ஈஷா ருசி

சத்துமிக்க கீரை வகைகளில் ஒன்றான சிறுகீரை கொண்டு புலவ் செய்யும் செய்முறையை இங்கே படித்தறியுங்கள்! செய்து சாப்பிடுங்கள்!

சிறுகீரை புலவ்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்
நறுக்கியகீரை - 1 கப்
தேங்காய் துருவல் - கால் கப்
தக்காளி - 1
மிளகாய் - 1
முந்திரி - 4
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

அரிசியை வாணலியில் லேசாக வறுக்கவும். தேங்காய் துருவல், மிளகாய்தூள், முந்திரி, இவற்றை சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கெட்டியாக அரைக்கவும். குக்கரில் 5 ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். நறுக்கிய கீரையைச் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்திருக்கும் விழுது, கரம் மசாலா, மிளகாய்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, வறுத்து வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து மூடி வைக்கவும். 1 விசில் வந்ததும் சிறிது நேரம் சிம்மில் வைத்து இறக்கி வைக்கவும். சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து, நன்றாக கலந்து பரிமாறவும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.