ஈஷாவின் இதயங்களை இன்பத் தாளமிடச் செய்யும் 'சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக்குழு', சமீபத்தில் தெய்வீகக் கவி கபீர் அவர்களின் அழகிய ஒரு பாடலுக்கு இசை வடிவம் கொடுத்துள்ளது. இந்தி மொழியில் அமைந்துள்ள "சுன்த்தா ஹே!" எனும் இப்பாடல், சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் புதுவரவு. அப்பாடலின் பொருள் விளக்கம் உங்களுக்காக இங்கே!

15ஆம் நூற்றாண்டில் காசியில் பிறந்து தனது ஒப்பற்ற ஆன்மீக அனுபவத்தால் பல ஞானக் கவிகளை இயற்றிய கபீர் அவர்கள், தனது பாடல் வரிகளால் ஆன்மீகத் தேடலுள்ள ஒவ்வோர் இதயத்தையும் கசிந்துருகச் செய்யவல்லவர். பொன், பொருள், இன்பமெனும் மாயையில் சிக்கி உழலும் மானுடர்களுக்கு உண்மையை உணரச் செய்யும் ஞானக் கருத்துகளை கவித்துவமிக்க வரிகளாக இயற்றிய ஒப்பற்ற கவி கபீர் அவர்கள்.
அப்படிப்பட்ட ஒரு அழகிய பாடல் இதோ இங்கே ஈஷாவில் இசை வடிவம் பெற்றது!

Suntha hai guru gyani
Gagan me awaaz ho rahi hai jheeni jheeni
Suntha hai guru gyani

So says the voice and words of the Guru. The divine sound originates in the sky.

குருவின் குரலும், வார்த்தைகளும் எனக்குச் சொல்லும்,
தெய்வீக ராகம் பரந்த வானில் பிறக்கிறதென்று!

Paahi liyaye
Naad bindu se peechhe jamaya paani ho ji
Sab ghat puran guru rahya hai
Alakh purush nirvaani ho ji
Suntha hai guru gyani

The soul originated from “nada bindu”. “Nada”, the sound and “Bindu”, the seed. The “Bindu” represents the male while “Nada”, the female energy. So says the voice of the Guru.

ஆன்மாவானது "நாதபிந்து" விலிருந்து உதிக்கிறது
"நாதம்" என்பது ஒலி
"பிந்து" என்பது மூலம் அல்லது விதை
பிந்து ஆண்சக்தியாகவும் நாதம் பெண் சக்தியாகவும் உள்ளது
என்று குருவின் குரல் எனக்குச் சொல்லும்!

Vahaa se aaya pata likhaya
Trushna toone bujhai
Amrut chhod chhod vishay ko dhaave
Khol de phaans phansaani ho ji
Suntha hai guru gyani

Your being arrived from there to an address in this world, to quench its own thirst – the desire for God. But putting nectar aside, you drink poison again and again. Going in reverse, you now toss and turn in your own trap.

இந்த பூமிக்கு உனது வருகையானது
கடவுளை அடையும் நோக்கில்தான் இருந்தது
ஆனால் அதனைப் புறந்தள்ளிவிட்டு
நீ மீண்டும் மீண்டும் நஞ்சை பருகினாய்
பின்னோக்கி சென்றபடி
அங்குமிங்கும் அலைமோதி
உனக்கு நீயே வலைவிரித்து
அதில் நீயே சிக்கிக் கொள்கிறாய்
என்று குருவின் குரல் எனக்குச் சொல்லும்!

Gagan mandal mein koi
Boi pe dahi jamaya
Makhan makhan santon ne khaya
Chhar jagat babarani ho ji
Suntha hai guru gyani

The celestial cow of knowledge, Brahman is milked for the benefit of everyone. Knowledgeable, wise men opt for the butter (spiritual knowledge) while the world out of ignorance are content with the butter milk.

ஞானப் பசுவான
தேவலோக காமதேனுவிடம்
சுரக்கும் ஞானப் பாலை
அனைவருக்கும் அருள் வழங்கவே
பிரம்மன் கறந்தான்
அறியாமை எனும் மாயை கலந்த
அந்தப் பாலிலிருந்து
உயர்மதியுடையோரால் ஆன்ம ஞானமெனும்
வெண்ணையை தனியே பிரித்தெடுக்க முடியும்
என்று குருவின் குரல் எனக்குச் சொல்லும்!

Bin dharti ek ma daal deeje
Bin taruvar joo paani re
Gagan mandal me hoye ujiyala
Bol guru-mukh baani ho ji
Suntha hai guru gyani

Instead of seeing earth, see it as merely a sphere. Seeing a lake, understand it is nothing but water. When one starts experiencing the underlying unifying principle over apparent diversity and duality, knowing dawns. So says the voice and words of the Guru.

பூமியை கிரகமாகப் பார்ப்பதற்கு பதிலாக
வெறும் ஒரு உருண்டை பந்தாகப் பார்
ஒரு ஏரியை வெறும் நீர்நிலையாகப் பார்
எப்போது ஒருவன் பன்முக வேறுபாடுகளையும் இருமை நிலையையும்
கடந்து ஒன்றாக உணர்கிறானோ
அப்போதே புரிதல் வருகிறது!
என்று குருவின் குரல் எனக்குச் சொல்லும்!

Oham soham baja baje
Tipu ki tham suhani re
Ida pingala sukhman nari
Sunatha ja behrani ho ji
Suntha hai guru gyani

When this happens, all the questions like “Who am I” and “So am I” are answered. Ida and Pingala are pacified and Sushmna is activated, says the teacher from the sky.

இது நிகழும்போது
"நான் யார்? ஏன் இங்கிருக்கிறேன்?"
இதுபோன்ற எல்லா கேள்விகளுக்கும்
விடை கிடைக்கிறது!
ஈடா-பிங்களா சமனிலையாகிறது
சூட்சுமா இயங்கத் துவங்குகிறது
இதைத்தான் வானுலக குரு கூறுகிறார்!

Kahe Kabir suno bhai saadho
Jaag agam ke baani re
Din bhar re jo nazar bhar dekhe
Ajar amar ho nishani ho ji

Kabir says, “Listen, Oh righteous brother. Understand and experience and become one with the non-ageing and eternal one principle who looks after this entire universe every single moment.”

கபீர் சொல்கிறார் "கேளுங்கள் சகோதரர்களே! ஒவ்வொரு கணத்திலும், இந்த பிரபஞ்சத்தை காக்கும் அந்த உயர்ந்த, காலம் கடந்த தத்துவத்தை உணர்ந்து, அனுபவித்து அதனுடன் ஒன்றிக் கரைந்திடுங்கள்"

Suntha hai guru gyani
Gagan me awaaz ho rahi hai jheeni jheeni
Suntha hai guru gyani

So says the voice and words of the Guru. The divine sound originates in the Sky.

குருவின் குரலும், வார்த்தைகளும் எனக்குச் சொல்லும்,
தெய்வீக ராகம் பரந்த வானில் பிறக்கிறதென்று!

ஆசிரியர்: சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் பாடல்களை உடனுக்குடன் கேட்டு ரசிக்க Sounds of Isha சேனலில் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.