பிற உயிர்களும் வாழட்டுமே !

பிற உயிர்களும் வாழட்டுமே !

நம்மவரு நம்மாழ்வார்… பகுதி 18

பூச்சி பயிரைத் தின்றால் உடனே பூச்சிக்கொல்லி தெளிக்கிறோம்; எலி வீட்டிகுள் வந்தால் மருந்து வைக்கிறோம்; ஈ-எறும்புக்கெல்லாம் ஸ்பேரே அடித்துவிடுகிறோம். அப்படியென்றால் இந்த மொத்தப் பிரபஞ்சமுமே மனிதனுக்கு மட்டும் சொந்தமானதா? நம்மை விட்டு சமீபத்தில் பிரிந்து இயற்கையுடன் கலந்த நம்மாழ்வார் அவர்களின் இந்த எழுத்துக்கள் உயிருடன் வாழும் நாம் அனைவரும் கவனிக்க வேண்டியவை.

நம்மாழ்வார்:

“ஒவ்வோர் உயிரையும் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகத்தான் நான் பார்க்கிறேன். எதையும் புழு என்றோ, பூச்சி என்றோ, தாவரம் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ, இந்தியன் என்றோ, அமெரிக்கன் என்றோ நான் பார்ப்பதில்லை. இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வோர் உயிருக்கும் அதற்கென்று ஒரு இடம் இருக்கிறது. ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை.”

மேலே கூறப்பட்டது காட்டுப்பூ ஜுலை இதழில் சத்குரு அவர்கள் சொல்லியுள்ள கருத்துக்கள்.

ஒவ்வோர் உயிருக்கும் அதற்கென்று ஒரு இடம் இருக்கிறது என்று சத்குரு சொல்லியுள்ளதை நினைத்துக்கொண்டேன்.

நான்கூட காய்கறி விதையை மண்ணில் புதைத்திருந்தேன். நான்கு நாட்கள் கழித்து அது முளைத்து வளரத் தொடங்கியது. இரண்டு நாட்கள் கழித்து சென்று பார்த்தபோது ஒரு பயிர்செடியின் இலையை ஒரு வெட்டுக்கிளி தின்று கொண்டிருந்தது. ஒவ்வோர் உயிருக்கும் அதற்கென்று ஒரு இடம் இருக்கிறது என்று சத்குரு சொல்லியுள்ளதை நினைத்துக்கொண்டேன். இன்றோ, நாளையோ ஒரு ஓணான் அல்லது ஒரு குருவி வரக்கூடும்… அதற்கு இந்த வெட்டுக்கிளி இரையாக அமையக்கூடும்.
1

சார்லஸ் டார்வின் 1831ம் ஆண்டு டிசம்பர் மாதம் “பிகில்” என்ற கப்பலில் உலக யாத்திரை புறப்பட்டார். கப்பல் பல நாட்கள் பயணித்தது. டார்வின் பலவகை மீன்களை பிடித்து பரிசோதனை செய்தார். கப்பல் தரை தட்டுகிறபோது கீழே இறங்கி நடந்தோ அல்லது குதிரைமீது சென்றோ, தாவர வகைகளை பரிசோதனை செய்தார்.

இத்தகைய 5 ஆண்டு பயணத்தின் முடிவில் ஊர் திரும்பிய டார்வின் தனது பரிணாம தத்துவத்தை வெளியிட்டார்.

நீர்வாழ்வன, ஊர்வன, நடப்பன, பறப்பன, குட்டிபோட்டு பால் கொடுப்பவை என்று வளர்ச்சி அடைந்தது எப்படி?

இயற்கையை மாற்றிவைக்க நினைப்பதைப் போன்ற முட்டாள்தனம் எதுவும் கிடையாது.
உயிரினங்கள் பூகோள வேறுபாடுகளாலும் வேறுபட்ட தட்ப வெப்பநிலைகளாலும் பிரிக்கப்படும்போது புதிய இனங்கள் தோன்றுகின்றன என்று டார்வின் குறிப்பிட்டார். வாலில்லா குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று டார்வின் குறிப்பிட்டபோது பலர் அதை ஏற்க மனம் கூசிப்போனார்கள். ஆனாலும் பிற்காலத்தில் அதுவே பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்பாக இருந்தது.

இப்போது, புலி, சிறுத்தை, வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி போன்ற வனவிலங்குகளும், சிட்டுக்குருவி, தவளை போன்ற சிற்றினங்களும், அதிவேகமாக மறைந்து வருகின்றன.
2

நெல் இனங்களில் பல மறைந்துபோனதால் 2006ம் ஆண்டு கணக்குப்படி 1,000 நெல் இனங்கள் மட்டுமே உயிர் பிழைத்திருக்கின்றன. இதே போக்கு நீடித்தால் 2100ம் ஆண்டில் வாழுகின்ற மக்கள் பெருமளவில் வாழ்வாதாரங்களை இழந்து அல்லல்படுவார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

‘பசுமை விகடன்’ 10 ஜுலை 2010 நாளிட்ட இதழில் செந்தில்குமார் அவர்களுக்கு கொடுத்த நேர்காணலில் சத்குரு இப்படிச் சொல்லியுள்ளார்.

“இயற்கையை மாற்றிவைக்க நினைப்பதைப் போன்ற முட்டாள்தனம் எதுவும் கிடையாது. இயற்கைதான் எல்லாம் என்று உணர்வதுதான் வாழ்வின் உன்னதம். உழவர்கள் சுயநினைவிற்கு வரவேண்டியது, தவிர்க்கக்கூடிய சீர்திருத்தமாக அமையும். பதவியில் உள்ளவர்கள் தங்களின் பொறுப்புணர்ந்து செயல்படுவதற்கு ஆன்மீகம் துணைபுரியட்டும் என்று வேண்டுகிறோம்”.

தொடர்ந்து விதைப்போம்…

nature, nammalvar, agriculture

இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவு என தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை நலனிற்காவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவருக்கு ஒரு அர்ப்பணிப்பாக இங்கே அவரது எழுத்துக்களைப் பதிகிறோம்!

LaertesCTB, Nimesh M @ flickrஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press ConvertLeave a Reply