சத்குரு சத்சங்கம் நேரடி ஒளிபரப்பு

நன்றியுணர்வை வெளிப்படுத்த மாடுகள் அலங்கரிக்கப் படுவதோடு இல்லாமல் கோலாகலத்தை வெளிப்படுத்த கோலங்கள், குதூகலத்தை வெளிப்படுத்த புத்தாடை அணிந்த புன்சிரிப்பு முகங்கள், கொண்டாட்டத்தை வெளிப்படுத்த விளையாட்டு, பாடல்-நடனம் என்று விழாக் கோலம் பூண்டுள்ளது வெள்ளியங்கிரி மலை அடிவாரம்!

 

 

ஈஷா யோகா மையத்தில் இன்று பொங்கல் கொண்டாட்டமும் சத்குருவின் சத்சங்கமும் நடக்கவிருக்கின்றன.

 

 

விறகில் தீ மூட்டி, பானை சூடேறி பொங்கிவருவது பொங்கல் மட்டுமல்ல, சத்குருவின் அருளால் இன்று உள்ளங்களெல்லாம் சந்தோஷத்தில் பொங்க, இனித்திடும் பொங்கல் சத்சங்கத்தை சுவைத்திட தவறாதீர்கள்.

 

 

ஆம் இதோ இன்னும் சில மணி நேரங்களில் நேரடியாக பொங்கல் சிறப்பு சத்சங்கத்தை உங்கள் கணிப்பொறி திரைகளில் காணக் காத்திருங்கள்!

மாலை 5 மணியிலிருந்து – சிறப்பு கலை நிகழ்ச்சிகள்


மாலை 6 போல் கலை நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் சிறப்பு சத்சங்கம் துவங்கும்
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert