சைனஸ், அலர்ஜிக்கு… ஈஷா ஆரோக்யாவில் இருக்குது வழி!

isha-arogyavin-allergy-approach

ஈஷா ஆரோக்யா – சித்தா, ஆயுர்வேதா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் மருத்துவம். ஈஷா ஆரோக்யாவின் சில மருத்துவக் குறிப்புகள் இங்கே…

நோய் கண்டறிதல் (Diagnosis)

அறிகுறிகள்

சுவாசப்பாதை அலர்ஜி பொதுவாக மூக்கடைப்பு, சைனஸ் தலைவலி, தும்பல், இருமல் தொடங்கி வீஸிங், மூச்சு விடுதலில் சிரமம் வரை அறிகுறிகளாய் வெளிப்படும். ஒவ்வொருவரின் உடல் தன்மை மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அலர்ஜி இருப்பின், தீவிரம் வேறுபடும். சிலருக்கு தோலில் தடிப்புகளும் சேர்ந்து ஏற்படலாம்.

மருத்துவம்

துளசி, ஆடாதொடை, தூதுவளை, விஷ்ணு கரந்தை போன்ற அற்புத மூலிகைகளின் குணநலன்களை உணர்ந்த நம் சித்தர்கள் மூலம் அலர்ஜி போன்ற சுவாசப் பாதை பிரச்சனைகளுக்கு, இவை அருமருந்தாய் பயன்படுவதை அறிகிறோம்.

தற்போது, எளியமுறையில் உட்கொள்ள மாத்திரைகளாகவும், சிரப் வடிவிலும், ஒவ்வொருவரின் நோய் தன்மைக்கேற்ப தகுந்த கால அளவிற்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

வெள்ளெருக்கு மற்றும் மிளகு சேர்ந்த மாத்திரைகள்; சுக்கு, திப்பிலி மற்றும் தாளிசாதி சேர்ந்த மருந்துகள் உட்கொள்பவரின் நோய் எதிர்ப்பு மண்டலமும், சுவாச மண்டலமும் சீரடைகிறது. அதுமட்டுமல்லாமல் குறுகிய கால அளவிலேயே எவ்வித பக்க விளைவுமின்றி ஆரோக்கிய நிலையில், முன்னேற்றமும் ஏற்படுகின்றது.

மேலும் ‘நசியம்‘ எனும் பாரம்பரிய ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சை மூலம், நாசிப்பாதை, சைனஸ்கள் சுத்தம் செய்யப்பட்டு, சுவாசம் சமநிலைப்படுவதால், சுவாச அலர்ஜி, சைனஸின் தீவிரம் பெருமளவு குறைகிறது. இது 7 முதல் 14 நாட்கள் வரை எடுத்துக்கொள்வது நலம்.

பாரம்பரிய பாட்டி வைத்தியமாய் குழந்தைகளுக்குத் தரப்பட்ட கஸ்தூரி, கோரோசனை, உரை மருந்து போன்றவை அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற்று அலர்ஜி வராமல் தடுக்கின்றன. ஈஷா ஆரோக்யா மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு இவை ஒரு வரப்பிரசாதம். ஆன்டிபயாட்டிக்குகள், ஸ்டிராய்டுகளின் தேவை பெருமளவு குறையும்.

எனினும் அலர்ஜி தீவிர நிலையில் இருக்கும்போது மட்டும் அதை தற்காலிகமாக கட்டுப்படுத்த ஆங்கில மருந்துகளின் பயன்பாடு தேவை.

‘ஜலநேத்தி’ எனும் எளிய இயற்கை வழிமுறையை தங்கள் இல்லங்களில் அன்றாடம் பின்பற்ற மையத்தில் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு 13 மாத கால தொடர் மருத்துவம், அலர்ஜிக்கான காரணிகள் தவிர்ப்பது, எளிய முறை யோகப் பயிற்சிகள் செய்வதன் மூலம், நிச்சயமாக அலர்ஜியற்ற வாழ்வு அனைவருக்கும் சாத்தியமே!

ஈஷா ஆரோக்யா
சென்னை 044 – 42128847
சேலம் 04272333232 / 9442548852
கோவை 83000 55555
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert