2013ம் ஆண்டை பசுமை நினைவுகளாகக் கொண்டு 2014ம் ஆண்டை வாழ்க்கையைக் கடந்த பரிமாணமாக மாற்றியமைக்க, இதோ சத்குருவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

உங்கள் அனுபவம் என்பது என்ன?

உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் இரைச்சல்கள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் இவற்றின் அருவறுப்பான தொகுப்புதான்.

தற்போது நீங்கள் இருக்கும் சூழ்நிலையின் அடிப்படையில் தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்க முயல்கிறீர்கள். இந்தக் கணத்தில் உங்களிடம் என்ன உள்ளது என்பது முக்கியமே அல்ல. நீங்கள் தற்போது எந்த நிலையில் இருந்தாலும் சரி, அதற்கும் வாழ்வில் எந்த அளவிற்கு உயர்ந்த நிலையை அடைய விரும்புகிறீர்களோ அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மிக உயர்ந்தது என்று நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதையே நாடுங்கள். அந்த உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்வதே மேன்மையானது, விடுதலை தரக்கூடியது, ஆனந்தத்தை அளிக்கக் கூடியது.

எனவே 'இன்று எனக்கு என்ன வேண்டும்' என்று குறுகிய நோக்கத்தோடு பார்க்காமல், உண்மையில் எனக்கு என்ன தேவை என்று கவனித்து குறிக்கோள்களை உருவாக்கும் தருணம் இது. அதை ஒருமுனைப்புடன் தேடினால், அதுவே இந்த வாழ்வையும் வாழ்வைக் கடந்த பரிமாணத்தையும் உணர்வதற்கான வழி. அதுவே உங்கள் உயிரையும், உயிரைக் கடந்த ஒன்றையும் அறிந்து கொள்வதற்கான மிகச் சுலபமான வழி! வாழ்க்கையில் புதிய பார்வைகளை மேற்கொள்ள புத்தாண்டு ஒரு வாய்ப்பு. நடப்பு வாழ்க்கையிலும் அதற்கடுத்த பரிமாணத்திலும் தெளிவான நோக்கம் கொண்டிருப்பவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் ஆகிறார்.

வரும் புத்தாண்டில் உங்கள் நோக்கம் வாழ்க்கை கடந்த பரிமாணமாக இருக்கட்டும்! தியானத் தன்மையுடன் உங்களின் புத்தாண்டு துவங்கட்டும்! நான் உங்களுடன் இருக்கிறேன்!