புளிப்பு கார போண்டா

pulippu-kaara-bonda

ஈஷா ருசி

சாலையோர கையேந்தி பவன்களில் கிடைக்கும் வடையையும், போண்டாவையும் பிரியப்பட்டு சுவைப்போர் எண்ணிலடங்கா… இவைகளை நீங்களே வீட்டிலேயே சுவையாக தயாரித்து உண்ணலாம். உங்களுக்காக புளிப்பும் காரமும் சேர்ந்த போண்டா ரெசிபி இங்கே…

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – ½ கப்
துவரம்பருப்பு – ½ கப்
உளுத்தம்பருப்பு – ¼ கப்
பச்சரிசி – ¼ கப்
காய்ந்த மிளகாய் – 4
புளி – சிறிதளவு
பெருங்காயம் – ½ டீஸ்பூன்
தேங்காய் துருவல் – ¼ கப்
உப்பு – ருசிக்கேற்ப
எண்ணெய் – பொறித்தெடுக்க

செய்முறை:

  • பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக ஊறப் போடுங்கள்.
  • அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊறவிடுங்கள்.
  • ஒரு மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து கடுகை பொரித்து கொட்டி கலந்து கொள்ளுங்கள்.
  • எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொரித்து எடுங்கள்.
  • புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த போண்டா.



இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert