இந்த வார சத்குரு ஸ்பாட், பயணச்சாமான்களை எடுத்துச்செல்ல முடியாத பயணமொன்று நமக்குக் காத்திருப்பதை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. படித்து மகிழுங்கள்.

பயணமூட்டை இல்லாமல்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியங்களின் கதவுகள் இருக்கின்றன
ஆழமான உள்ளுணர்தலின் கதவுகள் இருக்கின்றன
வாய்ப்புக்களின் கதவுகளைத் திறப்பதில்
வாழ்வதற்குப் புதிய வழிகள் உங்கள் வசம்வரும்
உள்ளுணர்தலுக்கான கதவுகளைத் திறப்பதில்
படைப்பின் பிரம்மாண்டத்தை உணர்வீர்கள்
வாய்ப்புக்களின் மூலம் நீங்கள்
சொத்து, வசதி, மற்றும் அங்கீகாரத்தை சேகரிக்கலாம்
ஆனால் புரிதலின்மீது திரைபோடும் தோல்நீங்கிவிட்டால்,
படைப்பின் தன்மையும் மூலமும் அறிவீர்கள்.

வாய்ப்புக்களின் கதவுகள்
ஏதுமில்லா கீழ்மக்களின் வேதனைகளால் பெரிதாய்த்தெரியும்
சொர்ப்ப பணத்திற்காக உங்களை பாடுபடவைக்கும்
போதுமான அளவு நீங்கள் சேகரிக்கும் நேரத்தில்
மரணமெனும் பயணமூட்டையில்லா பயணத்திற்கு நேரம் வந்துவிடும்.

உள்ளுணர்தலின் கதவுகள்
உங்களுக்கு எதையும் தராது
ஆனால் உங்கள் உயிரை வளமாக்கிவிட்டு
சேகரிக்கத் தகுதியாக எதுவும் இல்லாதபடி செய்துவிடும்.

பயணமூட்டை இல்லை
வாழ்விற்கும் சாவிற்குமான பயணத்திற்குத் தயார்.

Love & Grace