புற்றுநோய் போயே போச்சு! தேங்க்ஸ் டூ யோகா!

putrunoi-poye-pochu-thanks-to-yoga

Non-Hodgkin lymphoma எனும் ஒருவகை புற்றுநோயால் தாக்கப்பட்டவர் ஜிம் ஃபெஸெடன். இந்த நோய் முழுதாக முற்றிப்போய், நிணநீர் நாளங்களையும் தாண்டி எலும்பு மஜ்ஜை, கணையம், நுரையீரல் போன்ற பிற உறுப்புகளுக்கும் புற்று பரவத் தொடங்குகிறது. மரணத்தின் எல்லைகளை தொட்டுப் பார்க்கும் இத்தகைய 4ஆம் நிலை புற்றுநோயுடன் வாழ்ந்த ஜிம் ஃபெஸெடன் எப்படி அதிலிருந்து மீண்டார்? அவர் வார்த்தைகளில் படியுங்கள்.

திரு.ஜிம் ஃபெஸெடன்

நான் இணையம் மூலமாக இன்னர் இன்ஜினியரிங் வகுப்பு கற்றுக்கொண்ட அடுத்த இரண்டு வாரத்திற்குப்பின், திடீரென்று லிம்போமா புற்றுநோயின் 4ஆம் நிலையில் இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்தது. எனது எலும்பு மஜ்ஜையின் 90 சதவிகிதத்தை கேன்சர் ஆக்கிரமித்திருந்ததாகத் தெரிவித்தனர். பிற உறுப்புகளுக்கும் அது பரவியிருந்தது தெரிய வந்தது. அடுத்தடுத்த வாரங்களில் மரணம் என்னை மிக வேகமாக நெருங்கி வருவதை நான் உணரத் துவங்கினேன்.

பூதசுத்தி மேற்கொள்ளத் துவங்கிய 2, 3 நாட்களுக்கு உள்ளாகவே எனது ஆரோக்கியத்திலும் சக்திநிலையிலும் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்பட்டதை உணரமுடிந்தது.
எனது மனைவி ஜியார்ஜியாவின் உதவியுடன் எனது யோகப் பயிற்சிகளை தொடர்ந்து செய்தேன். பலகீனமான நிலையிலும் மனம் தளராமல், என்னால் முடிந்த அளவிற்கு தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டேன். எனது மனைவி என்னைத் தாக்கியுள்ள புற்றுநோய் குறித்த மருத்துவ ஆராய்ச்சிகளை மிகத் தீவிரமாக படிக்கத் துவங்கினாள். அவள் என்னை இயற்கை வைத்திய முறைகளைப் பின்பற்றி குணமாக்க முயற்சிகளை மேற்கொள்ளத் துவங்கினாள். B17, மஞ்சள், இயற்கை மூலிகைகளின் கூட்டுப்பொருட்கள் கொண்டு அவளே வீட்டு மருத்துவத்தில் எனக்கு மருந்துகளை தயார்செய்து வழங்கினாள். அதோடு பச்சை காய்கறிகள், உலர் பழங்கள், Essiac Tea என எனது உணவுமுறை என்னை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கியது.

புற்றுநோய் போயே போச்சு! தேங்க்ஸ் to யோகா!, Putrunoi poye pochu thanks to yoga

இந்த மருந்துகளையெல்லாம் நான் எடுத்துக்கொண்ட அதேவேளையில், மூன்று வாரங்களுக்கு ஒருமுறை கீமோதெரபியும் எடுத்துக்கொண்டேன். இந்த நேரத்தில்தான் ஈஷா தன்னார்வத் தொண்டர் ஒருவர் மூலமாக என் மனைவி பூதசுத்தி செயல்முறை பற்றி அறிந்துகொண்டாள். பின்னர், ஈஷா ஹடயோகா ஆசிரியர் ஒருவரின் அறிமுகம் அவளுக்கு கிடைக்க, அவரே எங்கள் வீட்டிற்கு வந்து எனக்கும் எனது மனைவிக்கும் பூதசுத்தி செயல்முறைக்கான தீட்சை வழங்கினார்.

ஆச்சரியப்படும்படியாக, பூதசுத்தி மேற்கொள்ளத் துவங்கிய 2, 3 நாட்களுக்கு உள்ளாகவே எனது ஆரோக்கியத்திலும் சக்திநிலையிலும் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்பட்டதை உணரமுடிந்தது. தொடர்ந்து பூதசுத்தி பயிற்சி செய்து வந்தேன். அடுத்த சில நாட்களில் என்னைப் பரிசோதித்த கீமோதெரபி சிகிச்சைக்கான புற்றுநோய் மருத்துவரால், எனது இரத்தப் பரிசோதனை முடிவின்படி கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்க வேண்டிய நான், இன்னும் உயிருடன் இவ்வளவு வலிமையாக இருப்பதை நம்ப முடியவில்லை.

தொடர்ந்து எடுத்துக்கொண்ட கீமோ சிகிச்சைக்குப் பிறகு, நான் கூடுதல் பலம்பெற்று தேறியதால், என்னால் அமெரிக்காவில், McMinnville ல் உள்ள ஈஷா மையத்திற்கு சென்று, ஷாம்பவி தீட்சை பெறமுடிந்தது. பின்னர் நான் பூதசுத்தி மற்றும் ஈஷா கிரியாவுடன் ஷாம்பவி பயிற்சியை தினமும் இரண்டுமுறை செய்யத் துவங்கினேன். அதுமட்டுமல்லாமல், வீடியோக்கள், வலைத்தளங்கள் மற்றும் புத்தகங்கள் என பல ஊடகங்கள் வாயிலாகவும், நானும் என் மனைவியும் சத்குரு கூறும் வழிமுறைகளைத் தொடர்ந்து தினந்தோறும் பின்பற்றிக் கொண்டு வந்தோம்.

என்னுடைய, தற்போதைய எலும்பு மஜ்ஜை திசு ஆய்வு பரிசோதனையின்படி, பாதிப்புண்டாக்கும் புற்றுநோய் செல்களின் ஆக்கிரமிப்பு 90 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதத்திற்கும் குறைந்துள்ளதோடு (2% என்பது முழு குணமடைந்ததாகும்) எனது உறுப்புகளை விட்டும் புற்றுநோய் அகன்றுவிட்டது. எனது எலும்புகளில் ஏற்பட்ட பாதிப்புகள் காணாமல் போயின.

இவையெல்லாம் என் அனுபவத்தில் நான் உணர்ந்தவை. இந்த பதிவை படிப்போருக்கு நான் குணமானதற்கான காரணிகளாக என்னென்ன இருந்தன என்பது தெளிவாகவே புரியும். என்னை அன்புடன் கவனித்த எனது மனைவி; ஈஷா கிரியா மற்றும் பூதசுத்தி மற்றும் ஈஷா யோகப் பயிற்சிகள்; கடைபிடித்த இயற்கை உணவுமுறைகள்; எடுத்துக்கொண்ட இயற்கை மூலிகை மருந்துகள் என பல காரணங்கள் எனது குணமடைதலுக்குப் பின்னால் இருந்தன. ஆனால், இத்தனைக்கும் மேலாக ஒன்றே ஒன்று என்னை பலவிதங்களிலும் குணம்பெறச்செய்து என்னை மேன்மையடையச் செய்தது, அது சத்குருவின் பரிபூரண அருள்!

ஆசிரியர் குறிப்பு:

சத்குரு வழங்கும் ஈஷா யோகா வகுப்புகளில் சக்திவாய்ந்த ஷாம்பவி கிரியா கற்றுத் தரப்படுகிறது. ஷாம்பவி கிரியா மிக மிக எளிமையானது. ஆனால், இது ஒருவருக்கு கொடுக்கும் பலன்களும் அதைச் செய்வதன் மூலம் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும் மகத்தானவை. ஆனந்தமானவை.

ஈஷா யோக மையத்தின் சூழல், தங்குமிட வசதி, சக்தியூட்டும் பயிற்சிகள் என ஆனந்தமாய் 2 நாட்கள். உள்நிலையில் பரிபூரண மாற்றத்தை உருவாக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுக்க தயாரா?
சத்குருவுடன் ஈஷா யோகா கற்றுக்கொள்ள வாருங்கள்!

டிசம்பர் 17-18, 2016
ஈஷா யோக மையம், கோவை.


மேலும் இந்த வகுப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் உங்கள் ஊரிலும் நடைபெறுகிறது.

மேலும் விபரங்கள் அறிய மற்றும் நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு:
தொலைபேசி: 83000 83111
இ-மெயில்: iycprograms@ishafoundation.org
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert