புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மேதகு கிரண்பேடி:

கசடற கற்கும் களங்கமற்ற குழந்தைகளுடன் ஒரு நாள்

இந்த கலந்துரையாடலை இதிலுள்ள நேர்மைக்கும், களங்கமற்ற அப்பாவித்தனத்துக்காகவும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இப்படி நம் பிள்ளைகள் (8-12 வயதில்) பேச வேண்டும் என நாம் அனைவருமே ஆசைப்படுவோம், ஆனால் நிஜத்தில்..?

இந்த தூய்மையை, உண்மையை, எளிமையை, நம்பகத்தன்மையை, மதிக்கும் முறையை நான் எப்படி மதிப்பிட போகிறேன்..? நான் அவர்களிடம் "நீங்கள் ஒவ்வொருவரும் வளர்ந்து இந்த உலகில் உங்களை சுற்றி என்ன இருந்தாலும் அதை சுத்தப்படுத்துவீர்கள். உங்களை போல தான் மனித குலம் இருக்க வேண்டும்" என்றேன்.

இது புதுச்சேரி ராஜ் நிவாஸ்-ல் எனக்கும் 120க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் இடையே நடந்தது. இந்த குழந்தைகள் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோக மையத்தில் தங்கி பயிலும் சமஸ்கிருதி பள்ளியில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் தங்களது வருடாந்திர சுற்றுலாவின் ஒரு பகுதியாக ராஜ் நிவாஸ் -ஐ காண வந்திருந்தனர். அப்போது அவர்களை சந்தித்து போது தான் இந்த அரிய கலந்துரையாடல் நிகழ்ந்தது.

இதுகுறித்து நான் ஏற்கனவே எதுவும் திட்டமிடவில்லை. சட்டென தோன்றியது தான்..

இரவு உணவுக்குப் பின் குழந்தைகள் அனைவரும் தர்பார் மண்டபத்தில் வந்து அமர்ந்த பின், நானும் கலந்து கொள்ள தகவல் வந்தது. இந்த பள்ளியின் பின்புலம் பற்றி நான் அறிவேன். ஏற்கனவே ஈஷா யோக மையத்தில் இன்னர் இஞ்சினியரிங் யோக வகுப்பில் கலந்து கொள்ள சென்ற போது சமஸ்கிருதி பள்ளிக்கும் சென்று இருக்கிறேன்.

ஆனால் இப்போது அமைந்துள்ளது போல நேரமோ, தனித்து கலந்துரையாடும் வாய்ப்போ அமையவில்லை. இது வரை அரசியல்வாதிகள் அல்லது சமூகத்தில் முக்கியமானவர்களுக்காக மட்டுமே பயன்பட்டு வந்த பெருமை மிகு தர்பார் மண்டபத்தில், ஆர்வமும் எதிர்பார்ப்பும் நிறைந்த குழந்தைகளின் முகங்கள். அதுவும் விஜயதசமி தினத்தன்று சிறப்பு விருந்தினர்களாக வந்தது புதுச்சேரிக்கே மங்களகரமான நாளாக அமைந்தது.

நான் மண்டபத்தின் உள்ளே நுழைந்த போது தங்களது கரகோஷத்தை அள்ளி வழங்கினார்கள். அந்த கைதட்டலில் இருந்த உண்மையான உற்சாகமும் ஆர்வமும் என்னை ஆழமாக தொட்டது. நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். அந்த சூழ்நிலையின் அதிர்வுகளே வித்தியாசமாக இருந்தது. இவர்கள் மற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இருந்து எந்த வகையில் வித்தியாசமானவர்கள் (ஒருவேளை அப்படி இருந்தால்) என்று கேட்க வேண்டும் என்று உள்ளுக்குள் தீவிரமாக தோன்றியது. ஆசிரியர்களிடம் இதை பற்றி கேட்பதற்கு பதிலாக நேரடியாக மாணவர்களிடமே கேட்டு விட தீர்மானித்தேன். சற்று நேரம் அவர்களுக்குள் ஆச்சரியம் நிலவியது. களங்கமற்ற குறுஞ்சிரிப்புடன் அவர்களுக்குள்ளே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டனர். அன்புடனும் அக்கறையுடனும் கேட்டுக் கொண்ட பின்னர் அவர்களின் சிறு கரங்கள் உயர துவங்கின. தங்கள் ஆசிரியர்களின் அனுமதி வேண்டி அவர்கள் திரும்பி கூட பார்க்கவில்லை.

என் முதல் கேள்விக்கும் அதை தொடர்ந்த அடுத்தடுத்த கேள்விகளுக்கும் அவர்களின் பதில்கள் இங்கே:

உங்கள் வீட்டிற்கு சென்று உங்கள் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், நண்பர்களுடன் இருக்கும் போது என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

மற்ற பள்ளி மாணவர்களை விட எந்த விதத்தில் நீங்கள் வித்தியாசமானவர்கள்?

தொடர்ந்த கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் அப்படியே அவர்களின் வார்த்தைகளில்..

"நாங்க வித்தியாசமானவங்க. ஏன்னா எங்களோட கம்ப்பேர் பண்ணா, எங்க ஃப்ரெண்ட்ஸ் எப்பவுமே படிச்சுட்டே இருக்காங்க. அவங்க என்ன செய்யறாங்களோ அத எஞ்ஜாய் பண்றதில்லை."

"அவங்க ஸ்கூலுக்கு பேக் எடுத்துட்டு போகணும். நாங்க வீட்டுக்கு எந்த ஒர்க்கும் கொண்டு வர்ரதில்லை."

"அவங்க டான்ஸ் டீச்சர தேடணும். எங்களுக்கு எங்க கூடவே எப்பவுமே ஸ்கூல்லயே இருக்காங்க."

"நாங்க ஹெல்த்தியா இருக்கோம். அவங்க டாக்டர போய் பாத்துகிட்டே இருக்காங்க."

"அவங்ளுக்கு சத்தான உணவு கிடைக்கறதில்லை."

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"அவங்க களரி பயிற்சி கத்துக்கலை."

"வெளியே அவங்க கடவுள மட்டும் நமஸ்காரம் பண்றாங்க, நாங்க எல்லாத்துக்குமே பண்றோம்."

"எங்களுக்கு சமஸ்கிருதியில இருக்ற மாதிரி, திறமைய உடனே வெளிப்படுத்த அவங்களுக்கு தகுந்த வாய்ப்பு இல்ல."

"அவங்க எங்கள அடிக்கறதில்லை. ஆனா அவங்களுக்குள்ளே அடிச்சுக்கறாங்க."

"எங்கள ஒவ்வொரு வருஷமும் டூர் கூட்டிட்டு போறாங்க."

"அவங்களுக்கு (ஆசிரியர்களுக்கு) நாங்க அப்படியே மனப்பாடம் பண்றத விட, ஏன் எதுக்குன்னு புரிஞ்சு படிக்கனும்னு கத்து தராங்க."

"இங்கே எல்லாருக்கும் மரியாதை தர்ரோம். நாங்க மென்மையா அன்பா பேசறோம்."

"சத்குருகிட்ட இருந்து நாங்க ஆசிர்வாதம் வாங்குவோம். மத்தவங்க வாங்கல."

"நல்ல ஸ்கூல்ல அப்பா அம்மா என்ன சேர்த்திருக்காங்க."

"எங்க ஸ்கூல் பக்கத்திலயே ஃபாரஸ்ட் இருக்கு. மத்தவங்களுக்கு இல்ல."

"லைப்ரரில ஃபேன் பக்கத்தை திருப்புது. எனக்கு அது டிஸ்டர்பா இருக்கு."

"இங்கே நாங்க இயற்கைய நேசிக்கறோம். வெளிய இத யாரும் பாக்கறது கூட இல்ல."

"எங்களுக்கு டெஸ்ட் இருக்கு, ஆனா எக்ஸாம் இல்ல."

நான் கேட்டேன்...

'டெஸ்ட்-க்கும்' 'எக்ஸாம்-க்கும்' என்ன வித்தியாசம்?

ஒரு குழந்தை "டெஸ்ட் ஈசி எக்ஸாம் கஷ்டம்" என்றது.

நான் கேட்டேன்..

ஈசி-னா என்ன. ? கஷ்டம் னா என்ன?

"எங்களுக்கு என்ன தெரியுமோ அது ஈசி, தெரியாதது கஷ்டம்."

உங்களுக்கு என்ன தெரியாது?

"நாங்க படிக்காதது எங்களுக்கு தெரியாது."

நீங்க படிக்காதது எது?

"பெரிய புத்தகங்கள்.. எங்க லெவலுக்கு மேல, கஷ்டமான வார்த்தைகளோட இருக்கறது."

நான் கேட்டேன் உங்கள்ள ஒருத்தர் ஏதாவது தப்பு பண்ணினா என்ன நடக்கும்.?

"நாங்க ஏதாவது தப்பு பண்ணா தண்டனை கிடைக்கும். நாங்க சென்டன்ஸ் எழுதனும்."

இந்த தூய்மையை, உண்மையை, எளிமையை, நம்பகத்தன்மையை, மதிக்கும் முறையை நான் எப்படி மதிப்பிட போகிறேன்..?

நான் அவர்களிடம் "நீங்கள் ஒவ்வொருவரும் வளர்ந்து இந்த உலகில் உங்களை சுற்றி என்ன இருந்தாலும் அதை சுத்தப்படுத்துவீர்கள். உங்களை போல தான் மனித குலம் இருக்க வேண்டும்" என்றேன்.

நான் அவர்களை பற்றி எடுத்த முடிவின் ஆழம் நிச்சயம் அவர்களுக்கு புரிந்திருக்காது. அவர்கள் பேசுவதை கவனித்து, இயல்பாக தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதை பார்த்து, என்னை போலவே இன்ப அதிர்ச்சியில் அமர்ந்திருந்த, அங்கு பார்வையாளர்களாக வந்திருந்த பெரியவர்களுக்காகவே இதை சொன்னேன்.

தங்கி பயிலும் பள்ளி என்றால் இப்படியும், இன்னும் சிறப்பாகவும் அல்லவா இருக்க வேண்டும். நாம் காண விரும்பும் உண்மையான கற்றல் என்பது இது தான். ஆனால், நாம் எப்படி இதை செய்வது, நமது பெற்றோரும் குழந்தைகளும் இதை விரும்புவார்களா என்று தயங்கி கொண்டு இருக்கிறோம்.

சமஸ்கிருதி பள்ளியில் படிக்கும் இந்த குழந்தைகள் பிறக்கும் போதே இதற்கான புண்ணியம் செய்தவர்களோ...
அல்லது புண்ணியம் செய்கிறார்களா..

இதை சத்குருவிடம் தான் கேட்க வேண்டும்.