டேட் நட் ரோல்

தேவையான பொருட்கள்:

பேரீச்சம்பழம் - 15

முந்திரி - 15

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மைதா - 200 கிராம்

பொடித்த சர்க்கரை - 125 கிராம்

பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்

வெண்ணெய் - 125 கிராம்

வெண்ணிலா எஸ்சன்ஸ் - 5 கிராம்

செய்முறை: பேரீச்சம்பழத்தைக் கொட்டை நீக்கி, அவ்விடத்தில் முந்திரிப் பருப்பு பாதி வெளியே தெரியும்படி பேரீச்சம்பழத்தில் வைக்கவும். பொடித்த சர்க்கரையையும் வெண்ணெயையும் மற்ற பொருட்களுடன் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பின்பு மைதாவை சிறிது சிறிதாகச் சேர்த்துப் பிசைந்து, வெண்ணெயுடன் பத்து நிமிடம் நன்றாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து கட்டை விரல் பதியும்படி அதன் நடுவில் அழுத்திக் கொள்ளவும். இந்த இடத்தில் முந்திரிப் பருப்பு ஸ்டஃப் செய்த பேரீச்சம்பழத்தை பாதி வெளியே தெரியும்படி வைத்து மாவைச் சுற்றிலும் போர்த்தவும். ஓவனில் 25 நிமிடம் வரை வைத்து எடுக்கவும். சத்தான, சுவையான டேட் நட் ரோல் தயார். மாலைச் சிற்றுண்டிக்கு ஏற்றது.