குழந்தைகள்... சில உண்மைகள்! பகுதி 2

Question: உங்களது உள்நிலைப் பொறியியல் என்ற அம்சம், குழந்தைகளின் வாழ்க்கைமுறைக்கு சிரமமாய் இருப்பதைக் காண்கிறேன். ஏனெனில் பல்வேறு வகையான வாழ்க்கை முறைகளிலிருந்தும், பல்வேறு சமூகப் பின்னணியிலிருந்தும் வரும் மற்ற குழந்தைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நான் என் குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே அளிக்க விரும்பும் இந்த உள்நிலைப் பொறியியல், போட்டிகள் மிக்க சூழலை, ஒரு அழுத்தத்தை, மற்ற குழந்தைகளின் வாழ்க்கை முறையினை எப்படி எதிர்கொள்ளும்? என் குழந்தைகள் இந்த சூழலை எப்படி எதிர்கொள்வார்கள்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த அழுத்தம் எதனாலென்றால், நீங்கள் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த வெவ்வேறு உயிர்களை ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள். இந்த கிரகத்தில் உங்களைப் போன்றே இன்னொரு மனிதன் இருக்கிறாரா? அதிர்ஷ்டவசமாக அப்படியில்லை, இல்லையா? (சிரிக்கிறார்) உங்களைப் போன்று ஒருவர் கூட இல்லை. எனவே ஒவ்வொரு உயிரினமும் முற்றிலும் தனித்தன்மைமிக்கது. இது உங்கள் குழந்தைக்கும் பொருந்தும். ஆனால் நீங்கள் அனைவரையும் ஒரே பிரிவினுள் உட்படுத்தி ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள். அ, ஆ அல்லது ஒன்று, இரண்டு என கற்பித்து அவர்களை மற்றவரைவிட தங்களை உயர்வாகவோ, தாழ்வாகவோ கருதவைக்கிறீர்கள்.

உங்கள் குழந்தை மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறது. அது பிரச்சினையில்லை. உங்களுக்கு, அவன் முதல் மதிப்பெண் பெற்றாகவேண்டும்.

எனவே, நீங்கள்தான் இந்தப் போட்டிகளையும், ஒப்பீடுகளையும் கொண்டு வந்திருக்கிறீர்கள். ஏனெனில், பெரும்பாலான பெற்றோர்களுக்கு இந்த விஷயம் கல்வியைப் பற்றியதாக இல்லாமல், முதலிடம் பெறவேண்டும் என்பதாக உள்ளது. அவர்களது குழந்தை அனைத்துக் குழந்தைகளுக்கும் மேலே இருக்கவேண்டும். இதுதான் அவர்கள் விரும்புவது. அவர்களுக்கு, கற்றுக்கொள்வதில் அக்கறையில்லை, கல்வியிலோ அக்கறையில்லை, வளர்ச்சியிலோ அக்கறையில்லை. வாழ்வின் அவர்களது முழு முயற்சியுமே உச்சாணிக்கொம்பில் அமர்வதுதான், இல்லையா? அனைவரும் முதலிடத்தில் இருக்கவே விரும்புகிறார்கள். ஆனால், அனைவருமே முதலிடத்தில் இருக்கமுடியாது. முதலிடத்தில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் இயல்பாக கீழேயே அழுத்தப் பட்டிருப்பார்கள், அப்படித்தான் இல்லையா? நாம் எந்த செயலைச் செய்தாலும் நம் கவனம் முதலிடத்தில் உட்காருவதில் இருந்தால், இயல்பாகவே பலர் கீழே அழுத்தப்படுவார்கள், இதுதான் நடக்கும், வேறு வழியேயில்லை.

எனவே, இந்த திசைமாற்றம் நீக்கப்படவேண்டும். "இல்லையில்லை, என்னால் எதுவும் செய்யமுடியாது. பள்ளிகள் அதுபோல இருக்கின்றன" என்று நீங்கள் சொல்லலாம். இல்லை, பள்ளிகள் உங்கள் நோக்கங்களை செயல்படுத்துகின்றன. உங்கள் நோக்கங்கள் மாறினால் பள்ளிகளும் மாறும். எது வேலை செய்கிறதோ அந்தவிதத்தில் தங்கள் வியாபாரத்தினை நடத்த அவர்கள் விரும்புகிறார்கள். உங்கள் விருப்பமெல்லாம், எப்படியாவது உங்கள் குழந்தை 100% எடுக்கவேண்டும். குழந்தைக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. உங்கள் குழந்தை முதல்மதிப்பெண் எடுக்கவேண்டும். நீங்கள் கட்டணம் செலுத்துவதால், உங்களது விருப்பங்களை அவர்கள் நிறைவேற்றுகின்றனர். அவர்களது பணியைச் செய்துமுடிக்க அவர்கள் முயல்கிறார்கள். இந்தச் செயலினால் குழந்தை பாதிப்படைகிறது. ஆனால் உங்களுக்கு அது ஒரு பொருட்டேயில்லை. உங்கள் குழந்தை மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறது. அது பிரச்சினையில்லை. உங்களுக்கு, அவன் முதல் மதிப்பெண் பெற்றாகவேண்டும். இந்த நோய்த்தன்மை முதலில் போகவேண்டும்.

கல்விமுறை இவ்வாறு இருக்குமானால், ஒரு மனிதன் உண்மையான அறிவாளியாக மலரமுடியாது. மனிதனின் முழுத்திறமை போட்டியினால் வெளிப்படாது. மனிதனின் திறமை முற்றிலும் தளர்ந்தநிலையில் தான் வெளிப்படும். நீங்கள் உங்களுக்குள் அமைதியாக, ஆனந்தமாக இருக்கும்போதுதான் உங்கள் உடலும், மனமும் அதன் முழுத்திறமையுடன் செயல்படும். நீங்கள் மற்றவருடன் போட்டியிட முயலும்பொழுது, மற்றவரை விட ஒரு அடி எப்படி முன்னே இருப்பது என்றுதான் சிந்திப்பீர்கள். உங்களின் உச்சபட்சத் திறமையைப் பற்றிச் சிந்திக்கமாட்டீர்கள். எனவே, தற்போதுள்ள கல்வி முறையினால் ஒரு தலைமுறை மக்களையே வீணடித்துக் கொண்டிருக்கின்றோம்.

அடுத்த வாரம்...

ஈஷாவில் உள்ள பள்ளியின் கல்விமுறை... அது ஆன்மீகம் நிறைந்ததா இல்லையா? என்பதைப் பற்றி சத்குரு சொல்வது என்ன என்பதை அறிந்துகொள்வோம்...

குழந்தைகள்... சில உண்மைகள்! தொடரின் பிற பதிவுகள்