சத்குரு ஸ்பாட்

உள்நலனுக்கு நேரம் ஒதுக்குங்கள், ulnalanukku neram othukkungal

உள்நலனுக்கு நேரம் ஒதுக்குங்கள்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், ஒவ்வொரு மனிதரும் உள்நலனுக்காக நேரம் ஒதுக்குவதன் முக்கியத்துவத்தை சத்குரு விளக்குகிறார். “உண்மையான நலனுக்கு வழிசெய்கிறதா?” என்று நாம் செலவுசெய்யும் நேரத்தையும் சக்தியையும் கணக்கெடுக்காவிட்டால், வாழ்க்கை நம்மைக் கடந்து நழுவிச்செல்லும் அபாயம் இருப்பதையும் எடுத்துக்கூறுகிறார்.

தொழில்முனைப்பில் ஆர்வமுள்ளவரா நீங்கள்?, thozhilmunaippil arvamullavara neengal?

தொழில்முனைப்பில் ஆர்வமுள்ளவரா நீங்கள்?

ஒரு வெற்றிகரமான தொழிலதிபரின் குணம் என்ன, நீண்டகால குறிக்கோள்களை நிர்ணயிப்பது எப்படி, தொழில் செய்ய வாழ்வின் எல்லா பரிமாணங்களிலும் நாம் துடிப்புள்ளவராய் இருப்பதன் அவசியம் என்ன என்று ஈஷா இன்சைட்டின் இவ்வாண்டு நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு திறந்துகொடுத்த வெற்றிக்கான சாவிகளை இந்த வார சத்குரு ஸ்பாட் மூலம் நம்முடனும் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு.

நிச்சலனத்தின் சக்தி, nischalanathin sakthi

நிச்சலனத்தின் சக்தி

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், யோகா மையங்கள் திறக்க தான் விரும்பும் இடங்கள் குறித்தும், தக்ஷிணாயனத்தின் இந்த கடைசி கட்டத்தில் நிச்சலனத்தின் சக்தியை உணர நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.

நாடுகள் பல... நோக்கம் ஒன்று: மனித விழிப்புணர்வு, nadugal pala - nokkam ondru - manitha vizhippunarvu

நாடுகள் பல… நோக்கம் ஒன்று: மனித விழிப்புணர்வு

இந்த வார ஸ்பாட்டில், கடந்த சில வாரங்களாக தான் மேற்கொண்டிருக்கும் மிகப் பரபரப்பான பயணம் பற்றி சத்குரு பகிர்கிறார். நகரங்கள், நாடுகள், கண்டங்கள் என எல்லைகள் பல கடந்து பற்பல நிகழ்ச்சிகளில் சத்குரு கலந்து கொண்டிருக்கிறார். கனடா – அமெரிக்கா – ஹாங்காங்க் – இந்தியா – ரஷ்யா – ஜெர்மனி – இங்கிலாந்து என இவரை அழைத்துச் சென்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு கீழே. அந்நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை “ஸ்லைடு” செய்து பார்க்கத் தவறாதீர்கள்.

இப்பிறவியில் முக்தி கிடைக்குமா?, ippiraviyil mukthi kidaikkuma?

இப்பிறவியில் முக்தி கிடைக்குமா?

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், மொழியால் விவரிக்கமுடியா ஒன்றை விவரிக்கும் முயற்சியில் மொழியை அதன் விளிம்பிற்கே எடுத்துச்செல்கிறார் சத்குரு. “நான் முக்தி அடைவேனா?” எனும் கேள்விக்கு, முக்தி என்பது எவரும் அடைவதல்ல என்று விளக்குவதுடன், கேள்விக்கான விடையையும் சூசகமாகச் சொல்கிறார்.

உங்கள் மனதின் வடிவம், ungal manathin vadivam

உங்கள் மனதின் வடிவம்

இந்த வார ஸ்பாட்டில், எதிரெதிர் எண்ணங்கள், உணர்வுகள், தூண்டுதல்களுக்கு நடுவில் நீங்கள் அலைமோதும் நிலை குறித்து சத்குரு பேசுகிறார். கற்பனை செய்யமுடியாத வழிகளில் உங்கள் மனம் ஏன் ஊசலாடுகிறது? இதிலிருந்து மீள்வதற்கு வழியென்ன? “மனித மனத்தின் மிகப் பிரமாதமான அம்சம், அது எக்கணத்தில் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தன் வடிவை மாற்றிக் கொள்ளமுடியும். வடிவ-மாற்றத்தை திசை-மாற்றம் என்று நீங்கள் கொண்டால்தான் பிரச்சினை” என்று சொல்கிறார் சத்குரு.

முழு தீவிரத்தில் துடிக்கும் உயிர், muzhu theevirathil thudikkum uyir

முழு தீவிரத்தில் துடிக்கும் உயிர்

இந்த வார ஸ்பாட்டில், உணவு, தங்குமிடம், இனப்பெருக்கம் என்று மற்ற உயிரினங்கள் போல் நாமும் வாழ்வது, பரிணாம வளர்ச்சிக்கும் படைப்பிற்கும் எதிராக நாம் செய்யும் குற்றம் என்று சொல்கிறார் சத்குரு. “ஒவ்வொரு நொடியிலும் உங்கள் உயிர் தீவிரமாகத் துடிக்க வழிசெய்யுங்கள். வலுவற்று நலிவடைந்தால், அது எங்கும் போகாது.” வருடத்தின் இந்நேரத்தில் செடிகளும் மரங்களும் தங்கள் வேர்களை உறுதிசெய்து வசந்தகாலத்திற்குத் தயாராவது போல், நாமும் நம் உயிரை வலிமை கொண்டதாக மாற்ற செயல்படவேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறார். “தக்ஷிணாயனத்தின் இந்தக் கடைசி 3 மாதங்களில் நீங்கள் முழு தீவிரத்துடன் இருக்கவேண்டும்” என்கிறார்.