புத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி!

உலக புத்தக தினமான நேற்று, ஈஷா சார்பில் கோவை மாநகர் மற்றும் ஈஷா யோகா மையத்தில் சிறப்பு புத்தக கண்காட்சிகள் நடைபெற்றன. இது குறித்த புகைப்பட பதிவுகளுடன் சில தகவல்கள் உங்களுக்காக!

ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதி உலகப் புத்தக தினமாக் கொண்டாடப்படுகிறது. 1995ஆம் ஆண்டில் முதன்முதலில் வாசிக்கும் பழக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஐ.நா.சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான UNESCO நிறுவனம் உலக புத்தக தினத்தை அறிவித்தது.

புத்தகங்கள் பலநேரங்களில் மனிதர்களுக்கு உற்ற நண்பனாகவும், உந்துசக்தியாகவும், சோர்வடையும் நேரத்தில் நம் பக்கபலமாகவும் இருக்கின்றன. வாசிக்கும் பழக்கத்தை மக்களிடையே அதிகரிக்கும் விதமாக, கடந்த சில ஆண்டுகளாக உலக புத்தக தினத்தில் ஈஷா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது!

2018ஆம் ஆண்டு உலக புத்தகதினத்தைக் கொண்டாடும் வகையில், ஈஷா சார்பில், கோவை மாநகரில் பல்வேறு முக்கியமான இடங்களிலும், ஈஷா யோகா மையத்திலும் சிறப்பு புத்தக கண்காட்சிகள் நடைபெற்றன. ஈஷா தன்னார்வலர்களும் பொதுமக்களும் இந்த கண்காட்சியில், 8 மொழிகளில் வெளிவந்துள்ள சத்குருவின் ஞானம் செறிந்த கருத்துக்களடங்கிய பல்வேறு புத்தகங்களை பார்வையிட்டனர். புத்தக தினத்தை முன்னிட்டு புத்தகங்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டன!

ஆசிரமத்திற்கு சிறப்பு யோகா பயிற்சி மேற்கொள்வதற்காக வருகைதந்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இந்த கண்காட்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, புத்தகங்களை வாங்கி, வாசித்து மகிழ்ந்தனர்.

சத்குருவின் 2 பிரபலமான புத்தகங்கள் இப்போது இணையத்தில்…

‘ஆதியோகி – சிவன் யோகத்தின் மூலம்’ – உலகின் முதலாவது யோகியின் வாழ்க்கை வரலாற்றை சத்குருவின் பார்வையில் வழங்கும் புத்தகம்!

‘ஈஷா யோகா – உன்னை அறியும் விஞ்ஞானம்’ – ஆன்மீகத்தை நவீனயுக மனிதர்களுக்கு ஏற்றாற் போல மறுஉருவாக்கம் செய்துள்ள சத்குரு, உள்நிலை அறிவியலின் தொழிற்நுட்பத்தை இப்புத்தகம் மூலமாக யோகாவில் முன்அறிமுகம் இல்லாதவர்களுக்கும் வழங்குகிறார்.

பதிவிறக்கம் செய்ய கிழே உள்ள படங்களை கிளிக் செய்யவும்

AdiyogiTamilBookIShayogaunnai
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert