சத்குருவிற்கு கோபம் வருமா?

sadhguruvirku-kobam-varumaa

சத்குருவின் வார்த்தைகளும் பயிற்சிகளும், பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இதனால் பலரும் தங்கள் கோபத்திலிருந்து விடுபட்டுள்ளனர். இப்படி பலர் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் சத்குருவிற்கு கோபம் வருமா? இக்கேள்வியை அவரிடமே கேட்டபோது…

கேள்வி
சத்குரு, உங்களுக்கு எப்போதாவது கோபம் வருமா?

சத்குரு:

கோபம் கொள்ள லாயக்கற்றவன் அல்ல நான். கோபப்பட தகுதியில்லாமல், தெம்பில்லாமல், இப்படி இல்லை. கோபப்படக் காரணங்கள் இல்லாமலும் இல்லை. ஆனால், ஆனந்தமாகவும், அமைதியாகவும் வாழ்வதை நான் தேர்ந்தெடுத்து விட்டேன். இப்போது வாழும் வாழ்க்கை என்னுடைய குறைபாடு காரணமாக ஏற்றுக்கொண்ட நிலை அல்ல. முழுமையான விழிப்புணர்வுடன் நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை.

கேள்வி
நீங்கள் நன்றாகச் சமைப்பீர்கள் என்று கேள்விப்பட்டேன். உண்மையா?

சத்குரு:

வாழ்க்கையில் நான் சமையல் என்று எதையும் செய்ததில்லை. என் அம்மாவோ, என் மனைவியோ என்னை சமைக்க விட்டதில்லை. என் மனைவி மறைந்த பிறகு, என் மகளுக்காக சமைக்க வேண்டும் என்று சமையலில் சிறிது கவனம் செலுத்தினேன். மற்றவற்றில் ஈடுபடுவதைப் போல சமையலிலும் முழுமையான ஈடுபாட்டைச் செலுத்தினேன். சமைப்பதை ஆனந்தமாகச் செய்தேன் அவ்வளவு தான். இப்போதெல்லாம் சமையலுக்குச் செலவு செய்ய என்னிடம் நேரம் இருப்பதில்லை.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press ConvertLeave a Reply