Pepper மீல்மேக்கர்!
மீல்மேக்கரை நாம் நிறைய வகையான உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கிறோம். பல குழந்தைகளுக்கும் பிடித்தமான இந்த மீல்மேக்கரை வைத்து சுவையான Pepper மீல்மேக்கர் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ச்சும்மா ட்ரை பண்ணி பாருங்க...
ஈஷா ருசி
மீல்மேக்கரை நாம் நிறைய வகையான உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கிறோம். பல குழந்தைகளுக்கும் பிடித்தமான இந்த மீல்மேக்கரை வைத்து சுவையான Pepper மீல்மேக்கர்
செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ச்சும்மா ட்ரை பண்ணி பாருங்க...
மிளகு மீல்மேக்கர்
Subscribe
தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் - 100 கிராம்
மிளகுத்தூள், மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- மீல்மேக்கரை சுடுதண்ணீரில் போட்டு நன்றாக பிழிந்து எடுக்கவும்.
- பின்பு மிளகுத்தூள், மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு ஆகியவை சேர்ந்த கலவையில் புரட்டி எடுத்து அரை மணி நேரம் கழித்து, மிதமான தீயில், எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
மீல்மேக்கர் சப்பாத்தி
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1/4 கிலோ
மீல் மேக்கர் பவுடர் - 50 கிராம் (மீல் மேக்கரை நன்றாக பொடி செய்து கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- வெந்நீரில் மீல் மேக்கர் பவுடரை போட்டு 5 நிமிடம் விடவும்.
- பிறகு அதில் கோதுமை மாவையும் போட்டு, உப்பு சிறிதளவு போட்டு நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு (மென்மையாக வரும்வரை) பிசைந்து சிறிது நேரம் வைக்கவும்.
- பிறகு சப்பாதிகளாக போட்டு எடுக்கவும்.
- இது மிகவும் சுவையான சத்தான உணவு.