பன்னீர் பாவ்

paneer-pav

ஈஷா ருசி

பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர் என்று பன்னீர் வகையறாக்களை விரும்பி சுவைக்கும் உணவு விரும்பிகளுக்கு, இதோ புதிதாய் பன்னீர் பாவ்… சுவைத்து மகிழுங்கள்!

தேவையான பொருட்கள்

பன்னீர் – கால் கிலோ
முந்திரி – 25 கிராம்
திராட்சை – 25 கிராம்
முட்டைகோஸ் – 150 கிராம்
மிளகு – 10 கிராம்
மைதா – 150 கிராம்
வெண்ணெய் – சிறிதளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை

  • முட்டைகோஸை நறுக்கி எண்ணெய்யில் வதக்கவேண்டும்.
  • வதக்கிய முட்டைகோஸ், மிளகு, சிறிதளவு முந்திரி, உப்பு எல்லாவற்றையும் அரைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • கொதிக்கும்பொழுது அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • சிறிதளவு பன்னீரை எடுத்து உதிர்த்துக்கொள்ள வேண்டும்.
  • முந்திரி, திராட்சையை சிறிதாக உடைத்து, அதை உதிர்த்த பன்னீரில் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • மைதா மாவில் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ள வேண்டும்.
  • மீதமுள்ள பன்னீரை slice சாக ஒரே அளவாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  • ஒரு slice கீழ் வைத்து அதன் மேல் உதிர்த்த பன்னீர் கலவையை வைத்து, அதன்மேல் ஒரு பன்னீர் slice வைத்து மூடி மைதா கரைசலில் நனைத்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
  • முட்டைகோஸ் கொண்டு செய்து வைத்துள்ள கிரேவியை பொரித்த பன்னீரின் மேல் ஊற்றி சாப்பிட்டால் இனிப்பும், காரமும் கொண்ட சுவையுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.



இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert