சிவாங்கா – அருள் பெறும் வழி

சிவாங்கா விரதமிருந்து கோவில் செல்வோம்!

பக்தி ஒருவரை அறிவுத்திறனின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது என்கிறார் சத்குரு. காலம் காலமாக நம் பாரம்பரியத்தில் பக்திக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை பல பாடல்கள் பேசுகின்றன. இதோ நம் பக்தியை ஸ்திரப்படுத்திக் கொண்டு அருள் பெற சிவாங்கா…

பூமியின் வடக்கு பாகத்தில், சூரியன் பயணிக்கும் 6 மாத காலகட்டத்தை உத்தராயணம் என்று குறிப்பிடுகிறோம். அருளையும் ஞானத்தையும் உள்வாங்கிக் கொள்வதற்கு இது மிகச் சரியான நேரம். அதிலும் குறிப்பாக உத்தராயணத்தின் முதல் பாதி அதாவது மார்ச் மாதம் முடியும் வரை அதிகபட்சமான அருளைப் பெறுவதற்கு மிகச் சிறப்பான நேரம்.

இந்த காலகட்டத்தை ஒருவர் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதற்காக, சத்குருவின் வழிகாட்டுதலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருவேறு சாதனாக்களும் விரதங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெண்கள் ஜனவரி 3ல் ஆரம்பித்து தைப்பூசம் வரை (தன்ய பௌர்ணமி) 21 நாட்கள் விரதமிருந்து சாதனா செய்வர். ஆண்கள் ஜனவரி 23ல் துவங்கி மஹாசிவராத்திரி வரை 42 நாட்கள் விரதமிருந்து சாதனா செய்வார்கள்.

21 நாட்கள் விரதமிருந்து, மாலை அணிந்திருக்கும் பெண் பக்தர்கள் மிக விஷேமான தைப்பூச தினத்தன்று தேவி லிங்கபைரவியை தரிசித்து, தொழுது விரதத்தை பூர்த்தி செய்வார்கள். ஆண்களோ, 42 நாட்கள் விரதமிருந்து மஹாசிவராத்திரி இரவில் வெள்ளியங்கிரி மலையில் யாத்திரை செய்து மறுநாள் காலை தியானலிங்க வளாகத்தில் விரதத்தை நிறைவு செய்வார்கள். இந்த வாய்ப்பு அருள் தேடும் அனைவருக்கும் – ஈஷாவில் வகுப்பு செய்தோர், செய்யாதவர், எல்லோருக்கும் வழங்கப்படுகிறது.

மலையேறி மகேசனின் அருள் பெறவும், தேவியின் அருள் நம் இல்லத்தில் நிறையவும் இது அற்புதமான ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சிறப்பு நாட்களில் விரதமிருந்து இறையருள் பெறுவோம்!

விவரங்களுக்கு

ஆண்களுக்கான சிவாங்கா சாதனாவிற்கு:
தொலைபேசி : 83000 15111
இ – மெயில் : info@shivanga.org

பெண்களுக்கான சிவாங்கா சாதனாவிற்கு:
தொலைபேசி : 83000 30666
இ – மெயில் : shivanga@lingabhairavi.org
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert