முன்பெல்லாம் நடுத்தர வயதில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி வந்தாலே பெரிதாக பேசப்பட்டது. இப்போதோ முப்பது வயதிலேயே சாதரணமாக சர்க்கரை நோயாளியாகி விடுகின்றனர். சரி! இதற்கு யோகாவில் ஏதாவது தீர்விருக்கிறதா? ஏன் இல்லை..! இந்த கட்டுரை, டயாபடீஸை யோகா எப்படி சரி செய்கிறது என்பதை விளக்குகிறது!

சத்குரு:

நாட்பட்ட நோய்க்கான காரணிகள்

நாட்பட்ட வியாதி எதுவாக இருந்தாலும் அதன் அடிப்படை காரணம், உடம்பின் சக்திநிலை பாதிப்பாக இருப்பதுதான். நம் சக்திநிலையின் செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட வகையிலேயே அமைந்திருக்கின்றன. நாம் வாழும் சுற்றுச்சூழல், உண்ணும் உணவு, நமது உறவுகளின் தன்மை, உணர்வுகள், மனப்பக்குவம், நினைவுகள்,

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஆலோபதி முறை என்பது விளைவுகளை (symptom) சரி செய்யும் சிகிச்சையாகும். எனவே வியாதிகளினால் ஏற்படும் பாதிப்புகளை, விளைவுகளை சோதித்து அவைகளை மட்டுமே குணப்படுத்த சிகிச்சை தரப்படுகிறது.

அபிப்ராயங்கள் இவைகளுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகள் அமைகின்றன. வெளிச்சூழ்நிலையானது, உள்சக்திநிலையை பாதிப்படைய வைக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் நம் உடம்பின் சக்திநிலை பாதிக்கப்பட்டால் அது ஸ்தூலமான உடலுக்கும் சூட்சுமமான உள்நிலைக்கும் பாதகம் ஏற்படுத்தக்கூடும். ஒன்றுக்கொன்று பொருந்தியிருக்கும் காரணத்தால் உடலின் ஒரு பரிமாணத்தில் ஏற்படும் பாதிப்பானது மற்றவைகளிலும் எதிரொலிக்கும். எனவே சக்திநிலையில் ஏற்படும் பாதகம் திட உடம்பு, மன உடம்பு ஆகியவற்றையும் பாதிக்க வைக்கும். இத்தகைய பாதிப்பு மருத்துவரீதியான பிரச்சினையாகும் போதுதான் மருத்துவர் கவனிக்க வேண்டியுள்ளது. வெறும் மனரீதியானதாக மட்டும் இருக்கும்போது மருத்துவர் வரை நாம் செல்வதில்லை.

ஏன் சர்க்கரை வியாதி?

துரதிஷ்டவசமாக மருத்துவ விஞ்ஞானம் வியாதிகளைப் பற்றி மட்டுமே புரிந்துகொள்கிறது. நோய்க்கான மூலகாரணத்தை அவை ஆராய்வதில்லை. நோய் எங்கிருந்து வருகிறது என்பதையும் அடிப்படை ஆரோக்கியம் பற்றியும் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. உங்களுக்கு 'டயபடீஸ்' என்றால் சர்க்கரை தான் உங்கள் பிரச்சனை. அதாவது உங்கள் கணையம் சரியாக வேலை செய்யவில்லை. எனவே உடனடி நடவடிக்கையாக உட்கொள்ளும் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். ஏனெனில் ஆலோபதி சிகிச்சை முறையில் கணையத்தை செயல்பட வைக்க வழிகள் இல்லை. தினமும் சர்க்கரை அளவை சோதித்து 'இன்சுலின்' போட்டுக் கொள்ளுமாறு சொல்லப்படுகிறது. ஆலோபதி முறை என்பது விளைவுகளை (symptom) சரி செய்யும் சிகிச்சையாகும். எனவே வியாதிகளினால் ஏற்படும் பாதிப்புகளை, விளைவுகளை சோதித்து அவைகளை மட்டுமே குணப்படுத்த சிகிச்சை தரப்படுகிறது.

கிருமித் தொற்றுக்கு (infection) ஆலோபதி முறை மிகச் சிறந்த சிகிச்சை. வெளியிலிருந்து வந்து நமது உடம்பைத் தாக்கும் எந்த நோய்க்கும் ஆலோபதி சிகிச்சை மிகமிகப் பயனுள்ள ஒன்றாகும். ஆனால் மனித உடம்புக்குள் தானாக ஏற்படும் சிலவகையான நோய்கள், பாதிப்புகள் இவற்றிற்கு உதாரணமாக டயபடீஸ், இரத்தக் கொதிப்பு (B.P), மைக்ரேன் தலைவலி போன்றவற்றிற்கு ஆலோபதியில் தீர்வு இல்லை.

நவீன மருத்துவ விஞ்ஞானம் நோய்களை எப்படிக் சமாளிப்பது என்பதைப் பற்றித்தான் போதிக்கிறதே தவிர நோய்களை முற்றிலும் ஒழிப்பது பற்றி பேசுவதில்லை. வியாதிகள் ஒரு கட்டுக்குள் இருக்கும்போது அவைகளை எப்படிக் கையாள்வது என்பது பற்றித்தான் மருத்துவ உலகம் முழுமையும் மற்றும் விஷேச பயிற்சி பெற்ற மருத்துவர்களும் பேசுகிறார்கள். நிரந்தரத் தீர்வு ஏதுமின்றி நோய்களின் பாதிப்பை அந்நேரத்திற்கு குணப்படுத்துவதற்காக ஏகப்பட்ட பணம் செலவழிக்கப்படுகிறது. இது மனஅழுத்தத்தை கையாள்வது (stress management) பற்றி மக்கள் பேசுவது மாதிரித்தான். மக்கள் மனஅழுத்தத்தையும், சர்க்கரை நோயையும், இரத்தக் கொதிப்பையும் அப்போதைக்கப்போது (மருந்து உட்கொண்டு) தாற்காலிகமாக சமாளித்துக்கொள்ளத்தான் முயல்கிறார்கள். இது பைத்தியக்காரத்தனமானது.

யோகா முறைகள் - என்ன வித்தியாசம்?

தனது உடலின் உயிர் சக்தி, வாழ்வின் செயல்பாடு எப்படி நிகழ்கிறது என்பதன் அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ளாததன் காரணமாகத்தான் மேற்சொன்ன முட்டாள்தனம் நமக்குள் நுழைந்து ஆதிக்கம் செலுத்துகிறது. நாம் யோக முறையில் சர்க்கரை வியாதியை வெறும் வியாதியாகப் பார்ப்பதில்லை. அதை உடம்பின் அடிப்படை பாதிப்பாக கவனிக்கிறோம். நாம் உடலின் மூலம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்கிறோம். எதனால் இந்நோய் உண்டானது என்று ஆராய்கிறோம். இது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. பாதிப்பின் தன்மையும், அளவும் ஆளாளுக்கு வேறுபடும். எனவே சிகிச்சை தனிநபருக்கு தகுந்தவாறே கொடுக்கப்படும்.

நோய் எதுவாய் இருப்பினும் யோகா மூலம் சக்திநிலை உடம்பை சமன்செய்து, ஆற்றல் அளித்து, துடிப்புள்ளதாக ஆக்குகிறோம். சக்திநிலை சமன்படும்போது திட உடம்பிலோ உள்நிலையிலோ நாட்பட்ட நோய் வராது. நோயின் அறிகுறியைப் பார்க்காமல், அடிப்படையை பார்த்து அது சார்ந்த சக்தி உடலை சீர் செய்வதால் 'டயபடீஸ்' ஓடிவிடும். சில யோக சாதனா முறைகளைப் பயிற்சி செய்து சக்தி உடம்பை துடிப்புள்ளதாக வைத்துக்கொண்டால் எந்த நாட்பட்ட நோயும் நம்மை அணுகாது.