களில் 95% நோய்கள் இங்கு கையாளப்படுகின்றன. கண்களுக்கான யோகப் பயிற்சிகள், தனி உணவு மற்றும் பல கண் சிகிச்சை முறைகளும் வழங்கப்படுகின்றன. சுநேத்ரா நிகழ்ச்சியின்போது, அனைத்து புத்துணர்வு நிகழ்ச்சிகளிலும் அளிக்கப்படுகிற வன நடைப்பயிற்சியும், தனித்தன்மையான மசாஜ்முறைகளும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே கண் கண்ணாடி அணிந்தவர்கள், இங்கு கற்றுத் தரப்படும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்ததன் மூலம், கண் கண்ணாடிகளைக் கழற்றியிருக்கின்றனர்.

பகிர்தல்

என் பெயர் ஷீலா ராஜ்தேவ். சிறுவயதிலிருந்தே பார்வைக் குறையால் அவதிப்பட்டு வந்தேன். இரு கண்களிலும் எனது பார்வை 6.5 ஆக இருந்தது. லேசர் சிகிச்சையின் பிறகு எனது பார்வையில் முன்னேற்றம் கண்டேன். ஆனால், அடிக்கடி எனது கண்கள் உலர ஆரம்பித்துவிட்டன. நாளடைவில் பிரச்சனை மிகத் தீவிரமாகிவிட்டது. பல நாட்களில் இரவில் கண்கள் மூடிக்கொள்ளும். அப்போதெல்லாம் கஷ்டப்பட்டு கண்களைத் திறந்து கண் மருந்தை விட்டுக் கொள்வேன். எங்கு சென்றாலும் கண் மருந்தை கையில் எடுத்துச் செல்வேன். குறைந்தது 10 டாக்டர்களையாவது பார்த்திருப்பேன். ஒவ்வொரு டாக்டரும் ஒவ்வொரு மருந்தை சிபாரிசு செய்தார்கள். எனது கண்ணீர் குழாய்கூட தற்காலிகமாக மூடிக் கொண்டது.

ஈஷா யோக மையத்தின் சுநேத்ரா பயிற்சியில் கலந்துகொண்டேன். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. அங்கு கற்றுக்கொடுக்கப்பட்ட யோகப் பயிற்சிகளும் அறிவுறுத்தப்பட்ட உணவு முறைகளும் மிக எளிமையாகவும், அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க முடிவதாகவும் இருந்ததோடு, என் கண் பிரச்சனை தீர மிகவும் உதவியாக இருந்தன. என் கண்கள் மிகவும் ஓய்வு நிலையில் இருந்தன. எனது பார்வை, கண்களின் ஓய்வு நிலை பொறுத்தே உள்ளது என்பதைப் புரிந்துகொண்டேன்.

அதுவரை கண்களில்தான் ஏதோ பிரச்சனை என நினைத்திருந்தேன். நான் கண்களை உபயோகப்படுத்திய விதத்தில், எனது கழுத்தும் தோள்பட்டையும்கூட அழுத்தத்தில் இருந்திருக்கின்றன என்பதை பயிற்சி வகுப்புகளின்போது அறிந்து கொண்டேன். கண்களுக்காகப் பயிற்சியில் கலந்துகொண்டாலும், உடலைப்பற்றியும் அதை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வழிகள் பற்றியும் அப்போது கற்றுக்கொண்டேன்!

யோக மார்கா

ரெஜுவினேஷன் சென்டரில், குறிப்பிட்ட இடைவெளிகளில், தொடர்ந்து யோக சிகிச்சை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. "யோக மார்கா" என்னும் 21 நாள் யோக சிகிச்சை வகுப்பு. இந்த சிகிச்சை வகுப்பில் கிட்டத்தட்ட எல்லா வகையான நாட்பட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் சர்க்கரை நோய், தலைவலி, உடற் பருமன், சைனஸ், மூட்டு வலி, ஹைப்பர் டென்ஷன், இருதயம் சம்பந்தமான பிரச்சினைகளும் உள்ளடக்கம்.

யோக சிகிச்சை வகுப்புகள் ஒருபுறமிருக்க ஒருவருக்கு புத்துணர்ச்சியைத் தரும் புத்துணர்வு நிகழ்ச்சிகளும் மறுபுறம் நடந்து கொண்டிருக்கிறது. திரு, சுனில் அவர்கள் மேற்கொண்டது ஆயுர் ரசாயனா எனப்படும் ஒரு புத்துணர்வு நிகழ்ச்சியைத் தான். இளவயதான இவருக்கு எதற்கு புத்துணர்வு சிகிச்சை என்று நீங்கள் கேட்கலாம். இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் இள வயதினரும் மன அழுத்தம், அதனால் ஏற்படும் மன உளைச்சல் என்று பாதிக்கப்படுகின்றனர்.
3
4

புத்துணர்வுக்கான ஆயுர் நிகழ்ச்சிகளோ அல்லது சிகிச்சைக்கான ‘யோக மார்க்கா’வோ, இங்கு கற்றுத்தரப்படும் பயிற்சிகளை தொடர்ச்சியாக பயிற்சி செய்து வருவதன் மூலமும் வாழ்க்கை முறையை சீராய் மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலமும் ஒருவருக்கு ஆரோக்கியம் என்பது எட்டா கனியாய் அல்லாமல் தினசரி வாழ்க்கையில் நிதர்சனமாக ஆக முடியும்.

கண்களுக்கான அடுத்த சிறப்பு வகுப்பான "சுநேத்ரா", வரும் மே 3ம் தேதி தொடங்குகிறது. 21 நாள் "யோக மார்கா" மே மாதம் 21ம் தேதி தொடங்குகிறது.

வகுப்புகள் பற்றி மேலும் விபரங்களுக்கு

ஈஷா புத்துணர்வு மையத்தைப் பற்றி மேலும் அறிய
தொ.பே: 0422 - 2515464, 9489045084
இ-மெயில்: isharejuvenation@ishafoundation.org