பல பிறவிகள் கடந்தோடிவிட்டன…

தன் வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறிய விதத்தை, சத்குரு அவர்கள் இந்த வார சத்குரு ஸ்பாட்டில், இதயம் இளகும் கவிதையாய் இழைத்துள்ளார் …

பல பிறவிகள் கடந்தோடிவிட்டன…

அவர் விருப்பமும் என் நோக்கமும்
இடையறா முயற்சியாய் இரும்பென இறுகியது.
உலகம் அறிந்தவர்களும்,
அறியாமையில் இருப்பவர்களும்,
அமைத்துக் காத்துவந்த
தடைகளும் பொறிகளும்,
இந்த உறுதியால் உடைந்தது.

நோக்கம் நிறைவேறும் நிறைவை அறிந்தது,
குளிர்ந்த ஒளியை ஒளிர்ந்திடும் நிலவு,
என் இதயத்தில் பொதிந்து
பிரகாசிப்பது போன்றது.

உயிரின் பிரவாகம் மென்மையால்
எனை நடுநடுங்க வைக்கிறது.
நினைவுகளும் எண்ணங்களும்
கண்ணீர் பெருக்கில் ஆழ்த்துகிறது.

நீங்கள் இத்தனை பேர்,
உங்கள் போராட்டங்கள்,
உங்கள் சந்தோஷம், உங்கள் நேசம்,
உங்கள் உறுதி, உங்கள் பக்தி.
எல்லாவற்றிற்கும் மேலாக,
அறிந்துகொள்ளும் ஏக்கம்.
மிதமிஞ்சிய மென்மையால் நான் இறந்திடக்கூடும்,
எனினும் இதற்கென உயிர்வாழ்வேன்.

பல பிறவிகள் கடந்தோடிவிட்டன…

அன்பும் அருளும்,
சத்குரு
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert