“ஆவலிலிருந்து அறிவுக்கு” மற்றும் “பேராசையே கடவுள்” ஆகிய இரண்டு புத்தகங்களை ஒரே புத்தகமாக இணைத்து, ஒரு புதுமையான வடிவத்தில் ஈஷா வெளியிட்டுள்ளது! இப்புத்தகம் பற்றி இங்கே சில வார்த்தைகள்...

ஆவலிலிருந்து அறிவுக்கு

மனிதர்கள் ஒவ்வொருவருமே ஏதாவது ஒன்றிற்கு ஆவல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆவல் அல்லது பேராவல்கொள்வதை ‘இலட்சியம் அல்லது குறிக்கோள்’ என்று பட்டைதீட்டி சொல்லும் இந்த சமூகம், நீங்கள் முன்னேற வேண்டுமானால் குறிக்கோள் என்பது அவசியம் என்று அடித்துச் சொல்கிறது.

ஆனால் மனிதர்களின் பேராவல் அல்லது குறிக்கோள்தான் கடும் போர்கள் போன்ற பேரழிவுகளுக்கும், குறிப்பாக கடந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வரும் சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. உங்களுக்காக வைத்துக்கொள்ளும் குறிக்கோளை, தொலைநோக்குடன் சிந்தித்து, அதை ஏன் இந்த ஒட்டுமொத்த உலகிற்கான குறிக்கோளாக மாற்றக்கூடாது என்று கேட்கும் சத்குரு, அப்படி மாற்றிக் கொள்ளும்போது, அதுதான் மிகவும் அறிவுபூர்வமான செயலாக இருக்கும் என்பதுடன் அப்போது இந்த மனிதகுலத்தின் விதியே மாறிப்போகும் என்றும் சொல்கிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மொத்தத்தில் உங்கள் லட்சியங்களை விரிவடையச் செய்யும் ஒரு புத்தகம் இது!

பேராசையே கடவுள்

'பேராசை பெருநஷ்டம் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம். பேராசை எப்போது கடவுள் ஆனது? கடவுளை அடைய பேராசைதானே முதல் தடை!' என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம் அல்லது படித்தும் இருக்கலாம். நீங்கள் ஆசை வைக்காமல் சிறிய செயலாவது உங்களுக்கு நடந்துவிடுமா? அடுத்தவேளை உணவுக்காக இருந்தாலும் சரி அல்லது அந்த ஆண்டவனுக்காக இருந்தாலும் சரி, நீங்கள் ஆசை வைத்தால்தானே அது நடக்கும்? 'வீடு வாங்க நினைத்தால் அது ஆசை, முக்தி அடைய நினைத்தால் மட்டும் அது ஆசையில்லையா? இருப்பதிலேயே அதுதானே பெரிய ஆசை' என்று எதிர்கேள்வி கேட்கும் சத்குரு, ஆசை குறித்து புத்தர் சொன்னது காலப்போக்கில் எப்படி திரிக்கப்பட்டு விட்டது என்பதையும் விளக்குகிறார். மேலும், 'கடவுளை அடைய உண்மையில் பேராசை பிரச்சனையில்லை, உங்களின் கஞ்சத்தனம்தான் பிரச்சனை' என்கிறார்.

"பேராசையே கடவுள்" புத்தகத்தை ஆன்லைனில் பெற

இங்கே

க்ளிக் செய்யவும்.

"ஆவலிலிருந்து அறிவுக்கு" புத்தகத்தை ஆன்லைனில் பெற

இங்கே

க்ளிக் செய்யவும்.

விலை ரூ. 120
தொடர்புக்கு: 94437 07250

ஈஷா வெளியீடுகளை ஆன்லைனில் பெற: ishadownloads.com

ஈஷா வெளியீடுகளை கூரியர் மூலம் பெற: 0422-2515415