ஒவ்வொரு புத்தாண்டன்றும் நாம் உறுதிமொழி எடுப்பது வழக்கம்தான். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது காற்றில் கரைந்து போன வார்த்தையாகத்தான் இருந்திருக்கிறது. அப்படியென்றால் நமக்கு மனோபலம் இல்லையா? இதற்கு சத்குரு என்ன சொல்கிறார்? தெரிந்துகொள்வோம்...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நாளை காலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம், அதனை நீங்கள் மனோபலத்தினால் செய்வீர்களா அல்லது அலாரத்தின் பவரினால் செய்வீர்களா? அலாரம் அடித்தால் கூட படுக்கையைவிட்டு வெளியே வர உங்களுக்கு மனோதிடம் இருக்க வேண்டுமல்லவா?

ஒரு செயலை உங்கள் மனோபலத்தால் செய்ய முயல்வதை விட, அதை அன்புடன் செய்யுங்கள், பக்தியுடன் செய்யுங்கள்.

“நான் செய்தே தீருவேன், நான் எப்படியாவது செய்துவிடுவேன், தலையே போனாலும் நான் செய்து விடுவேன்” என்ற மனோதிடத்துடன் நீங்கள் செய்ய முயன்றால், நீங்கள் அதை சாதித்து முடிக்கலாம். ஆனால் அந்த நிர்பந்தம் தரும் அழுத்தத்தால் முகம் வாடிப் போவீர்கள். எல்லாம் நடந்துவிட்டது, ஆனால் உங்கள் முகம் தொங்கிப்போகும், வாழ்க்கையை இப்படி வாழ்வதில் அர்த்தம்தான் என்ன?

என் வாழ்வில் நான் செய்யும் செயல்கள் எல்லாம், என் விருப்பத்தால் நான் செய்யும் செயல்களே. அதனால் நான் 5 மணிக்கு அலாரம் வைத்தால் 4.30 மணிக்கே எழுந்து விடுகிறேன். ஏனென்றால் அதை செய்ய வேண்டும் என்கிற ஆவல் என்னுள் இருக்கிறது.

மனோதிடத்தால் செய்ய வேண்டிய செயல்கள் என்று உங்கள் வாழ்க்கையில் எதுவுமில்லை. ஏதோ ஒருநாள் உங்கள் உடல் வலிக்கிறது, காலையில் எழுந்திருக்க அசௌகரியமாக இருக்கிறது, அன்று உங்களுக்கு மனோதிடம் தேவை. ஆனால் இந்த உயிர் நிகழும் விதத்தையே மனோதிடத்தால் நடத்த முயன்றால் உங்கள் முகம் வாடித்தான் போகும். வயிற்றில் அல்சர், தொங்கிப்போன முகம், கையில் வெற்றி இப்படி இருந்தால் யாருக்காவது உங்களோடு இருக்க ஆசை இருக்குமா என்ன?

ஒரு செயலை உங்கள் மனோபலத்தால் செய்ய முயல்வதை விட, அதை அன்புடன் செய்யுங்கள், பக்தியுடன் செய்யுங்கள்.

இப்புத்தாண்டில் வாழ்க்கையை விருப்பத்துடனும் அன்புடனும் அணுகுவோம்!

வாழ்த்துக்கள்!