"பாடத் தெரிந்தவர்கள் பாடலாம், தாளம் போடுபவர்கள் போடலாம்" என்று துவங்கிய சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இன்று தொடர் நிகழ்ச்சிகளின் மூலமும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவினாலும் பெருத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

தாளமும் மேளமும் சேர கைதட்டி தலையாட்டும் இசை ஒரு ரகம் என்றால், வாய் பொத்தி மௌனத்தில் லயித்திருக்கும் இசை மற்றொரு ரகம். இன்றுவரை நாம் கேட்ட சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இரண்டு வகையினரையும் மிக திருப்திபடுத்தி உள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கொண்டாட்டத்தின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லும் Celebration ஒரு பக்கம், பக்தியின் ரசத்தை சுவைக்கச் செய்யும் Neem & Turmeric மறுபக்கம் என நம்மை தம் கீதத்தால் சிலிர்த்திடச் செய்த குழுவினரிடமிருந்து மற்றுமொரு அற்புத படைப்பு 'வைராக்யா'
.
பாடல்களாக ஒலித்த பிற டிவிடிக்களிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டு, பிரம்மசசாரிகளின் சக்தி சங்கமத்தில் எழுந்த பாடல்கள் இன்று ஒலியுருவம் பெற்றுள்ளன.

ஈஷா பிரம்மச்சாரிகள் உச்சாடனம் செய்த இந்த சக்திவாய்ந்த மந்திரம், ஒலி நாடாவாக வைராக்யா என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. நான் இதுவும் இல்லை, அதுவும் இல்லை. அப்படியென்றால் நான் 'உயர்ந்தவனோ' உயர்ந்தவனும் இல்லை. அப்படியென்றால் நான் வெற்றிடமா என்றால், வெற்றிடமும் இல்லை. அப்படியென்றால் ஒன்றுமில்லாத தன்மையா? என்றால் அதுவும் இல்லை என்று தொடரும் இந்த பாடலை தினமும் கேட்பது நமக்கு பல நன்மைகளை வழங்கும் என்கிறார் சத்குரு.

வைராக்யா என்றால் நிறங்களுக்கு அப்பாற்பட்ட தன்மையை குறிக்கிறது. அப்படியென்றால் நீங்கள் எந்த குணமும் இல்லாமல் அதனுடன் இருக்கிறீர்களோ அதனை முழுமையாக உங்களுக்குள் ஊடுருவ அனுமதிக்கிறீர்கள்.

'மனோ புத்தி அஹங்கார...' உங்களுக்காக...


பத்து நிமிடங்கள் மட்டுமே உள்ள இந்த பாடல் தவிர, ஒரு மணி நேரம் தொடர்ந்து கேட்கக் கூடிய உச்சாடனத்தை டவுன்லோடு செய்ய இங்கே சொடுக்குங்கள்

ஆன்மீக சாரம் கொண்ட பாடல்கள் வரிசையில், பிற வைராக்யா உச்சாடனங்களும் விரைவில் உங்களுக்காக இந்த வலைப்பக்கத்தில். எங்களின் இந்த பணிக்கு உதவிட இந்த முழு ஆல்பத்தையும் இவ்விடத்தில் வாங்கலாம்.