சம்மர் ஸ்பெஷல் உணவுகள்…

சம்மர் ஸ்பெஷல் உணவுகள்…

ஈஷா ருசி

சுவை விரும்பிகளுக்கும், உடல் நல ஆர்வலர்களுக்கும், அக்னி நட்சத்திரத்தின் சுட்டெரிக்கும் சூட்டில், குளிர்ச்சி, சுவை மற்றும் ஆரோக்கியம் தரக்கூடிய இரு உணவு வகைகள் உள்ளே…

வாழைத்தண்டு பச்சடி

தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு – 1 துண்டு
இஞ்சி – 10 கிராம்
புளிக்காத தயிர் – 1 டம்ளர்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

வாழைத்தண்டு, இஞ்சி, கொத்தமல்லி மிகச் சிறியதாக வெட்டிக் கொள்ளவும். அதில் புளிக்காத தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். வாழைத்தண்டு பச்சடி தயார். இது உடலுக்கு குளிர்ச்சி தரும். மற்றும் சிறுநீரகத்திற்கு சிறந்தது.

எலுமிச்சை புதினா ஜுஸ்

Mint-Juice

தேவையான பொருட்கள்

எலுமிச்சை – 1
புதினா – 1 கைப்பிடி

செய்முறை

புதினா, எலுமிச்சை சாறு இரண்டையும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, உப்பு அல்லது பனஞ்சர்க்கரை சேர்த்து அருந்தலாம். இது வெயிலுக்கு ஏற்ற சுவையான பானம்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert