சம்மர் ஸ்பெஷல் ஜூஸ் வகைகள்!

சம்மர் ஸ்பெஷல் ஜூஸ் வகைகள் !

ஈஷா ருசி

கோடை வெயில் நம்மீது ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைக்க தினமும் பழச்சாறு மற்றும் நார்சத்து நிறைந்த உணவுப் பொருட்களும் அதிக அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. இவைகளை மிகவும் எளிமையாக வீட்டில் நீங்களே தயாரிப்பதற்காக இங்கே சில உணவுக் குறிப்புகள்…

எலுமிச்சை புதினா ஜுஸ்

1

எலுமிச்சை – 1
நறுக்கிய புதினா – 2 தேக்கரண்டி

கிளாஸ் நிறைய நீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து உப்பு அல்லது பனஞ்சர்க்கரை சேர்த்து அருந்தலாம்!

நன்னாரி வேர் ஜுஸ்

2

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி வேர் – 1/2 தேக்கரண்டி

2 டம்ளர் நீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவைத்து வடிகட்டி, 1 எலுமிச்சை சேர்த்து பனஞ்சர்க்கரை (அ) சர்க்கரை சேர்த்துப் பருகவும்!

வெள்ளரிக்காய் தயிர் ஜுஸ்

3

வெள்ளரிக்காய் – 50 கிராம்
தயிர் – 100 மி.லி

மிக்ஸியில் அடித்து உப்பு, மிகப் பொடிதாக நறுக்கிய புதினா, குடமிளகாய் சேர்த்து ருசிக்கலாம்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert