பூசணியில் ‘ஓலன்’ ரெசிபி செய்வது எப்படி?

பூசணியில் ‘ஓலன்’ ரெசிபி செய்வது எப்படி?, Poosaniyil olan recipe seivathu eppadi?

நேர்மறை அதிர்வுகள் கொண்ட காய்களில் ஒன்றாகிய பூசணிக்காயை வைத்து ஒரு புதிய ரெசிபி… செய்து சாப்பிட தயாராகுங்கள்!

ஈஷா ருசி

ஓலன்

தேவையான பொருட்கள்:

வெள்ளை பூசணி (அ) மஞ்சள் பூசணி – 2 டீ கப்
தட்டைப் பயறு – 1 கைப்பிடி
தேங்காய் – அரை மூடி (இதிலிருந்து அரை கப் முதல் பால் எடுக்கவேண்டும். கால் கப் இரண்டாவது பால் எடுக்க வேண்டும்)
வரமிளகாய் – 1 (அ) 2
தேங்காய் எண்ணெய் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

வெள்ளைப் பூசணி (அ) மஞ்சள் பூசணியை சதுர வடிவில் வெட்டிக்கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பு, ஒரு வரமிளகாய் சேர்த்து வேகவைக்கவும். தட்டைப்பயிறை குக்கரில் வைத்து வேக வைத்து எடுத்து பூசணியுடன் சேர்க்கவும். பிறகு அதில் இரண்டாவது பாலை ஊற்றி கொதிக்க விடவும். சிறிது கெட்டியான பிறகு அதை இறக்கி வைத்து, அதில் முதல்பாலை ஊற்ற வேண்டும். அதில் அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். ஓலன் ரெடி.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert