பாண்டிச்சேரி, நாகர்கோவில் நோக்கி ஆனந்தப் “புயல்”

பாண்டிச்சேரி, நாகர்கோவில் நோக்கி ஆனந்தப் “புயல்”

பாண்டிச்சேரி, நாகர்கோவில் ஸ்பெஷல்… என்ன ஸ்பெஷல் இரண்டிற்கும்? ஒன்று குமரி முனையில் மற்றொன்று எதிர்முனையில். இரண்டிற்கும் என்ன ஒற்றுமை என்று கேட்கும் அனைவருக்கும், புன்னகையோடு நாங்கள் கூறும் பதில்… சத்குருவுடன் ஈஷா யோகா.

சந்தோஷம்கிறது எனக்குள்ளேதான் இருக்குன்னு நல்லா புரிஞ்சிருச்சு!

இவ்வளவு நாளா நான் காத்திருந்தது இந்தப் பயிற்சிக்குத்தானோன்னு தோணுது!

உடம்பையும் மனசையும் உயிரையும் தெரிஞ்சுக்கிற அதிசயம் இங்கே நடந்தது.

என்னை வாட்டியெடுத்த உடம்பு வலியெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியலை. சுகர் பேஷன்ட்டான எனக்கு இப்போ எல்லாமே கன்ட்ரோலுக்கு வந்துருக்கு!

– சந்தோஷமும் உற்சாகமுமாய் பதில் கூறுவது, ஏற்கனவே சத்குருவுடன் ஈஷா யோகா வகுப்பில் பங்கேற்றவர்கள்தான்.

தமிழகமெங்கும் ஆனந்த அலை மஹாசத்சங்கங்களில் பங்கேற்றவர்கள், சத்குருவிடமிருந்து நேரடி தீட்சை பெறும் விதமாக நடந்து வருகின்றன சத்குருவுடன் ஈஷா யோகா நிகழ்ச்சிகள். இவ்வருடம் நாகர்கோவில் மற்றும் பாண்டிச்சேரிக்கு தேதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய மாநகரங்களில் நடைப்பெற்ற இந்த மெகா யோகா வகுப்புகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் – ஈஷாவின் ட்ரேட் மார்க்கான மிகச் சீரான ஒருங்கிணைப்புடன்! ஒவ்வொரு நகரத்திலும் 10,000 பேர் ஒரே இடத்தில் கூடிப் பிரியும் சிறு சலசலப்புக் கூட இல்லாமல் இந்நிகழ்ச்சிகள் மிக அமைதியாக நடந்து முடிந்தன என்றால் அதில் துளிக் கூட மிகையில்லை.

இதெல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று?

ஸ்வாமி பிரபோதா சொல்கிறார்,

சத்குருவின் இந்தக் கனவை நனவாக்கியது தன்னார்வத் தொண்டர்களின் ஈடுபாடுதான். அவர்களுடைய ஈடில்லா உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் இதை நிகழ்த்தியது!

தற்போது நாகர்கோவில் மற்றும் பாண்டிச்சேரி மையங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற, இவ்விரு மையங்கள் மட்டுமல்லாது, அருகிலுள்ள மையங்களை சேர்ந்த பல தன்னார்வத் தொண்டர்களும் உற்சாகமாக உழைத்து வருகின்றனர். வகுப்பு நடைபெறும் மைதானத்தை தயார் செய்வது, தேவையான பொருட்களை சேகரிப்பது, தட்டிகள் ஒட்டுவது, பேனர்கள் கட்டுவது முதற்கொண்டு எல்லா செயல்களும் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கின்றன. மிக மிக முக்கியமாக இவ்வகுப்பிற்கு பங்கேற்பாளர்களை பதிவு செய்தல் என்னும் மிக பிரம்மாண்டமான செயலையும் இவ்விரு மையங்களை சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் ஆர்வமுடன் செய்து வருகின்றனர்.

நாம் நாகர்கோவில் மையத்தை தொடர்பு கொண்டபோது இந்நிகழ்ச்சிக்காக கடந்த 2 மாதங்களாக அனைவரும் இரவு, பகலாக உழைத்து வருவதாகவும், அவர்களை இன்னும் சற்று உற்சாகப்படுத்த நம் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் சிறப்பு இசைக் கச்சேரி அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு, வெகு விமரிசையாக நடைப்பெற்றதாகவும் தகவல் கிடைத்தது. இதில் கலந்து கொண்டவர்கள் மட்டும்… மூர்ச்சையடைந்துவிட வேண்டாம்… 2000த்திற்கு மேல்!!

நம் தென் தமிழ்நாடு மற்றும் வட தமிழ்நாட்டு மக்களுடன் உங்கள் கைகளையும் கோர்க்கலாம்… நிகழ்ச்சி நடைபெறும் நகரங்களிலோ அல்லது அவற்றுக்கு அருகிலோ உள்ள உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அறிந்தவர்களுக்கு இந்நிகழ்ச்சிகளைப் பற்றி நீங்கள் அறிமுகம் செய்து வைக்கலாம்.

இதே போல் கடந்த வருடம், மதுரையில் இவ்வகுப்புகள் முடிந்தபோது ஒரு பங்கேற்பாளர் இன்னொருவரிடம்,

3 நாள்ல எப்படி இவ்வளவு சந்தோஷமான மனிதனா மாறிட்டேன்னு எனக்கே புதிரா இருக்கு,

என்று மகிழ்ச்சி கரைபுரண்டோட சொல்லிக் கொண்டிருந்தார். அவரது புதிருக்கு வகுப்பில் சத்குரு அளித்த விடை:

[quote]அவரை மாற்றணும், இவரை மாற்றணும்னா சண்டை வரும். ஆனா, உங்களை மாத்திட்டீங்கன்னா ஆனந்தம் வரும்![/quote]

இவ்வருடமும் பல பேருடைய வாழ்வில் நீங்கள் ஒளியேற்ற முடியும்! ஆம், ஒளியேற்ற முடியும்… ஷாம்பவி மஹாமுத்ரா என்னும் தொன்மை வாய்ந்த யோகப் பயிற்சியின் மூலம்… அதுவும் சத்குருவின் அருகாமையில் இருந்து கொண்டு இதனை கற்பதை விட வேறு என்ன வேண்டும்?

அனைவருடனும் இவ்வாய்ப்பினைப் பகிர்ந்திடுங்கள்!

பாண்டிச்சேரி – ஜுன் 22 முதல் 24 வரை
தாகூர் கலைக் கல்லூரி மைதானம்,
லாஸ்பேட், பாண்டிச்சேரி.
83000 16000/ 94878 95876
pondicherry@ishayoga.org

நாகர்கோவில் – ஜுன் 29 முதல் ஜுலை 1 வரை
தேசிக விநாயகர் நகர்,
வெள்ளாடிச்சிவிளை, கண்ணன்குளம்,
நாகர்கோவில்.
83000 66000/ 83000 67000
nagercoil@ishayoga.org

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர் கவனிக்க வேண்டியவை:
முன் பதிவு அவசியம். ஜாதி, மதம் தடையில்லை. 15 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் பங்கேற்கலாம். இதுவரை ஈஷா வகுப்புகளில் கலந்து கொள்ளாதவர்கள் மற்றும் ஏற்கெனவே 13 நாட்கள் ஈஷா யோகா வகுப்புகளில் கலந்து கொண்டு, இன்னும் ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சை பெறாதவர்கள், சத்குரு நடத்தும் இந்த வகுப்புகளில் பங்கேற்கலாம். தொலைதூரத்தில் இருந்து வந்து கலந்து கொள்பவர்களுக்கு தங்கும் வசதி செய்து தரப்படும் (தங்குமிட வசதிக்கும் முன்பதிவு அவசியம்).
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert