சத்குருவுடன் ஈஷா யோகா

12 jul 13 (2nd)

14 Jul - 6.50pm

கண்டது ஓவ்வொன்றும் அதிசயம்…

AnandaAlai-Sadhguru15

AnandaAlai-Sadhguru9

AnandaAlai-Sadhguru12

AnandaAlai-Sadhguru10

AnandaAlai-Sadhguru11

AnandaAlai-Sadhguru8

AnandaAlai-Sadhguru6

AnandaAlai-Sadhguru5

கட்டுப்பாடில்லாமல் தட்டுத்தடுமாறிய ஆட்டத்தை பார்த்திருக்கிறோம். விழிப்புணர்வுடன் தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் இந்த அசைவுகள் அதிசயம்.

வாழ்வின் துன்பங்கள் அழுத்த கண்களில் நீர் வழிந்திடலாம். ஆனால் இன்பம் தாங்காமல் கன்னங்கள் நனைவது அதிசயம்.

தொலைக்காட்சி பெட்டியின் முன் மணிக்கணக்கில் கழித்திடலாம். குருவின் மடியில் 3 நாட்கள் அதிசயம்.

நான்கு பேர் சந்திப்பில் மூன்று பேர் தாமதமாய் வரலாம். நாலாயிரம் பேர் கூடும் இடம் சரியான நேரத்தில் துவங்குவது அதிசயம்.

மனம் நொந்து போய்விட்டது. தேவை ஆன்மீகம் என்றார். உயிர் தேடலில் வந்த இளைஞர் கூட்டம் அதிசயம்.

காரணமே இல்லாமல் பல்லாயிரம் மக்கள் குதிக்கிறார். எல்லையில்லா தன்மையை வார்த்தை எல்லைக்குள் அளித்திட்டோம். வலைதளம் வழியாக இணைந்ததற்கு நன்றி!

இனி வேறு ஒரு நிகழ்வில் சந்திக்கிறோம்.

14 Jul - 6.47pm

யோகீஷ்வராய ஒலிக்க பங்கேற்பாளர்களுடன் சத்குரு

AnandaAlai-Sadhguru7

14 Jul - 6.15pm

இறுதிகட்டத்தை அடைந்துவிட்டோம். தீட்சை பெற்றபின் முதல்முறையாக முழு பயிற்சியையும் சத்குருவின் முன்னிலையில் செய்கிறார்கள்…

AnandaAlai-Sadhguru3

AnandaAlai-Sadhguru2

14 Jul - 5.55pm

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி

கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி செய்யும் அன்பர்களை ஆராய்ச்சி செய்தனர். அந்த ஆராய்ச்சி அறிக்கையின்படி சாதாரணமாக ஒரு மனிதர் முப்பது வயதை அடைந்தபின் புதிய நரம்பு செல்கள் பிறக்கும் (neuronal regeneration) விகிதம் குறைகிறது. பழைய செல்கள் இறக்கும் விகிதம் அதிகரிக்கிறது.

அதனால் முப்பத்தைந்து வயதை தாண்டிய ஒரு மனிதர் தன் மூளையின் சக்தியை மெல்ல இழக்கிறார். ஆனால் மூன்று மாதங்கள் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி செய்தபின் இந்த நரம்பு செல்கள் பிறக்கும் விகிதம் (neuronal regeneration) 249% அதிகரிப்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

14 Jul - 5.21pm

ஆசிரியர்கள் தயாராகிவிட்டனர்…

இரண்டு வருட கடுமையான பயிற்சிக்கு பின் நான்கு ஆசிரியர்கள் ஈஷா யோகா வகுப்பு சொல்லித் தர தயாராகி விட்டனர். அவர்களுக்கு மேடையில் ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார் சத்குரு…

14 Jul - 5.13pm

களரி!

AnandaAlai-Sadhguru5

நம் கலை
நம் கலாச்சாரம்
நாம் மறந்து போன கலையும்
அகத்தியரின் அர்ப்பணிப்பும்
இதோ இந்த மேடையில் உயிர்ப்புடன்!

பழையது என்றாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனெனில் அது புதிதாக தெரியும் அளவு மறந்துவிட்டது.

இறுதிகட்ட வகுப்பு துவங்கிவிட்டது…

14 Jul - 3.47pm

தியானம் தேவையா?

AnandaAlai-Sadhguru4

தியானம் எதற்கு? தன்னம்பிக்கை இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம். தியானம் மனதை ஒருமுகப்படுத்துவதாகச் சொல்கிறார்கள். மனதை ஒருமுகப்படுத்தினால் இலக்கை அடையலாம். மனதை ஒருமுகப்படுத்த தியானம் அவசியமா? மேலும் இந்த தியானத்தை கற்றுக் கொள்வதற்கு ஒரு குரு அவசியமா என்ன?

ஒருமுறை நடிகர் சரத்குமார், சத்குருவிடம் கேட்ட கேள்வி இது…

சத்குருவின் பதில்…

தன்னம்பிக்கை உங்களை செயல் படத்தூண்டுமே தவிர அதுவே உங்களுக்கு வெற்றியை தந்து விடாது. தெளிவுதான் உங்களுக்கு வெற்றியைத் தரும். தெளிவில்லாத தன்னம்பிக்கை பேரழிவை ஏற்படுத்தும்.

தியானம் ஒரு தெளிவுக்காகத்தானே தவிர மனதை ஒருமுகப்படுத்த அல்ல.

தியானம் என்கிற கருவி ஒவ்வொரு மனிதனிடமும் இருந்தால் அதன் மூலம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் நிச்சயமாக நன்மை ஏற்படும்.

ஆனா ஆவன்னா கற்றுக் கொள்ளக் கூட ஒரு குருவைத் தேடினீர்கள். குரு இல்லாமல் தியானம் கற்றுக் கொள்ள எவ்வளவு பேரால் முடியும்? எந்த உதவியும் இல்லாமல் தானாகவே கல்வி கற்றுக் கொள்ள எவ்வளவு பேரால் முடியும்? எப்படி கல்விக்கு ஒரு குரு தேவையோ அதேவிதமாக தியானத்திற்கும் ஒரு குரு தேவை.

14 Jul - 2.57pm

ஷாம்பவி தீட்சை

“இப்போது நீங்களும் நானும் தான் இருக்கிறோம், உங்களுக்கும் எனக்கும் நடுவில் வேறு யாரும் இல்லை.”

கண்கள் மூடிய நிலையில், காற்றும் சுவையாய் தான் இருந்தது. அந்த பிரம்மாண்டம் மெல்ல இவர்களை ஆட்கொள்ள உள்ளே நுழைந்தனர் வேறு ஒரு உலகில்!

இது இன்னொரு பரிமாணம். இரவும் பகலும் இணையும் மாலை பரிமாணம்.

14 Jul - 1.39pm

பத்தாயிரம் காலத்து விதை

ஆன்மீக விளை நிலத்தில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யோகிகளால் விதைக்கப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த விதை இந்த ஷாம்பவி மஹா முத்ரா. பல யோகிகளால் தனிமையில் பரிமாறப்பட்டு வந்த ஒரு விஷயம், நெருக்கத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே அந்நியோன்யமாய் வழங்கப்பட்ட இந்த தீட்சை இன்று குருவின் அருளால் 3622 பேருக்கு, வெகு சில நொடிகளில்…

14 Jul - 1.30pm

மார்க்கெட்ல எதுக்கு மவுசு?

நான் கோவை மக்களுக்கெல்லாம் நன்மை செய்யப் போகிறேன் என்று சொன்னால் நீங்கள் காசு கொடுப்பீங்களா? நான் உங்களுக்கு புடிக்காதவங்களுக்கு கெட்டது செய்ய போறேன் என்று சொன்னால் நிறைய காசு கொடுப்பீங்க.

மார்க்கெட்ல கெட்டதுக்கு தானே மவுசு அதிகம். அதுபோல ஷாம்பவி என்பது மிக மிக சக்தி வாய்ந்த கருவி. சக்தியை வைத்து நல்லது செய்வது போல கெட்டது கூட செய்யலாம். அதனால் அதிலிருந்து கெட்டதை எடுப்பதற்கு எனக்கு 21 வருடங்கள் ஆகியது. இதனாலேயே இதுவரை உலகில் இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு இந்த தியானத்தை எவரும் கொடுத்ததில்லை.

இதனை சரியான முறையில் நீங்கள் பெற்றுக் கொள்வது அவசியம்.

14 Jul - 1.09pm

விருக்ஷமாய் தலை விரிக்கும் விதை…

கர்நாடகாவில் விதையை தெய்வமாக வணங்கும் வழக்கம் இருக்கிறது. தன் குழந்தைக்கு இல்லாதபோதும் அதை உண்ணாமல் தெய்வமாக வணங்கினர். பயிரை உண்ணலாம், ஆனால் விதையை? பல தலைமுறையாய் வளர்ந்து வளம் கொழிக்கும் இந்த விதையை கும்பிட்டனர் கர்நாடக விவசாயிகள்.

இன்று உங்களுக்குள் விதைக்கப்பட போவதும் ஒரு சக்தி வாய்ந்த விதைதான். ஷாம்பவி மஹாமுத்ரா விதை. இது வளர நீங்கள் அனுமதிக்க வேண்டும். இதை முறையாக வளர்த்தால், முறைப்படி செய்தால் நம்மை எந்தவொரு பரிமாணத்திற்கும் கொண்டு செல்லும் என்றார் சத்குரு.

14 Jul - 12.43pm

தாயாகி…

Sadhguru-AnandaAlai3

பக்கத்து வீட்டுக்காரர் மேல் பத்து புகார் என்றால் தன் வீட்டு ஆட்கள் மேல் பத்தாயிரம் வைத்திருக்கிறோம். வாழ்க்கை இப்படி பழகிவிட்ட பல பேருக்கு உலகில் உள்ள மக்களுக்கெல்லாம் தன்னை தாயாக உணர்ந்தால் எப்படி இருக்கும்?

உலகில் உள்ள உயிருக்கெல்லாம் தன்னை தாயாக உணர்ந்தால் எப்படி இருக்கும்? அன்புக்காக ஏங்குவதில் வாழ்க்கையை தொலைத்துவிட்ட பலரும், அன்பைக் கொடுப்பதில் இருக்கும் இன்பத்தை உணர்ந்தால் எப்படி இருக்கும்?

தரையும் கூரையும் தூணும் பூவும் காற்றும் அன்பு மயமாகிட தாயாகி போயினரே. கண்ணீரில் கரைந்தனரே! இவர்கள் தாயாகிப் போயினரே…

மௌன இடைவேளை… சற்று நேரத்தில் தீட்சை…

14 Jul - 11.25am

சிரிச்சு சிரிச்சு

Sadhguru-AnandaAlai11

சிரிச்சு சிரிச்சு இப்ப நிறைய பேருக்கு வயிறு வலி வந்துடுச்சு. சத்குருவின் வித்தியாசமான அணுகுமுறை நகைச்சுவை உணர்வு – இதில் தன் இறுக்கத்தை தளர்த்தி லேசாகினர்.

சில நேரங்களில் வார்த்தை, சில நேரங்களில் வெறும் கண் அசைவைக் கொண்டே சத்குரு கூட்டத்தை குலுங்க குலுங்க சிரிக்க வைக்க சிரிப்பு மழையில் மக்கள்.

14 Jul - 11.00am

சத்குருவின் கண்ணசைவில்…

AnandaAlai-Sadhguru10

AnandaAlai-Sadhguru8

AnandaAlai-Sadhguru1

கண்களில் அன்பு, முகத்தில் தாய்மை, பார்வையில் கருணை, ஈர்க்காமல் எப்படி இருக்கும்? சுற்றிக் கொண்டனர். அத்தனை பேரும் சத்குரு சுற்றி சிரித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும். சத்குரு கண்ணசைக்க மேலும் அதிர்ந்தது அரங்கம்.

சத்குரு எழுந்தார், சிரித்தார், குதித்தார். மக்கள் ஓவென கத்திட மேடையில் குறும்புச் சிரிப்புடன் அவரது அதிர்வில் சுமார் ஒரு மணி நேரம் மக்கள் தன் உடல் மறந்தனர். தான் எங்கு இருக்கிறோம் என்றே மறந்தனர். தன் வயதென்ன, தான் ஆணா, பெண்ணா என்பதை மறந்தனர்…

14 Jul - 10.46am

சத்குரு ஆனந்தத் தாண்டவத்தில்…

AnandaAlai-Sadhguru4

ஐயோ பற்றிக் கொண்டது! என்ன தொற்று நோயா? நோய் மட்டுமா, ஆனந்தமும் பரவும்தானே?

சவுண்ட்ஸ் ஈஷாவின் துள்ளல் இசை, இந்த மனிதரின் ஆனந்த அதிர்வுகள், கால்கள் ஆடாமல் எப்படி இருக்கும்? வயதான பாட்டியும், மூட்டு வலி மாமியும் மேலும் யோசித்து யோசித்து நின்று கொண்டிருந்தவர்களெல்லாம், இருக்கையும் இடமும் மறந்து, மேளத்தில் தாளத்தில் தன்னைத் தொலைத்து ஆனந்தத்தில் குதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களது துள்ளலுக்கு ஆதியோகி ஆலயம் தரை தாங்குமா, உடைந்து விடுமா? நெஞ்சு பொருக்காமல், ஒரு மனிதர் விடாமல் அத்தனை பேரின் கால்களும் காற்றில். சவுன்ட்ஸ் ஆப் ஈஷா இடைவிடாமல் 45 நிமிடம் இடி முழங்கியது. சத்குருவும் கலந்து கொண்டார், இந்த ஆனந்தத் தாண்டவத்தில்…

14 Jul - 10.05am

சத்குரு வந்துவிட்டார்…

இடைவேளையைத் தவிர நேற்று நாள் முழுக்க சத்குரு பங்கேற்பாளர்களுடன்தான் இருந்தார். விழித்திருக்கும் நேரமெல்லாம் இவர்களை விழிப்பாய் வைத்திருந்தார். இரண்டு நாட்களில் இதயம் அளித்துவிட்டனர்.

எப்போது வருவார்? ஏக்கத்தில் இருந்த மக்களுக்கு பதிலாக இதோ சத்குரு மேடையில்…

சம்ஸ்கிருதியின் களரி, சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் இன்னிசையில் வகுப்பு துவங்கியுள்ளது.

AnandaAlai-Sadhguru6

AnandaAlai-Sadhguru7

14 Jul - 9.51am

வகுப்பு துவங்கிவிட்டது…

உணவு இடைவேளைக்கு பிறகு, தீட்சை நாளின் மிக முக்கிய வகுப்பு துவங்கிவிட்டது. வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்நேரத்திலும் சத்குரு மேடைக்கு வரலாம்…

14 Jul - 9.12am

பலவிதமான தியானங்கள் இருக்கிறது!

புத்தமத தியானம், ஜென் தியானம், பதஞ்சலி முனிவர் தியானம், குண்டலினி தியானம் என பல தியானங்கள் இருக்க, ஈஷாவில் தான் தியானம் கற்றுக் கொள்ள வேண்டுமா?

வெளியூர்களிலிருந்து கோவை நோக்கி இந்த மெகா வகுப்புக்காக பயணித்தவர்கள் அனைவரையும் பலரும் இப்படி பல கேள்விகளால் துளைத்திருப்பார்கள்!

அடிப்படையில் தியானத்தன்மை என்பது ஒன்றுதான். தியானத்தின் முறைகள் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். ஒவ்வொரு காலத்திலும் மக்கள் எப்படி இருக்கிறார்களோ அதற்கேற்ற முறைகளில் தியானம் சொல்லித் தரப்பட்டு வந்திருக்கிறது.

புத்தர் 2500 வருடங்களுக்கு முன்னர் இருந்தார். அவரைச் சுற்றி என்னவிதமான மனிதர்கள் இருந்தார்களோ அதற்கேற்ற முறையை அவர் போதித்தார்.

ஒவ்வொரு குருவும் தன் காலத்தில் இருக்கும் மக்களுக்கும் கலாச்சாரத்திற்கும் சூழ்நிலைக்கும் எது ஒத்து வருகிறதோ அதற்கேற்ப சொல்லித் தருகிறார்கள். அதனால் தற்காலத்திற்கு ஏற்ற புதிய வடிவில் தற்போது ஈஷா யோகா!

14 Jul - 8.43am

வகுப்பிலும் புன்னகை, இடைவெளியிலும் புன்னகை…

இடைவேளையில் பல புன்னகைகளையேந்தி ஆனந்தமாக செல்லும் முகங்களை அணுகினோம்.

“காலைல எழுந்திக்கிறதெல்லாம் கஷ்டமாவே தெரியல. சத்குரு கூட இருக்கும் போது புத்துணர்வா இருக்கு. டானிக் குடிச்ச மாதிரி இருக்கு. வாக்கிங் ஜாகிங் மாதிரி இதுவும் என்னை டயர்ட் ஆக்கிடும்னு நினைச்சேன். ஆனா இது இவ்வளவு புத்துணர்வா இருக்கும்ணு நினைக்கல,” என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த கேஸ் ஏஜென்ஸி உரிமையாளர் திருமதி மீரா கண்ணன்.

“இங்க சூழ்நிலை ரொம்ப சூப்பர். சாப்பாடு சொல்லவே தேவையில்லை,“ என்று சொல்லிவிட்டு வேகமாக சாப்பாட்டு அறை நோக்கி நகர்ந்தார் சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த திருமதி லாவண்யா.

“ஆசிரமம் ரொம்ப அழகா முக்கியமா ரொம்ப தூய்மையா இருக்கு. சாப்பாடு ரொம்ப ஹெல்தியா இருக்கு. ரொம்ப அமைதியா இருக்கு. எனக்கு புது லைஃப் கிடைச்ச மாதிரி இருக்கு.” என ஆசிரமத்தை ரசிக்கிறார் கோவை எல்ஐஸி யில் பணிபுரியும் திருமதி ஜீவிதா.

14 Jul - 7.15am

தீட்சை நாள் துவங்கியது…

பிறந்த நாள், இனிப்புகள் பகிர்ந்தேன்
“அடடா பிறந்து விட்டேனே” என உணர்ந்த நாள் இன்றே!
திருமண நாள், திரும்பிப் பார்க்கிறேன் சிதறிக் கிடக்கிறேன்
இறக்கும் நாள், புதிராய் கனவில் விரிகிறது
சத்குருவுடன் ஈஷா யோகா…
“அடடா இறந்து விடுவேனே” என உணர்ந்த நாள் இன்றே!
மீண்டும் பிறவாமல் செய்திடவே இறவா நிலை தொடவே
உன்னை மறவா அருள் தருவாய்
இந்நாள் தீட்சை நாள்!

என பங்கேற்பாளர்கள் காத்திருக்க இன்று உதித்த சூரியனும் மிகப் புதிதாகவே தெரிகிறது. பயிற்சியுடன் காலை 6.30 மணிக்கு சரியாக இன்றைய நாள் துவங்கியது.

13 Jul - 8.37pm

நாளை தீட்சை நாள்

“குழந்தை போல வாருங்கள். சும்மா வாருங்கள். உலகத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த தீட்சை நாள் அவர் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்திருக்கிறது. உங்களுக்கும் அதே போல நடந்திட என் ஆசி என் அருள்,” எனக்கூறி இன்றைய வகுப்பை நிறைவு செய்தார்.

வெள்ளை மலர்களில்
குருவருள் கண்டிட
தண்ணீர் தெளித்திட
தன்னை பதித்திட
“உன்னை சரணடைந்தேன்” என தன்னை தொலைத்தவர்கள் இன்றைய பங்கேற்பாளர்கள்.

நாளைய நாள் முழுவதையும் நீங்களும் உணர எங்களுடன் தொடர்பில் இருங்கள். வணக்கம்.

13 Jul - 8.32pm

மலருடன் ஆசீர்வாதம்

AnandaAlai-Sadhguru2

AnandaAlai-Sadhguru1

யோகீஷ்வராய மந்திரம், அதிரும் மேளங்களுக்கு இடையே முழங்க… மலர்களை ஆசீர்வர்தித்து, நாளை தீட்சைக்கு வரும் பங்கேற்பாளர்களுக்கு தன் கைகளால் வழங்கிக் கொண்டிருக்கிறார் சத்குரு…

13 Jul - 8.03pm

டென்ஷன் என்றால் என்ன?

AnandaAlai-Sadhguru2

சத்குருவின் உரையிலிருந்து…

உங்களது நாடித்துடிப்பை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். இந்தப் பயிற்சி செய்து முடித்துவிட்டு மீண்டும் நாடித்துடிப்பை கவனியுங்கள். அது குறைந்திருக்கும். தொடர்ந்த பயிற்சிக்குப் பின் மூன்று மாதம் கழித்து மீண்டும் உங்கள் நாடித்துடிப்பை கணக்கிட்டுப் பார்த்தால் இன்னும் குறைந்திருக்கும். 6 மாத பயிற்சிக்குப்பின் மேலும் குறைந்திருக்கும்.

உடலே இப்படி ஆகிவிட்ட பின்னர் டென்ஷன் என்றால் என்னவென்று கேட்பீர்கள்

13 Jul - 7.36pm

பேசத் துவங்கிவிட்டார்…

AnandaAlai-Sadhguru5

ஈடா, பிங்களா, சுஷும்னா போன்ற நாடிகள் பற்றிய மர்ம முடிச்சுக்களை அவிழ்த்துக் கொண்டிருக்கிறார். சந்தியா காலத்தின் சிறப்பு, நாடிகளின் நிலைமாற்றம் போன்றவற்றை பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்…

மெல்ல சுகக் கிரியாவுக்குள் நகர்கிறார்கள்…

13 Jul - 7.25pm

அருகே தரிசனம்

நெருப்பு நடனம் முடிந்தவுடன் தங்கள் மாலை நேர யோகப் பயிற்சிகளை ஆசிரியரின் குறிப்புகளுடன் செய்து கொண்டிருக்கின்றனர். மேடையிலிருந்து இறங்கிய சத்குரு, ஆயாசமாக நடந்து கொண்டிருக்கிறார். மேடையில் அவரைப் பார்த்தவர்களுக்கு, இப்போது அருகே தரிசனம்.

13 Jul - 7.07pm

நெருப்பு நடனம்

AnandaAlai-Sadhguru3

ஒவ்வொரு நொடியும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று புரியாமல் சஸ்பென்ஸ் திரைப் போல வாயடைத்துப் போயிருக்கின்றனர் பங்கேற்பாளர்கள். தீடீரென மின் விளக்குகள் அணைய, நெருப்பு ஜுவாலையுடன் மேடையேறினார்கள் பிரம்மச்சாரிகள்.

இருளில் பிறந்த இந்த ஒளி, கண்களுக்கு விருந்தாய், இதயத்திற்கு அதிர்வாய், அதிராத உயிர்களே இங்கு இல்லை என்றே சொல்லலாம்.

அதிர்வு தாங்க முடியாமல் கைத்தட்ட துவங்கிய மக்கள் கூட்டம், கைத்தட்டலை நிறுத்தவில்லை.

13 Jul - 6.24pm

இது ஷாம்பவியா சம்யமாவா?

வகுப்பு மேலும் சூட்சும நிலையில் நகர்கிறது. வகுப்பின் இடைவேளை அறிவிக்கப்பட்டுவிட்டது. சத்குரு வெளியே போய்விட்டார். ஒரு சிறு சப்தமோ சலசலப்போ இல்லை. கொலிசிடும் ஓசைகளைத் தவிர.

3622 பேர் இடைவேளைக்கு சென்று மீண்டும் வரலாம் என்று அறிவிக்கப்பட்டும் இங்கே அமைதி. பிரபஞ்சம் நின்று விட்டதைப் போன்ற தாங்க முடியாத இந்த நிசப்தத்தை மெல்ல ஊடுருவியது குழலின் மெல்லிய அதிர்வு. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் சத்குருவின் மேடையைச் சுற்றி… கைக்கூப்பி, மௌனத்தில்!

13 Jul - 6.10pm

24 மணி நேரம்

“நீங்கள் இங்கே என்னுடன் முழுமையாக 24 மணி நேரம் அமர்ந்தால், நான் உங்களை நெருப்பிலிட முடியும். தற்போது நீங்கள் இருக்கும் தன்மையை முழுதாக எரித்திடும் நெருப்பு. உங்களுக்குள் இன்னொரு பரிமாணத்தை திறந்திடும் ஒளியை அளித்திடும் நெருப்பு. அறியாமையின் வலி தாங்காமால் நீங்கள் தவித்திடும்போது உங்களுக்கு ஒரு குரு கிடைக்கிறார்.”
– சத்குரு.

குருவின் நிழலில் இவர்கள் 24 மணி நேரத்தை கழித்திருக்கின்றனர். இனி சூழ்நிலை தீயென தீவிரமாக, மேலும் பல பதிவுகளுக்கு காத்திருங்கள்.

சிறிய இடைவெளி விட்டிருக்கிறார்… அரை மணியில் மீண்டும் பங்கேற்பாளர்கள் சத்குருவுடன் இணைந்தபின், நாமும் இணைவோம்…

13 Jul - 6.07pm

நசுங்கும் புத்திசாலித்தனம்

சத்குருவின் உரையிலிருந்து…

“இப்போது இருக்கும் கல்வி முறையை ஆராய்ச்சி செய்கின்ற விஞ்ஞானிகள், இதைப் பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

“இதே போன்ற கல்வி முறை தொடர்ந்தால் குழந்தைகளின் 70 சதவிகித புத்திசாலித்தனம் அழிந்துவிடும். புத்தகத்தில் இருக்கும் செய்தியை எல்லாம் அப்படியே தலையில் ஏற்றுவது சரியான கல்வி முறை இல்லை.

அதற்கு பதிலாக கதையாகவோ விளையாட்டு போலவோ கற்றுக் கொடுத்தால் குழந்தைகளில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.“
இங்கே நம் ஈஷா பள்ளியில் சில நூறு குழந்தைகள் மட்டும் இப்படி படிக்கிறார்கள்,” என்றதும் கைத்தட்டல்கள். “கைத்தட்ட வேண்டாம். வெறும் நூறு குழந்தைகள் இப்படிக் கற்றால் போதாது. பல லட்சக்கணக்கான குழந்தைகளின் புத்திசாலித்தனம் நசுக்கப்படுவது பெரும் பாதிப்பாக இருக்கிறது,” என்றார்.

13 Jul - 5.15pm

காசியின் ரகசியம்…

isha, sadhguru, omkar, meditaion, kriya, asana, yoga asana, sadhguruvudan isha yoga, isha yoga center

காசி பாகம் 1 வெளியாகி தியான அன்பர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. காசி பாகம் 2 எப்போது வெளியாகும் என்றே பலரும் காத்திருக்க இப்போது பாகம் 2 வெளியாகிவிட்டது. ஏற்கனவே காசியை பார்த்தவர்களுக்கும் காசியை மீண்டும் காண தூண்டும் இந்த சிடி யில் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் கேள்விகளுக்கு சத்குரு பதிலளிக்கிறார்.

நதிகள் சங்கமம், காசியில் மரணம், மரண சடங்குகள், காலபைரவர் வழிபாடு, பைரவி யாத்னா, அகோரிகள் என நமக்கு தெரியாத பல விஷயங்களைப் பற்றி பேசுகிறார் சத்குரு. இந்த சிடி தற்போது ஆன்லைனிலும் கிடைக்கிறது.

சிடியை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்

13 Jul - 4.33pm

சப்தத்தை உணர வைத்துக் கொண்டிருக்கிறார்…

அர்த்த சித்தாசனம் கற்றனர், ஓம்கார தீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஒரு தீட்சை வகுப்பையும், இவ்வளவு ஸ்வாரஸ்யமாக வழங்க முடியுமா? பங்கேற்பாளர்களின் முழுமையான ஈடுபாட்டுடன், சத்குருவுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் தகவல் பரிமாற்றம் நகைச்சுவை ததும்ப நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வார்த்தையின் அர்த்தம் புரிய வைத்து, சப்தத்தின் பயன்பாட்டை மிக அழகாக உணர வைத்துக் கொண்டிருக்கிறார் சத்குரு…

13 Jul - 4.13pm

சம்ஸ்கிருதி

AnandaAlai-kalari2

AnandaAlai-kalari3

அதிரவைக்கும் மேளம், உள்ளிருந்து எழச் செய்யும் அசைவுகள்.

“இதோ பாருங்கள் எங்கள் திறமையை!“ என்ற கர்வமுமில்லை.

“இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு முன் நான் மேடை ஏற வேண்டுமா?“ என்ற பயமுமில்லை. அவர்கள் வெறுமனே அப்படியே இருக்கிறார்கள். தனக்கு கொடுத்த குறிப்புகளின்படி செயல் செய்துவிட்டு, வணங்கியே செல்கின்றனர்.

இவர்கள் சிறிதாக இருக்கிறார்கள். சிறிதாக இருப்பதால் பெரிதாக இருக்கிறார்கள். குழந்தைகளின் தன்மையை பார்த்தால் வணங்காமல் இருக்க முடியுமா?

13 Jul - 4.09pm

இடைவெளி முடிந்து சத்குரு மேடையில், பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சியில், சவுன்ட்ஸ் ஆப் ஈஷா இசையில், சம்ஸ்கிருதி களரியில்… அரங்கமே ஆதியோகியின் அருளில்!

சரியாக 4 மணிக்கு துவங்கியது வகுப்பு

13 Jul - 2.54pm

செவிக்கும் உணவு…

உணவு முடித்து, நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் செவிகளுக்கும் உணவு. உணவு பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் சத்குரு…

13 Jul - 2.38pm

இடைவெளியில் ஒரு ரேபிட் ரிப்போர்ட்

பங்கேற்பாளர்கள் சொல்கிறார்கள்…

“மனசே ரிலாக்ஸா இருக்கு இங்க வந்தது திருப்தியா இருக்கு,” தஞ்சாவூரிலிருந்து வந்த திருமதி ராஜேஸ்வரி பகிர்ந்து கொள்கிறார்.

University of South Sewanee என்ற அமெரிக்க பல்கலைகழகத்தில் பன்னாட்டு உறவு (International relations) பயின்று வரும் திரு. சிவக்குமார் பேசினார். அமெரிக்காவிலிருந்து இந்த நிகழ்ச்சிக்காகவே வந்திருக்கும் இவர் “வித்தியாசமா இருக்கு, இங்கே காண்பதெல்லாம் ரொம்ப புதுசா இருக்கு, Lecture மாதிரி இல்லை. அவரால பங்கேற்பாளர்களை மணிக்கணக்கில் தன் பேச்சால் கட்டி வைக்க முடியுது. உடலும் ரொம்ப சுறுசுறுப்பா இருக்கு, உயிரோட்டமா இருக்கு,” என்றார்.

“சத்குரு“ மனிதர்“ என்ற வரையறைக்கு அப்பாற்பட்டவர். இங்கு ஒரு புதுவித அன்பை உணர்கிறேன். இந்த அன்பு இந்த வட்டத்திற்குள் இல்லாமல் உலகம் முழுக்க பரவ வேண்டும் என்று விரும்புகிறேன்,“ என்று கூறுகிறார் சென்னை சுங்கவரி துறையில் பணி புரியும், Senior Tax Assistant திரு குமார்.

உணவு இடைவெளி முடிந்து இன்னும் 15 நிமிடங்களில் வகுப்பு துவங்க உள்ளது.

13 Jul - 1.24pm

இடமில்லை

இது ஜூலை மாதம்.

பெரும்பாலும் எல்லா கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதால் “அனுமதி இல்லை” என்ற வாசகம்தான்.இதனாலேயே பெற்றோர்கள் 6 மாதம் முன்னதாகவே முந்திக் கொண்டு அதற்காக முன்பதிவு செய்கிறார்கள். ஆனால் ஒரு ஆன்மீக சொற்பொழிவுக்கு, பெரும்பாலும் நரைத்த முடியுடன் ஒரு நாலு பேர் உட்கார்ந்திருக்க பின்னால் இருக்கும் நாற்காலிகள் காலியாகவே இருக்கும்.

உயிருள்ள ஆன்மீகம் ஈஷாவில் மட்டுமே! பெரிதாக விளம்பரம் எதுவுமில்லை, இருப்பினும் நேற்று இதே நேரம், இடமில்லை என்று சொல்லி பலரை வீட்டிற்கு திருப்பி அனுப்பிய புதிய வரலாறு ஈஷாவில் நடந்தது.

13 Jul - 1.15pm

பயிற்சியும் அழகுதான்

yogaclass8

Participants6

3622 பேரும் ஒவ்வொரு அசைவையும் ஒரே போல் செய்வது சின்க்ரனைஸ்ட் (Synchronized) நடனம் போல் பார்க்க மிக அழகாக இருக்கிறது!

ஒரு கல்லூரியிலோ பள்ளியிலோ நடனம் போன்ற உடலசைவை உண்டாக்கும் பயிற்சிகளில் இதுபோல் ஒரு ஒத்திசைவை ஏற்படுத்த ஒரு மாதகாலம் பயிற்சி செய்து பழகிக் கொள்வதை பார்த்திருக்கிறோம்! காண மிக அழகாக இருக்கிறது.

13 Jul - 12.39pm

இது போல் இது வரை இல்லை

“நான் வெளியே இருந்து சக்தி கொடுக்கிறேன். நீங்கள் தியானம் செய்யுங்கள்“

சத்குரு எப்போதும் முதன் முறையாக ஈஷா யோகா வகுப்பு கற்றுக் கொள்ள வந்தவர்களிடம் இப்படி பேசியது இல்லை. குறிப்பால் உணர வைப்பார். ஆனால் இது போல இதுவரை இல்லை.

ஆம், இதுவரை எந்த ஈஷா யோகா வகுப்பிலும் அதிலும் முதல்முறை வகுப்பில் இப்படி நிகழ்ந்ததில்லை.

ஆதியோகி ஆலயம் சத்குருவுடன் ஈஷா யோகா – இது தனித்துவம் வாய்ந்ததே.

13 Jul - 12.14pm

எல்லையில்லாமல் விரிவடைவதற்கு ஒரு தியானம்…

Participants1

Participants3

சத்குரு குறிப்புகள் வழங்க, அனைவரும் ஒருவிதமான தியானம் செய்து கொண்டிருக்கின்றனர். இசையும் சத்குருவின் குறிப்புகளும் உண்மையில், எல்லை அற்றதை இவர்களுக்கு உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது.

13 Jul - 11.56am

சம்ஸ்கிருதியின் நெஞ்சை உருக்கும் பாடல்…

நேற்று மாலை சம்ஸ்கிருதி குழந்தைகள் சத்குருவை வரவேற்று பாடிய பாடல்… ஆதியோகி ஆலயமே பாடலின் பொருள் உணர்ந்து மெய் மறந்த பாடல்…

ஆதிகுருவே… உங்களுக்காக

ஆதிகுருவே…

13 Jul - 11.48am

தற்போது பங்கேற்பாளர்களும் பேசுகிறார்கள்…

AnandaAlai-Sadhguru1

AnandaAlai-Sadhguru3

AnandaAlai-Sadhguru2

AnandaAlai-Sadhguru3

சத்குருவின் விழித்தெழ வைக்கும் கேள்விகள், பதில் சொல்வதற்காக அல்ல, பதில் தேடுவதற்காக…

சிலர் பதில் சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பலரும் எழுந்து சத்குருவுடன் உரையாட வகுப்பு மிகவும் உயிரோட்டமாக போய் கொண்டிருக்கிறது.

13 Jul - 11.06am

வாழ்க்கை வெறுத்து விட்டதா?

isha, sadhgur, meditation, kriya, yoga, yogasana

15 முதல் 80 வரை என இங்கு பலபேர் வந்து அமர்ந்திருக்கின்றனர் இந்த வகுப்பில், வீல் சேரிலும் ஒருவர் வருகிறார், துள்ளிக் குதித்து ஓடியும் இன்னொருவர் வருகிறார். ஆனால், 80 வயது பாட்டி யோகா செய்யும்போது நமக்கு எழும்பாத கேள்வி, 15 வயது குழந்தை செய்யும்போது வருகிறது!

உனக்கென்ன வாழ்க்கை வெறுத்து விட்டதா? இந்த இளம் வயதில் எதற்காக யோகா தியானம் என்று போய்விட்டாய்? என்று இளைஞர்களை குழப்புபவர்கள் இருக்கிறார்கள்.

ஆன்மீகம் உண்மையில் வயதானவர்களுக்கா?

உடல் ஒழுங்காக இயங்க முடியாதபோது, சாப்பிட முடியாது, சாப்பிட்டால் ஜீரணிக்க முடியாது. உட்கார்ந்தால் நிற்க முடியாது. நின்றால் உட்கார முடியாது. அப்போதுதான் ஆன்மீகமா? என்ன கணக்கு இது?

“இளம் வயதில் யோகா செய்வதால் வாழ்க்கை மீது விரக்தி வந்துவிடாது. மாறாக வாழ்க்கையின் மீது முழுமையான காதல் பிறக்கும்,” என்கிறார் சத்குரு.

இங்குள்ள இளைஞர்களிடம் இதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

13 Jul - 10.37am

மேடையில் இருக்கிறார் சத்குரு

சரியாக 10.30 மணிக்கு முழு அரங்கமும் ஸ்தம்பித்து நிற்க, மேடை ஏறினார் சத்குரு. அஸதோமா சத்கமயவில், சத்குருவுடன் இணைந்தனர் பங்கேற்பாளர்கள்…

தற்சமயம் சம்ஸ்கிருதி குழந்தைகளின் களரி பயட்டு செய்முறை நடந்து கொண்டிருக்கிறது…

வீரமும் துடிப்பும் இளமையும் ஒரு சேர காண்பதற்கே மிக அழகாக இருக்கிறது!

AnandaAlai-kalari1

13 Jul - 10.19am

சம்ஸ்கிருதி குழந்தைகள் மேடையில்…

isha, sadhgur, yoga, meditation, kriya, yogasana, asana, sadhguruvudan isha yoga, hot yoga

உள்ளே நுழைந்தவுடன் உருக்கிட
இந்த சலனமில்லா குரல்கள் பைரவியை அழைத்திட
பாடல் – பைரவி… பைரவி…
சாம்பிராணிப் புகை வேள்வியில் எங்கும் ஆழ்ந்த அமைதி!
அறை தெய்வீகத்தால் நிரம்பிட
சத்குருவிற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்!
சரியாக 10.30 மணிக்கு துவங்கவுள்ளது வகுப்பு…

13 Jul - 9.44am

மூளை வளருமா?

Sadhguru2

நமக்கெல்லாம் இன்னும் கொஞ்சம் மூளை வளர்ந்தால் நல்லா இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.மூளை வளருமா? நரம்பியல் வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

“மூளை வளர வேண்டும் என்றால் நம் மூளையின் நரம்பு செல்களை அதிகப்படுத்த வேண்டும். நமது உடலின் சக்தியில் உட்கார்ந்த நிலையில் 20 சதவிகிதம் சக்தி மூளைக்கே போய் விடுகிறது. அதனை மேலும் அதிகப்படுத்தினால் நம் உடலை நடத்த முடியாது. இதனால் உடலளவில் பரிணாம வளர்ச்சி என்பது இனி சாத்தியமில்லை.

ஒரு வேளை சூரிய மண்டலத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டால் அப்போது வேண்டுமானால் உடலளவில் மனிதன் பரிணாம வளர்ச்சி பெறலாம்.

இதைத்தான் ஆதியோகி சுமார் 15000 வருடங்களுக்கு முன்பே சொல்லி விட்டார்.

ஆனால் இருக்கின்ற மூளையில் அளவையே நாம் முழுமையாக பயன் படுத்துவதில்லை. 99 சதவிகித மனிதர்கள் 12 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பயன்படுத்துகின்றனர். இந்தப் பயிற்சியின் மூலம் அதனை இருமடங்காக செய்திட முடியும்,” என்று பேசிய சத்குரு உணவு இடைவெளி அறிவித்து மேடையை விட்டு இறங்கினார்.

13 Jul - 7.44am

முதுகுத் தண்டில் பிரபஞ்சம்

yogaclass2

yogaclass3

yogaclass4

yogaclass6

பூவைப் போல யோகா
அடுத்து குழந்தையை தாலாட்டுவது போல மென்மையான ஆசனா!
முதுகில் இருக்கிறது பிரபஞ்சம் என்றார்!
முதுகு நிமிர்ந்ததும் மூளை விரிந்தது!
புதிய பரிமாணம் பிறந்தது!
டார்வினின் பரிமாணக் கொள்கையை தாண்டிட,
முன்வினை பொய்த்திட
அடுத்த ஆசனாவிற்கு செல்கின்றனர்…

13 Jul - 7.15am

வாழ்க்கை ஒரு பூ போல

Sadhguruvudan isha yoga, aadhi yogi aalayam, Shambhavi, isha kriya, Sadhguru, isha, yoga, meditation, kriya

வாழ்க்கை என்றால் என்ன?

கேள்வி கேட்ட அந்த வயதானவருக்கு யோகி அளித்த பதிலோ “வாழ்க்கை ஒரு பூ போல,” அவரோ எனக்கு “அது ஒரு முள் போல என்றே சொல்லிக் கொடுத்தனர்“ என்றார்.

“அது அவர் வாழ்க்கை! இது என் வாழ்க்கை! அவரவர் தன் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பூ போல அல்லது முள் போல! உங்க வாழ்க்கை எப்படி?”

கேள்வி கேட்ட சத்குரு, வித்தியாசமாய் ஒரு முகபாவம் செய்ய, அதை பங்கேற்பாளர்களையும் செய்யச் சொல்ல, அரங்கம் சிரித்திட, அடுத்த ஆசானா துவங்கியது.

13 Jul - 6.48am

யோக நமஸ்காரம்

yogaclass9

3622 பேரும் சரியாக காலை 6.30க்கு அறைக்குள் இருந்தனர்.

892 தன்னார்வத் தொண்டர்களும் அதிகாலையிலேயே களத்தில் இறங்கினர்.

சரியாக 6.30 சத்குரு மேடையேறினார். ஈஷா யோகான்னா எல்லா வகுப்பும் ஒரே மாதிரிதான் இருக்கும். உள்நோக்கி பார்த்தவருக்கோ ஈஷா யோகால இதுவரைக்கும் ஒரு வகுப்பு போல இன்னொரு வகுப்பு இருந்ததில்லை!

ஆம்!

முற்றிலும் வித்தியாசமாய் ஒரு ஆசனா, இதுவரை எந்த 7 நாள் வகுப்பிலோ 3 நாள் வகுப்பிலோ இல்லாத ஒரு புதிய முறை.
யோக நமஸ்காரம்!

காலையில் இவர்களுக்கு யோக நமஸ்காரம் பயிற்றுவிக்கப்பட்டது.

13 Jul - 6.15am

காலை வணக்கம்

உங்களுடைய நாள் எத்தனை மணிக்கு துவங்கியது என்று தெரியவில்லை, இங்கு இவர்கள் அனைவரும், 3622 பேர், சரியாக காலை 5 மணிக்கு எழுந்தனர். நடுங்கும் குளிரில் சுகமாக குளித்துவிட்டு சத்குருவிடம் யோகம் பயில அறைக்குள் செல்கின்றனர்.

12 Jul - 9.00pm

சத்குருவுடன் ஈஷா யோகா முதல் நாள்

12 Jul - 8.56pm

sadhgurvudan isha yoga, meditation, isha, isha kriya, free yoga, kriya, asana, yogasana

குருவுடன் மூன்று நாட்கள்
அருளுடன் மூன்று நாட்கள்
குழந்தை போல் மூன்று நாட்கள்
ஞானி போல் மூன்று நாட்கள்
அமைதியாய் மூன்று நாட்கள்
விழிப்பாய் மூன்று நாட்கள்
உயிர் உருமாற வாழ்வு திசைமாற மூன்று நாட்கள்
கணிப்பொறி திரையின் திசைமாறாமல் காத்திருங்கள்!

மீண்டும் நாளை காலை இணைவோம்…

12 Jul - 8.53pm

உயிர் நோக்கம்

sadhgurvudan isha yoga, meditation, isha, isha kriya, free yoga, kriya, asana, yogasana

சிரிப்பிலே சிந்தனை வைத்தார்
பேச்சிலே மூச்சை வைத்தார்
நான் உடலும் இல்லை
நான் மனமும் இல்லை
அப்போது நான் யார்?
உயிரிலே உண்மை வைத்தார்
ஈஷா க்ரியா தியானம் தந்தார்
பதினைந்து நிமிடத்தில் கண்களில் கண்ணீர்!
மூன்றே மணி நேரத்தில் வாழ்வில் பல நோக்கம் மறைந்து உயிர் நோக்கமானது!

12 Jul - 8.31pm

அதிசயம்

Sadhguru1

தனக்கே உரிய பாணியில் அரங்கத்தில் சிரிப்பு வெடி வைத்திருக்கிறார் சத்குரு.

ஈஷாவில் எல்லாமே அதிசயம்தான்! அப்படி என்ன நடக்கிறது இங்கே அதிசயம்?

ஈஷா யோகா மையத்தில் புளியமரத்தில் புளிதான் காய்க்கும். அது மட்டுமல்ல… மாங்காய் மரத்தில் கூட மாங்காய் தான் காய்க்கும். இதென்ன சாதாரண விஷயமா? மண்ணிலிருந்து இனிப்பு வருகிறதே! பின்னர் மண்ணிலிருந்து தங்கம் வரவேண்டுமா என்ன?

இங்கே சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு கோபம், வெறுப்பு, விரக்தி என்பது ஏற்பட்டே 4 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நான்கு வருடங்களில் இவர்கள் ஒருமுறை கூட கோபப்படவில்லை. ஒரு முறை கூட பொறாமைப்படவில்லை.

இந்த அதிசயத்தைத்தான் என்னால் செய்ய முடியும். இந்த அதிசயம் தானே தற்போது தேவை.

12 Jul - 8.16pm

ஈஷா க்ரியா

isha, sadhguru, isha kriya, sadhhguruvudan isha yoga, meditation, asana, yogasana, hot yoga

“எல்லாரும் உயிருடன் இருக்கிறீர்களா?

செய்தி தாள்களில் அவர் இறந்தார். இவர் இறந்தார் என படிக்கிறீர்கள். எப்போதும் யார் யாரோ தான் இறந்தார்கள். நான் எப்ப இறந்தேன் என்று கேட்பவர்களா நீங்கள்?

மூச்சு நடக்குதா? இப்படி நடந்தே இருக்குன்னு நினைக்கவேண்டாம். ஒரு நாள் நின்னுடும்” சிரித்துக் கொண்டிருந்த முகங்கள் ஒரு கணம் நின்று, சிந்தனையில் ஆழ்ந்தன.

நின்னா எங்க தேடனாலும் ஆளைக்காணோம்! எவ்வளவு சூட்சுமமா இருக்கு. இந்த மூச்சு கூட நாம பயணம் செய்வோம் எனக் கூறி ஈஷா க்ரியா தீட்சை அளித்தார்.

12 Jul - 7.49pm

நான் அருளாய் இருப்பேன்…

Sadhguru1

எங்கும் சிரிப்பும் கைத்தட்டலுமாய் அரங்கம் குளிர்ந்திருக்க, சத்குருவைப் பற்றி பலவாறு கேள்வி பட்டிருந்தவர்களுக்கு, பலவாறு கற்பனை செய்து வைத்திருந்தவர்களுக்கு தான் யார் என்பதை கொஞ்சம் உணரவைத்தார் சத்குரு.

“இங்கே நான் சொல்வதை நீங்கள் கவனமாக கேட்டால் நான் உங்களுடன் அறிவாக இருப்பேன்.
நீங்கள் சும்மா என்னுடன் இருந்தால், நான் உங்களுடன் அன்பு வடிவில் இருப்பேன்.
நீங்கள் என்னுடன் ஒன்றாகிப் போயிருந்தால் நான் உனக்கு அருளாக இருப்பேன்,”
என்று தன் அருள் நிலையை புரிய வைத்தார்.

“இங்கே நிலவும் சக்தியை அளக்க அன்று ஒரு நாள் ஒரு கருவி கொண்டுவந்தார்கள். பின்னர் அந்த கருவியால் அதனை கிரகிக்க முடியாமல் போனதால் அந்த கருவியை அணைத்து விட்டார்கள். அதுபோன்ற பெரும் சக்தியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீங்கள் எடுத்து செல்ல வேண்டும்,” என்று தன் சக்தி நிலையை புரியவைத்தார்.

12 Jul - 7.22pm

குருபௌர்ணமி

AnandaAlai-Sadhguru5

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சத்குருவின் பேச்சு துவங்கியது.

கதையும் நகைச்சுவையும் கலந்து இதயம் அள்ளும் சத்குருவின் உரை மக்களை பிடித்து வைத்திருக்க… ஆதிகுருவான ஆதியோகியை பற்றி முதலில் பேச ஆரம்பித்தார்.

ஆதியோகி முதல் முதலாக தன் ஞானத்தை தன் ஏழு சீடர்களுக்கு அளித்த சக்தி வாய்ந்த பௌர்ணமி பற்றி பேசினார்.

“குருபௌர்ணமி! நம் கலாச்சாரத்தில் எல்லாவற்றிற்கும் முக்கியமானது இந்த குருபௌர்ணமி தான்! இதன் முக்கியத்துவத்தை நம் நாட்டில் அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் அதனை தற்போது கடந்த அறுபது எழுபது வருடங்களாக அழித்துவிட்டோம். லீவு கொடுக்கலன்னா அது செத்துடும்தானே!

திங்கக்கிழமைல வந்தா அத விட்டுடுவோம் தானே!“ என்று சத்குரு நகைச்சுவை கலந்து அதே நேரத்தில் நம்மை சிந்திக்கவும் வைத்தார்.

12 Jul - 6.20pm

6 மணிக்கு 6

AnandaAlai-Sadhguru4

என்ன குழப்பமாய் உள்ளதா? இன்று மாலை 6 மணிக்கு, 6 Beatல் சவுன்ட்ஸ் ஆப் ஈஷா வாசித்த இசையின் அறிமுகம் இது. 3622 பங்கேற்பாளர்கள் அறைக்குள் நுழைந்தபோது உற்சாகமாய் வாசிக்கப்பட்ட இசையை நீங்களும் உற்சாகமாய் கேட்டு மகிழுங்கள்! பகிருங்கள்!

சவுன்ட்ஸ் ஆப் ஈஷா இசை

12 Jul - 6.16pm

சரியாக 6 மணிக்கு மேடை ஏறினார்

ஆதிகுருவே என்னும் சக்தி வாய்ந்த தமிழ் பதிகம் முழங்க, ஆதியோகி அமர்ந்திருக்கும் அதே மேடையில் சத்குரு ஏறி அமர்ந்திருக்கிறார்.

சொல்லி வைத்தார் போல் அனைவரும் ஒரு சேர எழுந்து நின்று குருவை வரவேற்றனர்.

ஆதியோகி ஆலயத்தில், ஆதியோகியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்…

12 Jul - 5.07pm

சத்குருவுக்காக காத்துக் கொண்டிருக்கிறது அரங்கம்!

participants1

participants2

பல ஊர் பயணங்கள் முடித்து, மையத்தில் அவர் தன் கால்தடம் பதித்த நாள் முதல் தன்னில் ஓட்டைப் போட்டுக் கொண்டது இந்த வானம்!

தூரலும் சாரலுமாய் வெள்ளியங்கிரி மண்ணை நனைத்திட தினம் தினம் ஒரு பூ மலர்ந்தது குருவின் அருளில்!

தரிசனத்தில் அருள் வழங்கி
சம்யமாவில் உயிர் வழங்கி
பிரதிஷ்டை நாளில் சமத்துவம் பயிர் செய்து
கவித்துவத்துள் அடங்காத உன்
தனித்துவத்தை தாங்காமல் பூமி சிலிர்த்திட
இனி என்ன செய்ய போகிறாய்?
கேள்வி குறி ஏந்தி
ஆதியோகி ஆலயம்!

அவர் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறது…

12 Jul - 4.51pm

சவுன்ட்ஸ் ஆப் ஈஷா…

soundsofisha2

soundsofisha3

வான்மழையுடன் சவுன்ட்ஸ ஆப் ஈஷா தனது மெல்லிசை மழையையும் பொழிந்துக் கொண்டிருக்கிறது. அறை முழுவதும் நிரம்பி வழிய பங்கேற்பாளர்கள் வந்து அமர்ந்துவிட்டனர்.

மேடையை விட்டு சவுன்ட்ஸ் ஆப் ஈஷா கீழிறங்கியவுடன், அந்த இசையை உங்களுடன் பகிர்வோம்…

12 Jul - 4.41pm

மண்ணில் ஊறிய ஈஷா

பொதுவாக யோக வகுப்புகளுக்கு முதல் முதலாக வரும் அன்பர்களின் முகத்தில் சில சந்தேகமும், அப்படி என்ன நடந்துவிடப் போகிறது என்ற அலட்சியமும் இருந்தாலும், ஈஷா வகுப்பின் இறுதி நாள் முடிந்து போகும்போது மலர்ந்த மகிழ்ச்சியான முகங்களாய் பார்ப்பது இங்கு தினம் தினம் நடக்கும் நிகழ்வுதான்!

ஆனால் தற்போது நடக்கும் நிகழ்வுகளோ நம்மை இன்னுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

ஈஷா இந்த மண்ணில் ஊறியே போய் விட்டதோ? வகுப்பு கற்றுக் கொள்வதற்கு முன்பே ஆவலோடு “சத்குருவை இன்று பார்க்கப் போகிறோம்!” என்று சொல்லிக் கொண்டு சிரித்த முகமும் திறந்த மனமுமாய் இன்று பங்கேற்பாளர்கள் ஆசிரமத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்!

12 Jul - 3.02pm

ஆதியோகி ஆலயம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

kuruthu

aadhiyogiaalayam

குருவின் கால்பதிக்கும் மேடை அலங்காரம், அழகாக தென்னங்குறுத்து இனிதாக நிற்கிறது இங்கே.

இந்தப் பக்கம் “மைக் டெஸ்டிங்” “மைக் டெஸ்டிங்”! அந்தப் பக்கம் அடுக்கிவைக்கப்பட்ட நாற்காலிகள்

வரிசை மாறாமல் ஒன்று போலவே நேர்த்தியாய்! எல்லா நாற்காலியும் ஒரே போல…

“தான்” தொலைந்து போனாலும் தெரியாது. “நான்” கரைந்து போனாலும் தெரியாது!

12 Jul - 2.10pm

சலனமில்லாமல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது…

getting-ready1

getting-ready2

getting-ready

dining2

எந்த படபடப்பும் இல்லாமல் 3622 பேரை வரவேற்று, தங்கும் வசதி அளித்து, உணவு பரிமாறும் வேலை மிகவும் சீராக நடந்து கொண்டிருக்கிறது.

“நீங்கள் தங்கும் இடம் இதுதான். இங்கே கழிவறை இருக்கிறது. சாப்பிடுவதற்கு இப்படித்தான் செல்ல வேண்டும்,” என்று வழிகாட்டுதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க…

முதல் முதலில் ஆசிரமத்திற்குள் நுழையும் இந்த பங்கேற்பாளர்கள் ஒரு சிறிய காகிதத்தை கூட குப்பைத் தொட்டியில் போடுவது, தரைவிரிப்பில் நடக்காமல் ஓரமாக நடந்து செல்வது, கழிவறையை தூய்மையாக வைத்திருப்பது போன்றவை ஆச்சர்யத்தையே தருகிறது.

எதைச் சொன்னாலும் குழந்தை மாதிரி கேட்டுக் கொள்கிறார்கள். நாங்களும் உங்களுக்கு உதவி செய்யட்டுமா என்று கேட்கிறார்கள், நாங்களும் தன்னார்வத் தொண்டு செய்யலாமா என்று கேட்கிறார்கள், என்று நெகிழ்ந்து போகிறார்கள் நம் தன்னார்வத் தொண்டர்கள்…

12 Jul - 12.29pm

இனித்திடும் குளிர்

மதியம் பன்னிரண்டு மணிக்கு மேல் ஆன பின்னும்
சூரியன் இன்னும் தலை காட்டாமல் இருக்கிறது.
பகலில் இந்த கருப்பு வானம் மெல்ல இருள் வீச
இரவில் குருவைக்காண காத்திருக்கும்
இந்த மக்கள் கூட்டம்… குவிந்திட
எங்கெங்கும் அருள் வீச
நனைந்திருக்கிறது இந்த மண்!

people

12 Jul - 10.03am

இது யார் காலத்தில் கட்டப்பட்டது?

முதல் முதலாய் ஆசிரம வளாகத்தினுள் நுழைபவர்களுக்கு கண்ணில்படும் ஒவ்வொன்றும் ஆச்சர்யம்தான்.

தியானலிங்கம் ஒருவித அழகு என்றால் லிங்கபைரவி இன்னொருவித அழகு.
தரை அழகு என்றால் மேல்தளமும் அழகுதான்.
மண் அழகு என்றால் மலையும் அழகுதான்.
புல் அழகு என்றால் பூக்களும் அழகுதான்.
ஏன் தாழ்ப்பாளும் தரைவிரிப்பும் கூட வித்தியாசமாய் இருக்கிறதே!
புரியவில்லை பலருக்கும்!

நேற்று முதல் முதலாய் ஆசிரமத்திற்குள் நுழைந்த ஒருவர், “இந்த கட்டிடங்கள் யார் காலத்தில் கட்டப்பட்டது?” என்று கேட்டார். விஷயம் அறிந்தவரோ சிரித்தார்!

‘ராஜ ராஜ சோழனின் தாத்தா தான் இதை கட்டினார்,’ என்று சொன்னாலும் நம்பியிருப்பார் போல… 14 வருடங்களுக்கு முன்பு சத்குருவின் வழிகாட்டுதலில் கட்டப்பட்டது இந்த கவிதை.

பழமையின் அழகையும் புதுமையின் பொலிவையும் ஏந்தி நிற்கும் ஈஷா யோகா மையம் மக்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறது.

Participants

12 Jul - 9.02am

கண்ணீர்… அலையானது!

Sadhguru in Chamundi

இன்று சத்குருவுடன் யோகம் பயில பல பேர் முண்டியடித்துக் கொண்டு நின்றாலும், இந்த யோகி முதன் முதலில் வகுப்பு துவங்கிய கதை தெரியுமா? இதோ அவர் வார்த்தைகளில்…

சாமுண்டி மலையின் அந்த பாறையில் அமர்ந்திருந்த போது… திடீரென என்னிலிருந்து நான் விடுபட்டேன். பாறை மரம் பூமி மலை என்று எங்கு பார்த்தாலும் நான் பரவிக் கிடக்கிறேன்.

10 நிமிடங்கள் என நினைத்தேன் கண்களை திறந்த பின் 4 மணி நேரத்திற்கு மேல் ஆனந்த அனுபவத்தில் திளைத்திருந்தேன். என் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடிக் கொண்டே இருந்தது. உலகில் வாழும் ஒவ்வொரு தனி மனிதனும் இந்த பேரானந்தத்தை அனுபவிக்க வேண்டும் என நினைத்தேன்.

பார்ப்பவர்களிடம் எல்லாம் “நான்கே நாட்கள்… இரண்டு மணி நேரங்கள்” என்று கெஞ்சிக் கெஞ்சி வகுப்புக்கு கூப்பிட்டேன். கடுமையான முயற்சிக்கு பின் 7 பேர் என்னிடம் யோகா கற்க முன் வந்தார்கள்…

12 Jul - 8.25am

ஆதியோகி ஆலயம்

சத்குருவின் மெகா வகுப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை, சேலம், பாண்டிச்சேரி, நாகர்கோவில் போன்ற பல நகரங்களில் நடைபெற்று, பெரும் அலையை ஏற்படுத்தியது. அதே போன்ற ஒரு பெரும் அலை சலசலப்போ பரபரப்போ இல்லாமல், ஆதியோகி ஆலயத்தில் இன்று மௌனமாய் துவங்க இருக்கிறது. மற்ற நகரங்களில் நடைபெறும் வகுப்புகளை விட இது பெருமளவில் வேறுபடுகிறது.

இங்கே தன் அதிர்வலையை பரப்பும் வெள்ளியங்கிரி மலையும், மலையைப் போர்த்திய மேகமும் இருக்கிறது. மேகத்தின் குளிரும் யோகத்தின் மென்மையும் இருக்கிறது. இங்கே சத்குருவுடன் ஆதியோகி இருக்கிறார்!

ஆதியோகி…

யோக விஞ்ஞானத்தின் சாரம் ஆதியோகி…
சாதனாவிற்கு உகந்த கருவி ஆதியோகி…
விழாக் கோலத்தில் இன்று ஆதியோகி!

இங்கே மலரோடு சேர்ந்து, மனிதனும் மலர்கிறான்! நேரடி வர்ணனையில்
ஆனந்தஅலை.காம் வுடன் இணைந்திருங்கள்…
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert