இந்த வருடத்தின் கைலாஷ்-மானசரோவர் புனிதப் பயணம் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நேபாளம் மற்றும் திபெத் போன்ற உலகின் சக்திவாய்ந்த ஆன்மீக தலங்களுக்கு, சத்குருவுடன் நூற்றுக்கணக்கான சாதகர்கள் இணைந்து பயணிக்கின்றனர். இங்கே நீங்கள் சத்குருவிடமிருந்து நேரடியாக பயண நிகழ்வுகளை புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அனுபவ பகிர்வுகளாக பெறலாம். காத்திருங்கள்! புனிதம் மிக்க இமயமலைகளில் சத்குரு மேற்கொண்டுவரும் பயணத்தில் நீங்களும் உடனிருந்து அனுபவிக்கும் வாய்ப்பை இதன்மூலம் பெறுங்கள்!

மலையின் மடிப்புகள்

இங்கே பிரகாவில் கடல் மட்டத்திலிருந்து 11451 அடி உயரத்தில் மேகங்கள் சூழ்ந்திருக்க மிகவேகமாய் தூரல் வீச ஹெலிகாப்டர்கள் தரை இறங்குவது என் காதுகளுக்குக் கேட்கிறது. நேபாளி பைலட்களுக்கு நான் என் வணக்கங்களைக் கூறிக் கொள்கிறேன். பெரும்பாலான பைலட்கள் இதுபோன்ற வானிலையில் ஹெலிக்காப்டரை ஓட்டமாட்டார்கள்.

மலைகள் நான்கு புறமும் சூழ்ந்திருக்க நடுவில் எனது கூடாரம் இருக்கிறது. வேகமாக பொழியும் மழையின் ஓசையைக் கேட்டபடி என் கூடாரத்தில் இருக்கிறேன்.

இந்த இன்பத்தை அனைவரும் அறிய வேண்டும். இந்த அழகிய மலையின் மடிப்புகளை அனைவரும் உணரவேண்டும். புவி இயக்கத்தின் (geomechanics). வெளிப்பாடே இந்த அழகிய மலைகள். பூமி தனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமாகத்தான் மலைகள் உருவாகின்றன என்றால் தனக்குள் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் மனிதன் மலைகள் மீது சென்று அமர்வதில் அதிசயம் ஒன்றும் இல்லை.

காட்டுத்தனமாய் ஒரு ஓட்டுநர்:

இந்த கடுமையான பருவகால மேகங்களினூடே ஒரு ஹெலிகாப்டர் பயணம்.இமாலயத்தின அழகை கண்டவாறே இப்படி பயணித்தால் கண்களை அதிலிருந்து எடுக்கவே இயலாது. இமயத்தின் அழகு என்னை இனிமையாகக் கொல்கிறது.
புதிய ஏவியானிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிற பிராண்ட் நியூ பெல் 407 ஒரு ஜெட் கிராஃஃப்ட் ஐ போன்ற திறன்மிக்கது. பறக்க வேண்டும் என்ற எனது ஆர்வத்தை இது இன்னும் அதிகமாக்குகிறது.

என் பறக்கும் ஆர்வத்தை நான் பூர்த்திசெய்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் கண்ணை கவரும் மனாங்க் பள்ளத்தாக்கு என் கண்முன்னே மேலும் மேலும் குறுகலாகிக் கொண்டே போனது. இதற்கிடையில் ஆறு பாய்ந்தோடி வருகிறது. அந்தப் சாலைப் பாதையோ மிகவும் வசீகரமாய் வளைந்து வளைந்து செல்கிறது.

இந்தச் சாலைகளைப் பார்க்கும்போது, என் மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆர்வம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைக்குள்ளே வெகு தூரம் நான் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றது நினைவுக்கு வருகிறது. முடிவில்லா அந்த சாலையின் வளைவுகள் நோக்கமில்லாத அந்தப் பயணங்களை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

நாம் செல்லும் இடத்தை முடிவுசெய்யாமல் நோக்கமின்றி செல்லும் அந்தப் பயணமே ஆனந்தம். எனக்குள் இது பொறிதட்டிவிட்ட இந்த மோட்டார் சைக்கிள் பயணத்தின் ஆர்வத்தினால் நான் இந்த இமயத்தின் பனிப்பாறைகளுக்கிடையில் மோட்டார் சைக்கிளில் செல்ல திட்டமிட்டிருக்கிறேன். இதை அடுத்த வருடமே நிகழ்த்திட வேண்டுமென உண்மையிலேயே எண்ணுகிறேன். என் எலும்புகள் உடைந்து விழுவதற்கு முன் இதைப் போன்றதொரு கடுமையான பயணத்தை செய்து விடவேண்டும். இதைப் போன்ற காட்டுத்தனமான பயணம் செய்வதற்கு என் இதயம் தயாராக இருக்கிறது. என் தசைகளைத்தான் தயார் செய்திட வேண்டும்.

4th August 2017
Lhasa
வசீகரிக்கும் திபெத்:

சத்குரு:

லாசா நகரம் அதிவேகமாக நகரமயமாகிக் கொண்டிருக்கிறது. நான் 13 வருடத்திற்கு முன்பு பார்த்த லாசாவிற்கும் தற்போது இருக்கும் லாசாவிற்கு மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் கட்டுமானங்களின் வளர்ச்சியும் அதன் வேகமும் இருந்திருக்கிறது. ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றன. வியாபாரங்கள் அதிவேகமாக வளர்கின்றன.சாலைகளில் அந்த ஊர்மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என இரு தரப்பினரையும் காண முடிகிறது.

FLUSH செய்யப்படக்கூடிய கழிவறைகள் பயன்படுத்தும் வசதி இனி இந்த இடத்துடன் முடிவடைகிறது. இனி லாசாவை விட்டு கிளம்பிவிட்டோம். அலி எனப்படும் ஒரு தனி உலகத்திற்கு செல்கிறோம். இந்த இடத்தில் அனைத்து வசதிகளும் கூடிய ஒரு விமான நிலையம் இருப்பது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். அலியிலிருந்து மானசரோவருக்கு செல்லும் இந்தப் பயணம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத சூட்சுமம் வாய்ந்தது.

திபெத்திய சமவெளி மிகவும் தனித்துவமான நிலப்பகுதி. இது பூமியின் மிகப் பெரிய சமவெளி மட்டுமல்ல நம்மை வசீகரிக்கும் நிலப்பகுதியும் ஆகும்.

4th August 2017 Lhasa வசீகரிக்கும் திபெத்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பிரகாசிக்கும் சூரியனோடும் அன்றைய தினத்தை மானசரோவரின் கரையில் கழிப்பது மிகவும் அற்புதமானது.
நான் 4×4 SUV ஐ ஓட்டுவதால் மிக தொலைவில் இருக்கும் இந்த இடத்திற்கு வந்து விட்டேன்.
எங்களது குழுவில் இருக்கும் மற்றவர்கள் இன்னும் வந்து சேரவில்லை.

அனைத்து ஈஷா தியான அன்பர்களுக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அருமையான கைலாய தரிசனம் கிட்டியது. ஒரு வருடத்தில் கைலாய யாத்திரை செய்யும் மக்களில் 10 சதவிகிதத்தினர் ஈஷாவிலிருந்து வருகிறார்கள். இதுபோன்ற ஒரு யாத்திரையை ஏற்பாடு செய்வது மிகச் சவாலானது. மிகத் தொலைவிலும் நகர எல்லையிலிருந்து மிகவும் ஒதுக்கப்பட்ட இடமாகவும் மிகவும் கடினமான பகுதியாகவும் இருக்கும் இவ்விடத்திற்கு பயண ஏற்பாட்டினை செய்வதில், நம் குழுத்தலைவர்களும் தன்னார்வத்தொண்டர்களும் குறிப்பிடத்தக்க வகையில் பணி செய்திருக்கிறார்கள்.
கைலாயத்துடன் இரண்டறக் கலந்திட காத்திருக்கிறோம்..

31st July 2017
Gokarna
சக்! சக்! சக்!
இறுதியில் வந்தது ஹெலிகாப்டர்!

இறுதியில் வந்தது ஹெலிகாப்டர்! Kailash 2017 - Gokarna

டிலிக்கோ முகாமிலிருந்து ஹம்டீ விமான நிலையத்தை நோக்கி இரண்டு ஹெலிகாப்டர்கள் மேகக் கூட்டங்களினூடே பறந்தன. இருப்பினும் சேம் என்ற இடத்தில் மேகங்கள் மிகவும் கீழேயே இருந்ததால் ஹெலிகாப்டர் மீண்டும் நிறுத்தப்பட்டது.

அங்கு சென்று சேர்வோமா இல்லையா என்ற கேள்விக்குறியுடன் எங்கள் அனைவரையும் காத்திருக்க வைத்தது இந்த வானம்!

மேகங்களை வென்ற ஹெலிகாப்டர்

மேகங்களை வென்ற ஹெலிகாப்டர் - Kailash 2017 - Gokarna

காலை 9 மணிக்குத்தான் முதல் முதலில் தரையிறங்கினோம். ஒவ்வொரு நிமிடமும் அடுத்து என்ன நிகழும் எனத் தெரியாத நிலையில் திகில் நிறைந்த கதைபோல ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் பயணம். பைகள் வேகமாக ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டன.
ஒரு முறைக்கு 3 பேர் என்ற கணக்கில் 90 நொடிகளில் வேகமாக ஹெலிகாப்டர் இங்கும் அங்கும் பறந்தது. இப்படி இங்கிருந்த 55 பேரையும் ஹம்டீ விமான நிலையத்தில் கொண்டு சேர்த்தது. பிறகு அங்கிருந்து போக்ரா சென்று பின்னர் காத்மாண்டுவை அடைந்தோம்.
டிலிக்கோவிலிருந்து மனாங்க் பள்ளத்தாக்கு வழியாகவும் அழகிய சேம் ஜார்ஜ் வழியாகவும் விமானத்தில் காத்மாண்டுவிற்கு பயணம் செய்வதென்பது கனவாகிவிட்டது.

அழகிய நாடு:

இந்த அழகிய நாடும் இங்கிருக்கும் மென்மையான மக்களும் அற்புதமான இந்த இயற்கையினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டையும் இந்த இயற்கை வளத்தையும் சிறப்பாக உபயோகிக்க தொலைநோக்கு பார்வையுள்ள நிர்வாகம் அமைந்திட வேண்டும்.

இத்தனை நாட்களுக்குப் பிறகு கட்டிலும் குளியலறையும் கழிப்பறையையும் காண்பது நன்றாகவே இருக்கிறது. நம் உடலும் மனமும் எப்படி பல சௌகர்யங்களுக்குப் பழகிவிட்டது. அவை இல்லாதபோதுதான் அதன் அருமையும் புரிகிறது.

மனித விழிப்புணர்வே உலகில் முக்கியமானது!

தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகள் ஊடே நான் வந்தபோது போரால் பாதிக்கப்பட்ட சிரியாவைப் பற்றியும் அங்கு மக்கள் படும் அவதியையும் கண்டேன்.
பிரச்சனைகளை நாகரீகமான வழியில் சரி செய்வதெப்படி என்பதை இன்னும் மனிதர்கள் கற்றுக்கொள்ளவில்லை. மனித நாகரிகம் எப்படி கேலிக்கூத்தாக இருந்திருக்கிறது. வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மிகவும் பெரிய நாகரிகங்களில்தான் மிகவும் கொடுமையான குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

மனிதனின் விழிப்புணர்வை உயர்த்துவதே உலகில் மிக முக்கியமான ஒன்று என்பது இதிலிருந்தே புரிகிறது. மனிதனை மேம்படுத்துவதுதான் தற்போதையத் தேவை. இயந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்துவது அல்ல.

ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு லாசாவை நோக்கி பின்னர் கைலாயத்தை நோக்கியும் பயணிக்க வேண்டும்.

30th July 2017
Tilicho Base Camp
மோசமான வானிலை!

மலைகள் உங்கள் உடல் உறுதியையும் சுறுசுறுப்பையும் மட்டும் சோதிப்பவை அல்ல. அது உங்கள் பொறுமையையும் கூடவே சோதிக்கிறது. அன்றைய நாள் முழுவதும் ஹெலிகாப்டருக்காக காத்திருந்தோம். வானம் மேகமூட்டமாக இருந்ததாலும் சில நேரங்களில் மழை இருந்ததாலும் ஹெலிகாப்டரை இயக்க முடியவில்லை.

மோசமான வானிலை! Kailash 2017 Tilicho Base Camp

மிகவும் அபாயகரமான நிலச்சரிவையும் நான் எதிர்கொள்ளத் தயாராக இல்லை. நாளையும் இதைப் போலவே வானிலை இருந்தால் நாங்கள் காட்டு ஆடுகள் மட்டுமே பயணம் செய்யும் பாதை வழியே நடந்து செல்ல வேண்டியது தான். எங்கள் குழுவில் பாதி பேர் ஏற்கனவே போக்ரா அடைந்து விட்டனர். வெப்ப நிலை மிகவும் குறைந்து விட்டது. எலும்பை ஊடுருவும் அளவிற்கு இந்த குளிர்க்காற்று வீசுகிறது.

இதற்கிடையில் நாக்கில் எச்சில் ஊறவைக்கும் பிஸிபெல்லாபாத் சுவாமியின் கைவண்ணத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மைசூரில் பிறந்ததினால் பிஸிபெல்லாபாத்தின் நுணுக்கங்களை நான் நன்றாகவே அறிவேன்.
காலையிலேயே "சக்! சக்! சக்!" ஹெலிகாப்டர் சத்தம் கேட்காதா எனக் காதுகள் காத்திருந்தன.

இல்லையென்றால் மிகவும் அபாயகரமான 70 டிகிரி சாய்ந்த சரிவுகள் வழியே நடக்க வேண்டும். மேகங்கள் சூழ்ந்துள்ளதால் பாதையும் தெளிவாகத் தெரியாத நிலையில் மலையில் நடக்க வேண்டும்.

அபாயம் எப்போதுமே எனக்குள் ஒரு சிலிர்ப்பை உருவாக்குகிறது. ஹிமாலயம் அதை நிறையவே தருகிறது. இன்றிரவு பலரின் காதுகளிலும் " சக் சக்" என்ற ஒலி கற்பனையில் ஒலிக்கத் துவங்கிவிடும்.

29th July
Tilicho Base Camp
காளிதாசரும் தோற்றுப் போவார்

இளம் வயதினரும் உடல் ஸ்திரமாக இருப்பவர்களும் 5035 மீட்டர் உயரத்தில் உள்ள டிலிக்கோ ஏரியை நோக்கி முன்னதாகவே மலையேற்றத்தைத் துவங்கினர். இவர்கள் இன்று மாலைக்குள் திரும்பிவிடுவார்கள். இந்த இரு வழி மலையேற்றத்தை செய்ய முடியாதவர்கள் டிலிக்கோ ஏரியிலேயே தங்கிவிடுவார்கள். அந்தக் கூடாரத்தில் 30 பேர் மட்டுமே தங்க முடியும் என்ற நிலையில் வானிலை நன்றாக இருந்ததால் பிறரை ஹெலிகாப்டரில் மனாங்க்கிற்கு அழைத்துச் சென்றோம்.

இந்த மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் இருப்பது அதிலும் அன்னபூர்ணா சிகரத்தின் காட்சி, பிரம்மாண்டமான சிகரமும் அதன் பனிப்போர்த்திய கிளைகளும் ஒருவரை மூர்ச்சை அடைந்திடச் செய்யும் அற்புதமான காட்சி. இந்த ஒவ்வொரு பனி மலையும் உருகி, பாலின் வெண்மை நிறத்தில் பிரவாகமாய் ஓடுகிறது. இந்த பனிமலைகளில் நடக்கும் ஒரு சிறிய அசைவுகூட ஒரு பெரும் சத்தத்தை ஏற்படுத்துகிறது.
இந்த இடத்தையும் இந்தத் தருணத்தையும் விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. காளிதாசரும் கீட்ஸும் இங்கு வந்தாலும் இந்த அற்புதத்தினை வார்த்தைகளாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

28th July
கங்க்ஸாரிலிருந்து டிலிக்கோ வரை:
அன்னபூர்ணா!

தற்போது கங்க்ஸாரின் குளிரில் சுவாமியின் குழுவில் உருவான இந்த சூடான இட்லியும் அதன் மென்மையும் பல சென்னை உணவகங்களை வெட்கப்பட வைத்து விடும். கால்கள் உடைய நுரையீரல் வெடித்திட இரண்டு அல்லது மூன்று மைல் தொலைவு நடந்தாலே இந்தச் சரிவுகள் எங்களை 3700 லிருந்து 4300 அடி உயரத்திற்கு எடுத்துச் செல்லும்.
மூன்று பெண்களுக்கு மட்டும் விலங்குகள் மீது அமர்ந்து பயணம் செய்யத்தேவை இருந்தது. மற்ற அனைவரும் வழக்கமில்லாத பகுதியாக இருந்தாலும் மிகவும் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் இருந்தனர்.

கங்க்ஸாரிலிருந்து டிலிக்கோ வரை: அன்னபூர்ணா! Kailash 2017 Khangsar to Tilicho Base Camp

அன்னபூர்ணா சிகரத்தை கண்டது தான் இன்றைய நாளின் மிக முக்கிய நிகழ்வு. இன்று மதிய உணவு மலர்கள் நிறைந்த ஒரு சரிவில் அமர்ந்து உண்டோம்.
மிகவும் அபாயகரமான நிலச்சரிவுகள் நடக்கும் பகுதிகளும் இங்கே இருக்கின்றன. டிலிக்கோ என்ற இடத்தில் நாங்கள் முகாமிடுவதற்கு முன் இந்த அபாயகரமான பகுதிகளுடன் கொஞ்சம் சமரசம் செய்ய வேண்டியிருக்கிறது.

July 27th
பூமியின் பூர்வீகம் மலைகள்:

இந்த பூமியின் இயக்கத்தின் வெளிப்பாடு மலைகளே. பல லட்சக்கணகான ஆண்டுகளாக இந்த பூமி எப்படி இயங்கியது என்பது இப்போது இந்த மலைகளில் பதிவாகியுள்ளது. இந்த பூமி இதுவரை செய்த அனைத்து செயல்களின் அளவுகோலாய் இந்த மலை இங்கே நிற்கிறது. மலை என்றாலே பூமியின் பரப்பில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தின் விளைவு. அப்படியானால் தனக்குள் ஒரு மாற்றத்தைத் தேடும் ஒரு மனிதன் இங்கே வருவது ஒரு தற்செயல் அல்ல. இதனாலே நாங்கள் இங்கு இருக்கிறோம்.

July 27th
உங்களது கட்டிடம்:

உங்களது கட்டிடம் Kailash 2017 Khangsar to Tilicho Base Camp

நீங்கள் "நான்" என்று எதனை அழைக்கிறீர்களோ அது நீங்கள் செய்த கட்டுமானம்தான். அந்தக் கட்டிடம் அழகாக இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றிக் கவலை இல்லை. நீங்கள் டன் கணக்கில் செங்கற்களை சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் பிரச்சனை. டன் கணக்கிலான செங்கற்களோ அல்லது டன் கணக்கிலான தங்க கற்களோ பாரம் பாரம்தான். அந்த பாரம் உங்களை சிதைத்திடவே செய்யும்.

நீங்கள் உருவாக்கிய ஆளுமை வெளியிலிருந்து சேகரித்தவற்றின் கலவை. அது எப்போதும் நீங்கள் இல்லை. அது எப்போதும் நீங்கள் ஆக முடியாது. தற்போது அதுதான் நீங்கள் என நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் பிரச்சனையே. அதனாலேயே "நான்" என்ற ஒன்றை நீங்கள் அழித்திட வேண்டும்.