சத்குரு துவக்கி வைத்த கோடி தீபோத்ஸவம், அமெரிக்க ஈஷா மையத்தை அடைந்த ஆதியோகி, நாடகக் குழுவில் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் ஆகிய இந்தவார ஈஷா நிகழ்வுகள் உங்களுக்காக...

சத்குரு துவக்கி வைத்த கோடி தீபோத்ஸவம்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஹைதராபாத்தில் பக்தி TV ஏற்பாடு செய்திருந்த கோடி தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியை சத்குரு அவர்கள் முதல் தீபத்தினை ஏற்றி துவக்கி வைத்தார். ஒவ்வொரு வருடமும் பக்தி டிவி நிறுவனம் ஏற்பாடு செய்துவரும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்று வருவது இதன் தனிச்சிறப்பு. இதில் ஈஷா பிரம்மச்சாரிகள் நெருப்பு நடனம் செய்தது பொது மக்களிடையே பலத்த வரவேற்பினை பெற்றது. சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவும் தன் பங்களிப்பை வழங்கியதில் மக்கள் மனம் மகிழ்ந்தனர்.

அமெரிக்க ஈஷா மையத்தை அடைந்த ஆதியோகி...

adiyogi

குருபௌர்ணமி அன்று கோவை ஈஷாயோகமையத்திலிருந்து அமெரிக்கா நோக்கி சென்ற ஆதியோகி சிலை இந்தவாரம் அமெரிக்காவை அடைந்தது. அமெரிக்காவில் உள்ள ஈஷாயோகமையத்திற்கு இன்னும் சிலநாட்களில் வந்தடையும். ஆதியோகி சிலை மையத்திற்கு வந்துசேரும் முன்னரே அங்குள்ள மையவாசிகளிடம் அவரை வரவேற்பதற்கான உற்சாகத்தை அபரிமிதமாக காணமுடிகிறது.

இயற்கையும் அதற்கு ஒத்துழைப்பதுபோல் சீசனை மீறி பனிமழையாய் பொழிந்து அவரை வரவேற்கக் காத்திருக்கிறது. அவர் மையத்தை வந்தடைந்ததும் சில அழகான புகைப்படங்களுடன் உங்களிடம் வருகிறோம். காத்திருங்கள்.

நாடகக் குழுவில் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள்

ishavidhya-drama-training

விக்டோரியா பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர் திரு.மேத்யூ கஸ்சல். அவருடைய ஆராய்ச்சி பணிகளின் ஒரு பகுதியாக நாடக நிறுவனங்களில் உள்ள முதியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உதவிவருகிறார்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஹெல்ப் ஏஜ் இந்தியாவில் உள்ள முதியவர்கள் இணைந்துள்ளனர். நம்முடைய ஈஷா வித்யா பள்ளி மாணவர்களும் இளைய தலைமுறையினருக்காக இதில் பங்கேற்கின்றனர் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து இரண்டு பயிற்சி பெற்ற மாணவர்கள் நம்முடைய பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். முதலாவது நிகழ்ச்சி நவம்பர் மாதம் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.

எல்லா வயதினருக்கும் இடையே புரிதலையும் நன்மதிப்பையும் உருவாக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.