பொய்மையை விலக்கி உண்மையை பிரதானமாக்கிட…

பொய்மையை விலக்கி உண்மையை பிரதானமாக்கிட..., Poimaiyai vilakki unmaiyai prathanamakkida

சத்குரு:

ஏமாற்றமும் பொய்யும் உலகம் முழுவதும் ததும்பி வழிகிறது. மிக உயர்ந்த நிலையில் மிக மோசமான விதமான அசிங்கம் நடக்கிறது. பொய் முக்கிய இடத்திலும், உண்மை புறந்தள்ளப்பட்டும் விட்டது. உலகின் நிலை இப்படி இருக்கும்போது, உண்மைக்காகவே வாழ்ந்து உண்மைக்காகவே சாகும் மனிதர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவது மிக முக்கியமாகிறது. பூமியில் உண்மையை பிரதானமாக்கிட இதுவே சிறந்த காலம்.

நீங்கள் இருளுடனும் சண்டைப் போட முடியாது. வெறுமனே ஒளிபெற்று பிரகாசிக்க வேண்டியதுதான். நீங்கள் ஒளிர்ந்தால், இருள் அகன்றுவிடும்.
இன்று பலவிதங்களில் பல்வேறு சக்திகள் ஒன்றிணைந்து வருகின்றன. மலர்போல் மென்மையான ஏதோவொன்று நம் சூழலுக்கு நறுமணம் சேர்க்கக்கூடும். யாருடனும் நீங்கள் சண்டையிட தேவையில்லை. நீங்கள் இருளுடனும் சண்டைப் போட முடியாது. வெறுமனே ஒளிபெற்று பிரகாசிக்க வேண்டியதுதான். நீங்கள் ஒளிர்ந்தால், இருள் அகன்றுவிடும். இருள் மிகுந்த வல்லமை உடையதாய் தெரிகிறது. முற்றிலும் இருள்சூழ்ந்த ஓர் இடத்தில் உங்கள் சுவாசமே நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதுவே, நீங்கள் ஒளிர்ந்தால் அத்தனையும் சிரமமில்லாமல் அகன்றுவிடும். இதுவே அறியாமையின் இயல்பு. இதுவே பொய்மையின் இயல்பு. அதனுடன் நீங்கள் சண்டையிட தேவையில்லை. நீங்கள் ஒளிர்ந்தால் அது அகன்றுவிடும்.

உங்களையும் இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மனிதரையும் ஒளிரச் செய்வதற்கான வழிகளையும் முறைகளையும் நாம் கண்டறிந்து வருகிறோம். இதற்கு கொஞ்சம் முயற்சி தேவை. ஆனால், சப்தரிஷிகளும், கௌதம புத்தரும், கிருஷ்ணரும், இவ்வழியில் சென்ற வேறு பலரும் எதிர்கொண்ட சிரமங்களை நாம் படத்தேவையில்லை. ஏனெனில், அவர்களிடம் இல்லாத தொழில்நுட்பம் இன்று நம் கைகளில் உள்ளது. யாரிடமும் இருந்திராத கருவிகள் நம் கைவசம் உள்ளன. யாரும் செய்ய இயலாத சில விஷயங்களை நாம் நிச்சயம் செய்யவேண்டும். இதுவே எனது ஆசையும் ஆசியும்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press ConvertLeave a Reply