திருமதி. அபிராமி ராஜ், சென்னை

2015 டிசம்பர் சென்னை வெள்ளமும் 2016 டிசம்பர் வர்தா புயலும் சென்னையில் வாழ்ந்த அனைவருக்கும் சோதனை காலம். அந்த காலங்களிலும் தேவியின் அருள் எங்கள் வாழ்வை பாதுகாத்த நிகழ்வுகள் நெகிழ்ச்சிக்குரியவை. எங்கள் வீட்டில் நாங்கள் பொக்கிஷமாய் போற்றி வணங்கும் தேவி யந்திரத்தின் மகிமையை பகிர்ந்து கொள்கிறேன் -எங்கள் வாழ்க்கை அனுபவமாய்...

abirami-akka
டிசம்பர் 2015! சற்றும் எதிர்பார்க்காத வெள்ளம் சென்னை நகரையே துண்டு துண்டாக உருக்குலைத்துக் கொண்டிருந்த சமயம்... எங்கள் இருமாடி குடியிருப்பு வீடு தரைத்தளத்தில் இருந்தது. வெள்ளநீர் அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு நிமிடமும் உயர்வதை சாளரம் வழியாக பார்த்துக்கொண்டு இருந்தோம். எந்நேரமும் வீட்டுக்குள் வெள்ளநீர் பிரவேசிக்கலாம் என்ற நிலை. வீட்டின் முதல் தளத்தில் ஒரு பெரிய அறை இருந்தது. வெள்ளநீர் வீட்டுக்குள் புகும் பட்சத்தில் நாங்கள் முதலில் பாதுகாக்க நினைத்தது, சந்தேகமே இல்லாமல், லிங்கபைரவி தேவி யந்திரத்தைத்தான். வீட்டில் உள்ள மற்ற பொருள்கள் நீரில் மூழ்கினாலும் கவலை இல்லை. அதனால், தேவி யந்திரத்தை முதல் தளம் எடுத்து சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்தோம்.

வெள்ளநீர் வீட்டுக்குள் புகும் பட்சத்தில் நாங்கள் முதலில் பாதுகாக்க நினைத்தது, சந்தேகமே இல்லாமல், லிங்கபைரவி தேவி யந்திரத்தைத்தான். வீட்டில் உள்ள மற்ற பொருள்கள் நீரில் மூழ்கினாலும் கவலை இல்லை. அதனால், தேவி யந்திரத்தை முதல் தளம் எடுத்து சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்தோம்.

முதல்தள வரவேற்பறையில் ஒரு பெரிய தேவி படம், சத்குருவின் படம் இருந்தது. மேல்தளத்திற்கு செல்லும் முன் அந்த படங்களின் முன் விளக்கேற்றி ஓரிரு நிமிடம் அமைதியாக நின்றுவிட்டு சென்றோம். ஒரு இரவு கழிந்தது. முடிவில் கீழ்தளம் முழுவதும் வெள்ளக்காடாகி பொருட்கள் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் என நான் எண்ணி இருந்தேன். ஆனால், தேவியின் அருளை அவளின் மகத்துவத்தை அன்று கண்கூடாகப் பார்த்தேன். வெள்ளநீர் வாயிற்படி வரை வந்திருந்தது, ஆனால் வீட்டினுள் ஒரு துளி நீரும் புகவில்லை. எங்கள் குடியிருப்பில் உள்ள எந்த வீடுகளிலும் வெள்ளநீர் புகவில்லை போலும் என்று நினைத்திருந்தேன். ஆனால், பலர் தங்கள் வீடுகளில் 2-3 அடி உயரத்திற்கு வெள்ளநீர் புகுந்தது பற்றி வாட்ஸ்ஆப் மூலம் படங்களுடன் விவரித்திருந்தனர்.

சற்றே முன்னோக்கி 2016 டிசம்பருக்கு வருவோம் - வர்தா புயல்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வர்தா புயல் சென்னையை கடந்த பொழுது நாங்கள் நகரில் இல்லை. வெளியூர் சென்றிருந்தோம். சமூக வலைத்தளம் மூலமாக மக்கள் பகிர்ந்துகொண்ட தகவல்களைக் கொண்டு புயல் நிலவரம் குறித்து அறிந்து வந்தோம். எங்கள் எதிர்வீட்டுக்காரர் புயல் நாற்புறமும் நுழைந்திருந்த செய்தியை புகைப்படத்துடன் முகநூலில் பதிவு செய்திருந்தார். இதைப் பார்த்த நாங்கள் எங்கள் வீட்டைப்பற்றி கவலையுற்று இருந்தோம் - முக்கியமாக தேவியை எண்ணி. 4 நாட்கள் கழித்து பெரும் கவலையுடன் ஊர் திரும்பினோம்.

எல்லா பொருட்களும் சீர்குலைந்து ஈரத்தன்மையுடன் பூச்சிகள் சூழ இருக்கும் என எதிர்பார்த்து வந்தேன். ஆனால், அதற்கு நேர்மாறான காட்சியையே கண்டோம். ஒரு துளி தண்ணீர்கூட வீட்டிற்குள் பிரவேசித்திருக்கவில்லை. போட்டது போட்ட மாதிரி நாங்கள் விட்டுச்சென்ற நிலையில் அப்படியே இருந்தது, எங்கள் இல்லம். துணிமணிகளில், ஏன் தரையில் கிடந்த தரைவிரிப்பில் கூட, எந்த ஈரப்பதமும் தென்படவில்லை.

கண்ணீர் மல்க தேவி இருந்த அறைக்கு சென்று அவளைக் கண்டேன். அவளின் அருள் அளவிடமுடியாதது! எல்லையற்றது! அளப்பரியது! ஜெய் பைரவி! இந்த வாழ்வில் அவளின் அருளன்றி வேறு பெரிய பாக்கியம் ஒன்றும் இல்லை. அவள் எங்கள் இல்லத்தில் எங்களோடு இணைந்து எங்களை ஒவ்வொரு நொடியும் பாதுகாப்பது போன்ற வரப்பிரசாதம் வேறொன்றில்லை.

ஆசிரியர் குறிப்பு:

யந்திரா வைபவத்தின்போது சத்குரு முன்னிலையில் லிங்கபைரவி யந்திரம் வழங்கப்படுகிறது. யந்திரத்தை பெறும்போது சக்திவாய்ந்த யந்திர செயல்முறைக்கான தீட்சையை சத்குருவிடமிருந்து நீங்கள் நேரடியாகப் பெறலாம். மேலும் தகவல்களுக்கு, மின்னஞ்சல் செய்யவும் yantra@lingabhairavi.org அல்லது கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்புகொள்ளவும்: 94890 45133