சத்குரு:

மருத்துவ உதவிக்காக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நாகரீகமானவர், அதிகமாய் வெட்கப்படக் கூடியவர்.

செக்-அப் செய்கிறேன் என்கிற பெயரில், தலை முதல் கால் வரை பல சோதனைகள் அவருக்குச் செய்யப்பட்டன. எடை, உயரம் பரிசோதிக்கப்பட்டது; ஆடைகளைக் கழற்றி சில பரிசோதனைகள் செய்யப்பட்டன; ட்ரெட்மில்லில் ஓட விட்டார்கள்; அது இது என்று ஒருவழியாக பரிசோதனைகள் செய்து அவரைப் புரட்டிப் போட்டார்கள்.

அத்தனையும் முடிந்து ‘அக்கடா’ என்று ஓய்ந்து போயிருந்தவரை படுக்கப் போட்டார்கள். இத்தனை பரிசோதனைகளுக்கு இடையே அவருக்குக் கழிவறை செல்ல மட்டும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை. அடக்கி, ஒடுக்கிப் பார்த்தவர், அவசரத்தால் கடைசியில் படுக்கையிலேயே அதை முடித்தும் விட்டார்.

அதேசமயம், அந்த அறைக்குள் நர்ஸ் நுழைவதுபோல் இருக்கவே, மூன்றாவது மாடியிலிருந்து படுக்கை விரிப்பைச் சுருட்டி ஜன்னல் வழியே வீசியெறிந்தார்.

மது தலைக்கேறிய ஒருவர் கீழே தன் பாணியில் ஒய்யாரமாய் நடந்து சென்று கொண்டிருந்தார். வானத்தில் ஏதோவொன்று பறந்து வருவதைப் பார்த்தார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அது அவரைச் சூழ்ந்தது. கை கால்களை உதைத்து, புரட்டி, புரண்டு அதிலிருந்து வெளிவந்தவருக்கு அதற்குள் இருப்பது என்ன என்று தெரியவந்தது. தொலைவிலிருந்து அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், “என்ன நடந்தது?” என்றார்.

அதற்கு இவர், “மேலே இருந்து வந்த பேயை, நான் உதைத்த உதையில் அதன் வயிற்றுக்குள் இருந்து கக்கா எல்லாம் வெளியே வந்துவிட்டது!” என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.