பைத்தியத்துக்கு வைத்தியம் ஆன்மீகத்தில் உண்டா?

பைத்தியக்காரத்தனத்திற்கு ஆன்மீகத்தில் தரப்படுகிற சிகிச்சை மிகவும் வித்தியாசமானது. யாராவது உள்ளபடியே பைத்தியமாகிவிட்டால் அவரை ஒரு ஆசிரமத்திற்கோ, ஒரு குருவிடமோ அழைத்துச் செல்வார்கள். இப்படி ஒரு மனிதர் குடும்பத்துள்ளேயிருந்தால் அவர்கள் குடும்பத்தினர் எல்லா உதவிகளையும் அவர்களுக்குச் செய்கிறார்கள். அவரை நீங்கள் மருத்துவமனைக்கு கொண்டு போனால் அங்கேயும் உதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். அவரை ஒரு புத்த ஆசிரமத்திற்கு கொண்டு போனால் அவரை யாரும் கண்டுகொள்ளக் கூட மாட்டார்கள், முழுக்க விட்டுவிடுவார்கள். அவர் கத்துவார், கற்களை வீசுவார், யாரும் எதுவும் செய்வதில்லை.

அவரவர், அவரவர் வேலைகளைப் பார்ப்பார்கள். அந்த பைத்தியக்காரத்தனத்திற்கு எதிர் வினையாற்றுவது இல்லை. சில நாட்களிலேயே இவர் அமைதியாகி விடுகிறார். ஏனென்றால் மற்றவர்கள் பார்க்கவில்லையென்றால் அந்த பைத்தியக்காரத்தன்மை வளர்ந்துகொண்டே போகாது.

பைத்தியக்காரத்தனம் என்பது அகங்காரத்தின் ஏற்றத்தாழ்வுதான். மின்சாரத்திற்கு ஏற்றத்தாழ்வு நிலை வருகிறபோது அது ஒரே வேகத்தில் பாய்கிறது. மிக வேகமாகப் பாய்கிறது. அதுபோல் பைத்தியக்காரத்தனமும், உங்கள் அகங்காரம் தன்னை அதீதமாக வெளிப்படுத்துவதால்தான். எனவே அந்த மனிதரைப் புறக்கணித்து விடுங்கள். அவரை ஒரு மூலையில் இருக்க விட்டுவிட்டு அவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். உணவுக்குக் கூட அவர்களை அழைக்காதீர்கள். அவருக்கு உள்ளபடியே பசித்தால் அவர் வந்து சாப்பிடுவார். தன்னுடைய பைத்தியக்காரத்தனத்தை சரிசெய்து கொண்டு அவர் குணமடைவார். சூழ்நிலை சரியாக இருக்கின்றது என்றால், சக்திநிலை சரியாக இருக்கிறது என்றால், அவரே மெல்ல மெல்ல குணமாவார். அவரே வந்து "எனக்கு தியானம் சொல்லித்தாருங்கள்" என்று கேட்பார். அந்த பைத்தியக்காரத்தனம் தானாகவே மறைந்துவிடும். உங்கள் பைத்தியக்காரத்தனத்திற்கு கூட அதிக முக்கியத்துவம் தராதீர்கள். அப்படித் தரக்கூடாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.