ஒரு நாள் சங்கரன் பிள்ளை தன் நண்பர்களுடன் சேர்ந்து பிசினஸ் செய்ய முடிவு செய்தார்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

சங்கரன் பிள்ளை, பிசினஸ் செய்வதற்காக தன் நண்பர்களுடன் கை கோர்த்தார். எல்லா பிசினசும் ஒன்றன் பின் ஒன்றாக படுதோல்வி அடைந்தது. எப்படியாவது பிழைப்பு நடத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உள்ளான அவர், எதையாவது செய்தே ஆக வேண்டும் என்று சுற்றித் திரிந்தார்.

பின்னர், சென்னையில் டாக்ஸி ஓட்டலாம் என்று முடிவுக்கு வந்த சங்கரன் பிள்ளை, தன் நண்பர்களுடன் மீண்டும் இணைந்து பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கினார். கையில் கொஞ்சம் பணம் அதிகம் இருந்ததால் டாக்ஸி சாஸ்திரப்படி அந்த வண்டிக்கு மஞ்சள், கறுப்பு நிற பெயின்டும் அடித்து முடித்தார்.

ஆவலோடு இரயில் நிலையத்தில் காரை நிறுத்திப் பார்த்தார்கள் ஒருவரும் வரவில்லை. பஸ் ஸ்டான்டில் நிறுத்திப் பார்த்தார்கள் எவரும் ஏறவில்லை. ஏர் போர்ட்டிலும் யாரும் இவர்களை திரும்பிப் பார்க்கவில்லை. நண்பர்கள் நால்வரும் சென்னை முழுவதும் சுற்றி திரிந்தார்கள் ஆனால் ஒருவரும் இவர்கள் வண்டியை கவனிக்கவே இல்லை. இப்படி பெட்ரோலுக்கே ஏகத்துக்கு பணம் செலவழித்த நம் சங்கரன் பிள்ளை & கோவின் காருக்கு ஒரு கஸ்டமர் கூட கிடைக்கவில்லை.

நான்கு நண்பர்களும் டாக்ஸிக்குள் அமர்ந்தே கஸ்டமர்களை தேடிக் கொண்டிருந்தனர்!! இதுதான் சங்கரன் பிள்ளையின் வியாபார நுணுக்கம்!! இப்படி வியாபாரம் செய்தால் அது வேலை செய்யாது.

PhotoCourtesy: Malavika Reddy